Baakiyalakshmi Serial Episode Update 29.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் அமிர்தாவின் வீட்டில் இந்த ஜென்மத்துல உங்களைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நான் நினைத்துப் பார்க்க மாட்டேன் என கூறுகிறார். ஜானு உங்ககிட்ட என்ன சொன்னாரோ அதை என்கிட்டயும் சொன்னா, அதனாலதான் உங்க கிட்ட எனக்கு இது சொல்லனும்னு தோணுச்சு. என்னுடைய பியூச்சர் நினைச்சா அதுல கண்டிப்பா நீங்க இருப்பீங்க, உங்களோடவும் நிலா பாப்பாவோடவும் வாழணும்னு நான் ஆசைப்படுகிறேன் என கூறுகிறார்.
அதன்பிறகு வீட்டுக்கு வந்த எழில் தன்னுடைய அம்மாவுக்கு பிசினஸில் ஜெயிக்க ஒரு மணி நேரத்தில் 100 விதமான டிஷ் சமைக்கும் ரெக்கார்ட் ஈவன்ட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இதைக்கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சூப்பர் என சொல்ல பாக்கியா என்னால முடியாது எனக் கூறுகிறார். பிறகு எழில் பாக்யாவுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கி அவரை ஒத்துக்கொள்ள வைக்கிறார். பிறகு ஜெனியோட சேர்ந்து என்னென்ன சமைக்கலாம் என கணக்குப் போடுகிறார்.
இந்தப் பக்கம் ராதிகா டீச்சர் 100 விதமான சமையலை ஒரு மணி நேரத்தில் சமைக்க போறாங்க என்பதை கோபியிடம் காட்டுகிறார். இதை பார்த்து கோபி என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பாக்கியா இப்படி ஒரு முடிவெடுத்து இருக்கா என மனதுக்குள் கோபப்படுகிறார். ஒரு மணி நேரத்தில் 100 விதமான டிஷ் சமைப்பது எல்லாம் வாய்ப்பே இல்ல அசிங்கப்பட போறாங்க என சொல்கிறார். ஏன் இப்படி சொல்றீங்க டீச்சர் ரொம்ப தைரியமான லேடி அவங்களால கண்டிப்பா முடியும் என ராதிகா சொல்கிறார்.
மேலும் டீச்சர் பத்தி பேசினாலே எதுக்கு காண்டகறீங்க என கேட்க இங்க என கேட்க இனி என்ன நான் இங்க வரதே உன்ன பாக்கணும் மயூவை பார்க்கவும் தான் என கூறுகிறார். நம்மள பத்தி மட்டும் பேசு நம்முடைய வாழ்க்கையை பற்றி மட்டும் பேசுவது என கோபி சொல்கிறார். டீச்சர் ஆம்பள கிடையாது என சொல்ல நீ பொம்பள மேல பாசம் வைச்சா கூட எனக்கு பொறாமையா தான் இருக்கும். நீ என் மேல மட்டும் பாசமாயிரு என கூறுகிறார்.
பிறகு இந்த பக்கம் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இனியா இந்த சமைக்கும் விஷயத்தைப் பற்றி கோபியிடம் சொல்ல சிரிக்கிறார். உங்க அம்மா வேலை அதெல்லாம் முடியாது என சொல்ல கூட இனியா மற்றும் செழியன் ஆகியோர் கூட சேர்ந்து கிண்டலாக பேசுகின்றனர். உன்னால கண்டிப்பா முடியாது அவ்வளவு பேர் முன்னாடி நீ அசிங்கப்பட்டு தான் நிற்க போற என கோபி கூறுகிறார்.
கோபி இப்படி சொன்னதைக் கேட்டு அவருடைய அப்பா சாப்பாட்டுத் தட்டைத் தூக்கி வீசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…
THEEYOR KOODAM Official Trailer | New Tamil Thriller Movie 2026
Sura Sura Song (Tamil) | Nagabandham | Virat Karrna | Nabha Natesh | Abhishek Nama…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…