பாக்கியா விடம் கண்கலங்கி எழிலை கோர்த்து விட்ட கோபி.. ஈஸ்வரி எடுக்கப்போகும் முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த பிறகு பாக்கியா உட்பட எல்லோரும் எழில் படத்தை பாராட்டுகின்றனர். ஆனால் இந்த நேரத்தில் அவர் வந்து என் கூட இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது என பாக்கியா சொல்ல ஈஸ்வரியும் அப்படி என்ன பெரிய வேலை அவன் இதுக்கு வந்திருக்கணும் பெரிய தப்பு பண்ணிட்டான் அவனை சும்மா விட போவதில்லை என கூறுகிறார்.

பிறகு இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபி வர ஈஸ்வரி ஏன் இவ்வளவு லேட்டு என கேட்க ஆபீஸ்ல கொஞ்சம் வேலை நான் சாப்பிட்டு விட்டேன் என சொல்கிறார். சரிங்க வா என அழைத்து நீ என்னோட படத்தை பார்க்க வந்து இருக்கணும்ல, அவனுக்கு எவ்வளவு முக்கியமான நாள் ஏன் வரல என கேட்கிறார். ப்ரிவியூ ஷோ இருக்குனு சொன்னதும் நானும் சந்தோசப்பட்டேன். அவனுக்கு வாழ்த்து சொல்வதற்கு அவன் எனக்கு புடிச்சவங்க எல்லோரும் வராங்க தயவுசெய்து நீங்க வராதீங்க என்று சொல்லிவிட்டு பிறகு நான் எப்படி இங்கே வர முடியும் என கூறுகிறார். கோபி சொன்னதைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். என் பையன் படம் பண்றேன்னு சொன்ன என் பிரெண்ட் கிட்டே அவ்வளவு பெருமையா சொன்னேன் ஆனா எனக்கு படத்தை பார்க்க வாய்ப்புக் கொடுக்கல, அவள் அப்படி சொன்னதும் எனக்கு எவ்வளவு கஷ்டமா வருத்தமாக இருந்தது தெரியுமா என வருத்தப்படுகிறார்.

பிறகு பாக்கியா எழிலை திட்டுகிறார். எதுக்கு அப்படி சொன்ன சொல்லு என்று கேட்க எழில் பதில் சொல்லாமல் அப்படியே நிற்கிறார். பிறகு கோபி மேலே சென்றதும் ஈஸ்வரியிடம் நீ பண்ணினது ரொம்ப பெரிய தப்பு என திட்டுகிறார். அவள் எவ்வளவு வருத்தப்பட்டு விட்டுப் போகிறான் பாரு என சொல்கிறார். பிறகு எனில் அவருடைய தாத்தாவை விருந்துக்கு அழைத்துச் செல்ல ஈஸ்வரி வேண்டாம் நானே பாத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு கணவரை கூட்டிக் கொண்டு ரூமிற்கு செல்கிறார். மற்றவர்கள் எல்லோரும் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட பாக்கியா என்கிட்ட பேசாதே என கோபமாக சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.

அதன் பின்னர் எழிலுக்கு அமிர்தா போன் செய்கிறார். படத்தைப் பற்றி பேச எழில் அமுதாவிடம் கடைசி வரைக்கும் நீங்களும் நிலா பாப்பாவும் என் கூட இருக்கணும் என சொல்ல அமிர்தா பதில் சொல்ல முடியாமல் சரி நான் வைக்கிறேன் என போனை வைத்து விடுகிறார்.

அதன் பின்னர் பாக்கியா ரூமுக்கு சென்று வெளியில் தெரியாமல் அப்படி பண்ணிட்டேன் அவனை மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார். கோபி என்று சொன்ன வார்த்தையால் மனவருத்தத்தோடு பாக்கியாவிடம் பேசி கண் கலங்குகிறார். எழில் சினிமா எடுக்க போறேன்னு சொன்ன போது பயந்தேன். ஏன் அவனை அடிக்க கூட செய்தேன். ஆனா அவன் அதுல உறுதியாக இருந்த போது நான் எதுவும் சொல்லல. அவன் ஜெயித்தா சந்தோஷப்படுற ஆள் நானாத்தான் இருப்பேன். ப்ரிவியூ ஷோக்கு என்னை வர வேணாம்னு சொல்லிட்டான் ஆனால் அவன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதும் போய் பார்ப்பேன் அப்போ அவன் எதுவும் சொல்ல முடியாது என கூறுகிறார். அவனுக்கு என்ன புடிக்கவே இல்லை என சொல்ல அப்படி எல்லாம் இல்ல அவனுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என பாக்கியா சொல்கிறார். இல்ல அவனுக்கு என்ன பிடிக்கல என கோபி சொல்லி கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் பாக்கியா கோபியிடம் சென்று மன்னிப்பு கேட்குமாறு எழிலிடம் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார். ‌

Baakiyalakshmi Serial Episode Update
jothika lakshu

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

4 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

4 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

4 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

5 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

6 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

11 hours ago