குடும்பத்தார் சொன்ன விஷயம், ஏற்றுக்கொள்வாரா பாக்யா? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் பாக்கியாவிடம் நீ இப்படி வீட்ல இருந்து எவ்வளவு நாளாச்சும்மா இப்படி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு ரெஸ்டாரண்ட்ல நீ கஷ்டப்பட்டதெல்லாம் போதுமா இனிமே நீ வீட்டிலேயே இரு என்று சொல்லுகிறார். உடனே பாக்யா அப்போ வீட்ல இருக்கிற செலவெல்லாம் யார் பார்த்துக்குறது என்று கேட்க நான் பார்த்துக்கிறேன் அம்மா மூத்த பிள்ளையா இருந்து இந்த வீட்டை நான் வழி நடத்துவேன் என்று சொல்ல அதற்கு எழில் நீ மட்டும் தான் பண்ணுவியா அப்ப நான் என்ன பண்ணுவேன் நானும்தான் இந்த வீட்டை பார்த்துப்பேன் என்று சொல்லி நாங்க பார்த்துக்கிறோம் நீங்க ரெஸ்ட் எடுங்க எதுவும் செய்ய வேண்டாம் என்று எழில் சொல்லுகிறார்.

உடனே ஈஸ்வரியும் இது மாதிரி பசங்க யாருக்கு கிடைப்பாங்க இதுவரைக்கும் கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு இருந்த ஆனா இதுக்கு மேல வீட்டை பத்தரமா பாரு சரியா சமைச்சு போட்டமா கோவில் குளத்துக்கு போனமா இரு பாக்கியா என்று சொல்ல உடனே சரியென சொல்லி விடுகிறார் இதனால் அதிர்ச்சடைந்த ஈஸ்வரி என்ன பாக்கிய டக்குனு சரின்னு சொல்லிட்ட அப்படி சொல்லக்கூடிய ஆள் இல்லையே நீ என்று கேட்க சரினு சொல்லக்கூடாது இல்லைன்னு சொல்லக்கூடாதா என்று கேட்கிறார். நீ இப்படி இருந்தா எங்களுக்கு சந்தோஷம்தான் என சொல்லி அனைவரும் சாப்பிடுகின்றனர்.

மறுபக்கம் பாக்கியா வாக்கிங் போகும் இடத்தில் அனைவரும் ரெஸ்டாரன்ட் பற்றி கேட்க மூனாவதாக ஒருவர் வந்து என்ன மேடம் எல்லாத்தையும் கேள்விப்பட்ட ரெஸ்டாரன்ட் எல்லாத்தையும் வித்துட்டீங்களாமே அதுக்கு தான் ஒரு பழமொழி சொல்லுவாங்க ஊர் குருவி பருந்தாகாதுன்னு என்றெல்லாம் டயலாக் பேசுகிறார். புரிஞ்சிகிட்டேன் பிசினஸ் எவ்வளவு கஷ்டம் ஒன்னும் புரிஞ்சுகிட்டன் மனஷாலுங்க எப்படின்னு புரிஞ்சுகிட்டேன் உங்க அட்வைஸ்க்கு ரொம்ப தேங்க்ஸ் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் ரூமில் பாக்கியா நியூஸ் பேப்பரில் ஃபோட்டோ எடுத்துவிட்டு செல்வியிடம் போன் பண்ணி இன்னைக்கு நம்ம ஒரு இடத்துக்கு போகணும் வரியா என்று கேட்க எந்த இடம் என்று கேட்கிறார் வரியா இல்லையான்னு மட்டும் சொல்லு என்று சொல்ல வரேன்கா என்று சொல்ல வீட்டுக்கு வந்துடு என்று சொல்கிறார்.உங்க வீட்டுக்கு வரல தெருவுல நினைக்கிறேன். நீ வந்து கூட்டிட்டு போ என்று சொல்லி ஃபோனை வைக்க கொஞ்ச நேரத்தில் பாக்யா கீழே இறங்கி வந்த சாமி கும்பிட்டு விட்டு அமிர்தாவிடம் எல்லாருக்கும் சமைத்து வச்சிருக்கேன் சாப்பாடு அத்தைக்கு கொடுத்தது என சொல்லி விட்டு கிளம்ப ஈஸ்வரி எங்க போற பாக்யா என்று கேட்கிறார் ஒரு விஷயமாக வெளியே போறேன் என்று சொல்ல என்ன விஷயம் என்று சொல்லு என கட்டாயப்படுத்துகிறார் நான் போயிட்டு வந்து சொல்றேன் அத்தை என்று சொல்லியும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்க கோபி அதுதான் எதுவும் முக்கியமான விஷயம்னு சொல்ற இல்லமா போயிட்டு வரட்டும் விடுங்க வந்து சொல்றேன்னு சொல்லி இருக்கால என்று கேட்கிறார்.

இவை எங்கேயாவது கோயிலுக்கோ இல்ல எங்கயாவது வெளியே போனா பரவால்ல இவன் எந்த பிரச்சினையும் எப்ப இழுத்துட்டு வருவானே தெரியல என்று ஈஸ்வரி புலம்ப, பாக்கியா செல்வியை அழைத்துக்கொண்டு ரெஸ்டாரண்டை பார்க்கச் செல்கிறார். பாக்கியா ரெஸ்டாரன்ட் பார்க்க என்ன நடக்கிறது? அவர்கள் என்ன சொல்லுகின்றன? பாக்கியாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

மதராசி : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!

மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

4 hours ago

அஜித் குமார் குறித்து பேசிய பிரபல நடிகை.என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!

எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

4 hours ago

ரோபோ ஷங்கருக்கு என்ன ஆச்சு?வெளியான ஷாக் தகவல்.!!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…

4 hours ago

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்ற முத்து, கண் கலங்கிய அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…

6 hours ago

வீட்டுக்கு வந்த சாமியார், நந்தினியின் உடல் நிலை என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

6 hours ago

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

21 hours ago