baakiyalakshmi-today-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் பாக்யா இன்னொரு இடத்தில் கேன்டீன் கான்ட்ராக்ட் எடுக்க போன விஷயத்தை சொல்லி அதை தடுத்து நிறுத்தியதையும் சொல்லி சந்தோஷப்படுகிறார்.
ராதிகா இவங்க வேற என்னமோ பிளான் பண்றாங்க, நமக்கு சம்பந்தப்பட்ட இடத்தை தேடி தேடி போறாங்க என கோபப்படுகிறார். கோபி இனிமே அவளால எங்கேயும் கேன்டீன் காண்ட்ராக்ட் எடுக்க முடியாது திரும்பவும் பழையபடி மிளகாய் பொடி, இட்லி பொடி போட வேண்டியதுதான் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.
அடுத்து ஜெனி வீட்டுக்கு வர எல்லோரும் ஆரத்தி எடுத்து வரவேற்று சந்தோஷமாக பேசிக் கொள்கின்றனர். ஈஸ்வரி இந்த வீட்டுக்கு முதல் வாரிசை பெத்து கொடுத்திருக்க ரொம்ப சந்தோஷம் என்று சொல்ல எழில், அமிர்தா முகம் மாறுகிறது. உடனே பாக்கியா அதான் ஏற்கனவே நிலா பாப்பா இருக்காளே அத்தை என சொல்லி நிலைமையை மாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து ஜெனி மற்றும் செழியன் ரூமுக்குள் பேசிக் கொண்டிருக்க அப்போது பாக்கியா பால் எடுத்து வந்து கொடுத்துவிட்டு ஜெனியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது மாலினி தொடர்ந்து செழியனுக்கு போன் செய்கிறார். பிரண்டு என்று சொல்லி சமாளிக்கும் செழியன் பிறகு தனியாக வந்து மாலினியிடம் பேசும்போது நான் உன்னை மீட் பண்ணனும் என சொல்ல மாலினி வீட்டுக்கு வாங்க என கூப்பிட வேண்டாம் நம்ம வழக்கமாக சந்திக்கிற ரெஸ்டாரன்ட் வா என்று சொல்லி போனை வைக்கிறார்.
பிறகு இருவரும் ரெஸ்டாரண்டில் சந்திக்கும் போது செழியன் எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கலாம் என்று சொல்ல மாலினி அதிர்ச்சி அடைகிறார். அப்படியெல்லாம் என்னால விட முடியாது செழியன் நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும் என்று சொல்ல அதுதான் எப்படி? என்ன மீனிங்ல சொல்ற என்று கேள்வி கேட்க நாம வேணா கல்யாணம் பண்ணிக்கலாமா என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார் மாலினி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…