Baakiyalakshmi Serial Episode Update 29.06.23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அத்தை மாமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வீட்டில் உள்ள அமிர்தா மற்றும் ஜெனி ஆகியோரிடம் வீட்டை பத்திரமா பாத்துக்கங்க என்று சொல்லி கிளம்ப ஏழில் நீ சமைக்கிற வேலையை மட்டும் பாருமா மூணு நாள் தானே எங்களை நாங்க பாத்துக்குறோம் என சொல்லி வழி அனுப்பி வைக்கிறார்.
அதன் பிறகு பாக்யா, செல்வி என எல்லோரும் பாண்டிச்சேரி ஹோட்டலில் வந்து இறங்குகின்றனர். செல்வி பெரிய ஹோட்டலை பார்த்து ஆச்சரியப்பட்டு நிற்கிறார். பிறகு பழனிச்சாமிக்கு போன் செய்து வந்து விட்டோம் என்ற விஷயத்தை சொல்ல அவர் நானும் வந்துகிட்டே இருக்கேன், மேனேஜர் கிட்ட சொல்லி இருக்கேன் அவர் உங்களை கூட்டிட்டு போய் தங்க வைப்பார் என சொல்ல கொஞ்ச நேரத்தில் மேனேஜர் வந்து பாக்யா மற்றும் டீமை அழைத்துச் சென்று தங்க வைக்கிறார்.
பிறகு பழனிச்சாமி வந்து இறங்க அவருடைய நண்பர் சுதாகர் அவரை வரவேற்று சந்தோஷப்பட குடும்பத்தார் எல்லோரும் பழனிச்சாமியிடம் நலம் விசாரிக்கின்றனர். பிறகு பாக்யாவும் செல்வியும் வந்து பழனிச்சாமியை சந்திக்க அவர் இருவரையும் நலம் விசாரித்து விட்டு சுதாகரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த இவர்களை பார்த்த சுதாகர் இவங்க சமைச்சிடுவாங்களா என சந்தேகப்படுகிறார்.
சுதாகரின் மனைவி பெரிய லிஸ்ட் எடுத்து கொடுத்து இதெல்லாம் இன்னிக்கு சமைக்கணும் என சொல்கிறார். பிறகு சுதாகரும் சுதாகர் மனைவியும் இவங்களை பார்த்தா சந்தேகமா இருக்கு, சமைத்து விடுவார்கள் என கேட்க பழனிச்சாமி அது பற்றி கவலைப்படாதீங்க பிரமாதமா சமைப்பாங்க என்று சப்போர்ட் செய்கிறார்.
அதன் பிறகு பாக்யா தன்னுடைய டீமை பிரித்து யார் யாருக்கு என்னென்ன வேலை என்பதை கொடுக்கிறார். மறுபக்கம் கோபியும் ராதிகாவும் காரில் இளையராஜா பாட்டு கேட்டுக் கொண்டு சந்தோஷமாக கல்யாண மண்டபத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…