baakiyalakshmi serial episode update 26-02-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செல்வி கையில் கட்டுடன் வீட்டுக்கு வர அதை பார்த்த ராமமூர்த்தி என்னாச்சு என்று விசாரிக்க கீழே விழுந்து விட்டதாக சொல்கிறார்.
ஈஸ்வரியும் வெளியே வந்து என்னடி ஆச்சு என்று கேட்க கீழே விழுந்துட்டதாக சொல்ல அப்புறம் எதுக்கு வேலைக்கு வந்த என்று கேட்கிறார். வேலை செஞ்சு பழகிடுச்சு அதனால வீட்ல சும்மா உட்கார முடியும்னு தோணல சரி அக்காவுக்கு முடிந்த வேலையை செய்யலாம் கிளம்பி வந்துட்டேன் என சொல்கிறார்.
அதன் பிறகு ஈஸ்வரி தண்ணீர் எடுக்க கிச்சனுக்கு செல்ல பாக்யா நான் கொண்டு வரேன் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல நீ ரெஸ்டாரன்ட் ஆரம்பித்ததும் இதெல்லாம் நான் தானே பார்த்துக்கணும், உனக்கு எங்க இருந்து நேரம் இருக்கப் போகுது என்று பாக்கியா ஹோட்டல் ஓபன் பண்ணுவது பிடிக்காதது போலவே பேசுகிறார்.
இதனால் ராமமூர்த்தி உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க அவ குடும்பத்தை பத்தி கொஞ்சமாவது யோசிக்கிறாளா செழியனுடைய வாழ்க்கையை பத்தி என்ன முடிவு எடுத்தா.? அன்றைக்கு இவ குழந்தையை புடிங்கி அவங்ககிட்ட கொடுத்து அனுப்பிட்டா இப்ப வாயிலேயே நுழையாத ஒரு பேர வச்சுட்டாங்க இல்ல என்று சொல்ல பாக்யா குழந்தைக்கு பெயர் வைக்கல அந்த பங்க்ஷன் நின்னு போச்சு என்று சொல்கிறார். அதைக் கேட்டுச் செழியன் சந்தோஷப்படுகிறார். மேலும் பாக்யா நான் ஜெனி பக்கம் என்ன நடக்குதுன்னு கவனிச்சிட்டு தான் இருக்கேன் அவங்களே ஜெனியை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவாங்க என்று சொல்கிறார்.
அதனைத் தொடர்ந்து கோபி ரெஸ்டாரன்ட்டில் இருக்க ராதிகா போன் போட்டு மீட்டிங் எல்லாம் முடிஞ்சிடுச்சு உங்க ஆபீஸ்க்கு தான் வரேன் என்ன பிரச்சனை என்று பேசலாம், தீர்க்க முயற்சி பண்ணலாம் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். கோபி ராதிகாவை தடுக்க முயற்சி செய்ய ராதிகா ஃபோனை கட் பண்ணி விட ராதிகா ஆபீஸை நோக்கி வர கோபி எதிரே ஓடி வந்து தடுத்து நிறுத்தி ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறார்.
ஹோட்டலில் வெயிட்டர் ரெகுலர் கஸ்டமர் பாதி நேரம் இங்கதான் இருப்பாரு என்று கொளுத்தி போட ராதிகாவுக்கு சந்தேகம் அதிகமாக கோபி ஒரு வழியாக சமாளித்து விடுகிறார். பிறகு ராதிகா ஆபீஸ்க்கு போகலாம் என்று சொல்ல உனக்கு எதுக்கு தேவையில்லாத டென்ஷன் நீ கெளம்பு நான் பார்த்திருக்கிறேன் என்று ராதிகாவை அனுப்பி வைக்க ராதிகா சந்தேகத்தால் நேராக கோபியின் ஆபீசுக்கு வர ஆஃபீஸ் பூட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்.
பக்கத்தில் இருந்தவரிடம் விசாரிக்க ஆஃபீஸை இழுத்து மூடிட்டாங்க வேலை செஞ்சவங்களுக்கு ஒரு வருஷமா சம்பளம் போடல நஷ்டத்துல போகுதுன்னு மூடிட்டாங்க என்று சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அந்த நேரம் பார்த்து அவருக்கு ஆபீஸ்ல இருந்து போன் வர ஆபீஸ்க்கு கிளம்பி செல்கிறார். கோபி போன் போட்டு ஆபீஸ் போயிட்டியா என்று விசாரிக்க ராதிகா எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் ஆபீஸ் கிட்ட வந்துட்டேன் என்று சொல்கிறார். நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்க கோபி ஆபீஸ்ல தான் கேபின்ல உட்கார்ந்து வேலை பார்த்துட்டு இருக்கேன் என அளந்து விட ராதிகா பயங்கர கோபம் அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…
Bum Baa Diga Diga Music Video | DC | Lokesh | Sun Pictures | Anirudh…
Thedal Thodarudhey Lyrical Video | Yen Ennai Edho Seidhai | D Anthony | Jaikar Harinath…
Nee Sel Video | The India Story | Kajal Aggarwal Kitchlu,Shreyas Talpade | Mangesh D…
Adiye En Poonthene Lyrical Video | Jana Nayagan | Hon’ble CM Vijay | Pooja Hegde…
Sengathiye Lyrical Video | Delivery Boy | Leo Sivakumar | Brigida Saga | Nani |…