BaakiyaLakshmi Serial Episode Update 29-04-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் எழில் அவர்கிட்ட நான் பேசிட்டேன் ரெஸ்டாரன்ட் வெலைக்கு வாங்குவது அந்த கூட நம்ம வாங்கிக்கலாம்னு பேசினேன் அது ஆல்ரெடி ஒரு அட்வான்ஸ் வாங்கிட்டு தான் சொல்றாரு என்று சொல்ல உடனே ஈஸ்வரி ஏற்கனவே வாங்குன ரெஸ்டாரன்ட் காண லோன் கட்ட முடியல இப்ப இது வேறயா என்று கேட்டு விட்டு போனால் போகட்டும் வீட்டிலேயே இதுக்கு மேல இரு பாக்யா பேரன் பேத்திகளை பாரு அவங்களுக்கு சமைச்சு கொடு சும்மா இருக்கிற டைம்ல கோயிலுக்கு போயிட்டு வா வீட்டில இரு போதும் நீ ரொம்ப உழைச்சுட்ட என்று சொல்லுகிறார் கடவுளா பார்த்து உனக்கு ரெஸ்ட் கொடுத்து இருக்காரு என்று சொல்லி வெறுப்பேத்துகிறார் இதுமட்டும் இல்லாமல் என்னதான் எண்ணெய் தேச்சுக்கிட்டு இருந்தாலும் மண்ணுல ஓட்றது தான் ஒட்டும் என்று சொல்லிவிட்டு சென்று விட டென்ஷனான பாக்கிய தயவுசெய்து என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க என்று சொல்லிவிட அனைவரும் சென்று விடுகின்றனர்.
மறுநாள் காலையில் பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி என்னாச்சு அக்கா இன்னையோட லாஸ்ட் நாள் என்ன பண்றது என்று கேட்க நான் போன் பண்ண அவர் எடுக்கல எப்படியாவது கைல கால்ல விழுந்தாவது பேசணும் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ரெஸ்டாரன்ட் ஓனர் வருகிறார் அவர் வந்து பாக்யாவிடம் இன்னைக்கு தான் கடைசி நாள் நீங்க இன்னைக்கு நைட்டு ஓட எல்லாத்தையும் காலி பண்ணுங்க என்று சொல்ல, நாங்க இந்த வாரத்துக்கான காய்கறி எல்லாம் வாங்கி வச்சுட்டோம் என்று சொன்ன அதுக்கான பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லுகிறார். ஏன் சரி இப்படி பேசுறீங்க நீங்க கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நடந்துக்குறீங்க என்று சொல்ல மனசாட்சி இருக்குறதுனால தான் கம்மி வாடகைக்கு விட்டிருந்தேன். மனசாட்சி இருக்கிறதுனால தான் வாடகை ஏத்தாம இருந்தேன் இப்போ கடன் காரங்க என்னை தொல்லை பண்ணும் போது நான் என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார்.
இது மட்டும் இல்லாமல் பாக்யா இங்க வேலை செய்றவங்களோட நிலைமை என்ன ஆகும் என்றெல்லாம் பேச ஆனால் ஓனர் அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க காலி பண்ணியே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட பாக்யா சரி நான் வெளியே போய் ஏதாவது பேச முடியுதான்னு பார்க்கிறேன் என சொல்லி வெளியில் வர அவர் சுதாகரிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். உடனே சுதாகரிடம் சென்ற இதெல்லாம் உங்க வேலை தானா இதுக்கு பின்னாடி நீங்க தான் இருக்கீங்களா என்று கேட்க சுதாகர் நீங்க ரொம்ப ஷார்ப் சம்மந்தி ஆனால் இவ்வளவு ஷார்ப்பா இருந்துகிட்டு எல்லாத்தையும் எப்படி தோக்குறீங்க பிசினஸுக்கு பொறுமை ரொம்ப முக்கியம். ஆனா உங்களுக்கு அது இல்ல நீங்க ஓவரா பேசி என்னோட தன்மானத்தை தூண்டி விட்டுட்டீங்க என்றெல்லாம் பேசிவிட்டு அங்கிருந்து செல்ல பாக்யா கோபமாகிறார். மறுபக்கம் கோபி ஈஸ்வரி இடம் இனியாவோட கல்யாணத்துக்கு வந்தது எப்பம்மா வீட்டுக்கு போக போறோம் என்று சொல்ல வரேன் டா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு புடிக்கலையா வர விருப்பம் இல்லையா சொல்லுங்க நான் வேணா வேற வீடு பார்க்கிறேன் என்று சொல்ல வேணாம் கோபி அங்க போனா நீ வேலைக்கு போயிட்டு வர மட்டும் தனியா இருப்ப ஆனா இங்க அப்படி இல்ல யாராவது ஒருத்தர் கூட இருப்பாங்க அதனால ஒரு நாலஞ்சு நாள் போகட்டும் நானே வரேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்யா வேக வேகமாக வீட்டுக்குள் வருகிறார்.
வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு நிற்க வைத்து இன்னையோட என்னோட ரெஸ்டாரன்ட் என் கையை விட்டு போயிடும் வந்து சொல்ல அதுதான் தெரியுமே எல்லாம் காலி பண்ணிட்டியா என்ற ஈஸ்வரி கேட்கிறார் உடனே அதை யார் வாங்கி இருக்காங்க தெரியுமா என்று சொல்ல இனியவோட மாமனார் தான் எல்லாத்தையும் பண்ணி இருக்காரு என்று பாக்கியா சொன்னவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் வழக்கம் போல் செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் அப்படியெல்லாம் இருக்காது நீ விசாரிக்காம எதுவும் சொல்லாதே என்று சொல்ல நான் அவர் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்த பார்த்தேன் என்று சொல்லியும் ஈஸ்வரி தெரிஞ்சவங்களா இருப்போம் பார்த்திருப்பாங்க பேசி இருப்பாங்க என்று சொல்லுகிறார். உடனே பாக்யா சுதாகர் என்கிட்ட பேசினாரு அவர் வாங்கின விஷயத்தை என்கிட்ட சொல்லிட்டாரு என்று சொல்ல அப்பொழுதும் யாரும் பாக்கியாவை நம்பாமல் இருப்பதால் நீங்க யாரும் எனக்கு நம்பத் தேவையில்லை நான் ஆதாரத்தோடு நிரூபிச்சாலும் நீங்க என்னை நம்ப போறது கிடையாது ஆனா இதுக்கு அப்புறம் இனியாவ பகட காய வச்சு ஏதாவது பண்ணனும் நினைச்சாருன்னா வேற ஒரு பாக்கியவ பாப்பாரு அவர் மட்டும் இல்ல நீங்களும் தான் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மேலே சென்று இனியாவிற்கு ஃபோன் போட்டு வழக்கம் போல் எப்படி இருக்கிற இனியா உன் மாமனார் மாமியார் எப்படி நடந்துக்குறாங்க உன் ஹஸ்பண்ட் எப்படி நடந்துக்குறாங்க என்று கேட்க என்னம்மா எப்ப பார்த்தாலும் இதையே கேட்டுகிட்டு இருக்க என்று கேட்கிறார்.ஏதாவது பிரச்சனையாமா என்று சொல்ல பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை இனியா அக்கறையால் தான் கேட்கிறேன் என்று பாக்கிய சொல்ல இது அக்கறையில் கேட்கிற மாதிரி இல்லமா பயத்துல கேட்கிற மாதிரி இருக்கு என்று சொல்ல அந்த நேரம் பார்த்து நித்திஷ் வந்துவிடுகிறார் உடனே வாங்கி பாக்யாவிடம் நிதிஷ் பேச இப்ப நாங்க ஷாப்பிங் போகப்போற ஆன்ட்டி உங்களுக்கு ஏதாவது தேவையா சொல்லுங்க வாங்கிட்டு வரோம் என்று சொல்ல எனக்கு எதுவும் வேணாம்பா என்று சொல்லுகிறார் அப்படி எல்லாம் சொல்லாதீங்க ஆண்டி நாங்களே பார்த்து உங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கிட்டு வருவோம் என்று சொல்லி இனியாவிடம் போனை கொடுக்க பாக்யா ஒரு நிமிஷம்பா என்று சொல்லி நித்திஷிடம் பேச, நான் இனியாவ கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிறேன் என சொல்லி போனை இனியாவிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட பாக்யாவும் வேறு எதுவும் இல்லை வைத்து விடுகிறேன் என்று சொல்லி ஃபோனை கட் பண்ணுகிறார்.
மறுபக்கம் எழில் ரெஸ்டாரன்ட் ஓனரை நேரில் சந்தித்து பேசுகிறார். எழில் என்ன பேசுகிறார்? அதற்கு அவர் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…