baakiyalakshmi-serial-in episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து என் குடும்பத்தை எல்லோரும் தரக்குறைவாக பேச பாண்டியன் அங்கு வர அவரிடம் நீயே சொல்லுப்பா என்று உறவினர்கள் முறையிட அவங்களே பொண்ணை காணோம்னு பதறிப் போய் இருக்காங்க இப்படி மனசாட்சி இல்லாம பேசாதீங்க உங்க வீட்டிலயும் பொண்ணு இருக்கு என் வீட்லயும் பொண்ணு இருக்கு என்று ஆறுதலாக பேசுகிறார்.
கண்ணனுடன் ஹோட்டலுக்கு வந்த ராஜி போனை ஆன் செய்து அம்மா அனுப்பிய வாய்ஸ் மெசேஜை பார்த்து போன் பண்ண முயற்சி செய்ய கண்ணன் அதைப் பார்த்து போனை தூக்கி போட்டு உடைக்கிறார். எல்லாம் ரெண்டு நாளைக்கு தான் கொஞ்சம் பொறுத்துக்க கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னா நானே உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறார்.
அதன் பிறகு ராஜி பாத்ரூம் போன நேரத்தில் அவளது பேக்கில் இருந்து நகைகள் அனைத்தையும் தனது பேக்கில் எடுத்து வைக்கிறான் கண்ணன். ராஜி வெளியே வந்ததும் சாப்பிட கூப்பிட எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்ல நீ சாப்பிட்டா சாப்பிட்டு சாப்பிட்டா கட்டி போய் என திட்டுகிறார்.
இன்னொரு பக்கம் கோமதி உதவியால் பாக்கியாவின் சமையல் வேலைகள் ஜோராக நடந்து கொண்டிருக்க மேனேஜர் வந்து மாநாட்டுக்கு இன்னும் 200 பேர் அதிகமா வராங்க அவங்களுக்கும் சேர்த்து சமைச்சுருங்க என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். பாக்கியா திடீர்னு சொன்னா எப்படி என்ன செய்வது என யோசிக்க கோமதி சப்பாத்தி செஞ்சு ஒரு குருமா வச்சிடலாம் எல்லாரும் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டா சாப்பாட்டை கம்மியாக சாப்பிடுவாங்க என ஐடியா கொடுக்க பாக்யாவும் நல்லா ஐடியா என அதற்கு தயாராகிறார்.
கண்ணன் சாப்பிட்டு வரேன் என்று நகைகளை எடுத்துக் கொண்டு ராஜியை ரூமுக்குள் விட்டுவிட்டு வெளியே வர எதிரே வரும் எழில் மீது மோத எழில் பார்த்து வாங்க என்று சொல்ல கண்ணன் அப்படி தான்டா வருவேன் என்ன பண்ணுவ என சண்டைக்கு போகிறார். சத்தம் கேட்டு ராஜி வெளியே வர எழில் பெண்ணோட வந்திருப்பதால் சண்டை வேண்டாம் என அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.
இங்கு சக்திவேலின் மகன் எல்லா இடத்திலும் தேடி வந்து விட்டு ராஜி ஓடிப்போனது உண்மைதான் என்று சொல்ல அப்பத்தா பாட்டி அழுது புலம்புகிறார். எல்லாரும் கல்யாணம் நடக்குமா? நடக்காதா என்று கேட்கிறார்கள் என்று சொல்ல எல்லாருக்கும் நானே பதில் சொல்றேன் என முத்துவேல் வெளியே எழுந்து வர ஊர்காரர்கள் கல்யாணம் நடக்குமா நடக்காதா என வாக்குவாதம் செய்ய மாப்பிள்ளை வீட்டார் வந்து இதுதான் பொண்ணு வளக்குற லட்சணமா என்று முத்துவேல் சக்திவேல் குடும்பத்தை அவமானப்படுத்தி சாபம் விட்டு கிளம்பி செல்கின்றனர். முத்துவேல் இனிமேல் இந்த கல்யாணம் நடக்காது என் பொண்ணு ஓடிப் போயிட்டா என்ன கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Athu Thalore Video Song | Suriya's Karuppu | RJ Balaji | SaiAbhyankkar | Dream Warrior…
Goindhamma Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
The Life Lyric Video | Arjun | Ravi Basrur | Vaikom Vijayalakshmi | Subash K…
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று…
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தாமதங்களுக்கு…
சமூகப் பார்வையும் யதார்த்தமான கதைக்களங்களும் கொண்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ்,…