கண் கலங்கிய ராஜி. அதிர்ச்சியில் பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இவை இரண்டும் தற்போது மெகா சங்கமமாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டி குடும்பத்திற்கும் முத்துவேல் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. ராஜி கல்யாணத்தை எவ்வளவு பிரம்மாண்டமா நடத்துறேன் பாரு, கடைசி வரைக்கும் நீங்க திருட்டு கல்யாணம் தான் பண்ணனும் என பாண்டி குடும்பத்தை அவமானப்படுத்துகின்றனர். இதனால் கடுப்பாகும் பாண்டி சரவணன் கல்யாணத்த இதைவிட பிரம்மாண்டமா நடத்தணும் என முடிவெடுக்கிறார்.

மறுபக்கம் ரூமில் மீனா கோமதியை எல்லாரிடமும் எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க பாக்யாவுடன் பேசியதைப்பற்றி கதிரிடம் சொல்லி இப்படி எல்லாம் இருக்காதீங்க என அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். இந்த நேரம் பார்த்து பாக்கியா ரூமில் கதவை தட்ட கதவை திறக்க ஸ்வீட் செய்தோம் அதை கொடுத்துட்டு போக வந்ததாக சொல்லி கொடுக்கிறார்.

கோமதி நீங்க வரதுக்கு முன்னாடி இவ என்ன எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தா தெரியுமா என்று எல்லாத்தையும் உளற நீங்கள் நினைக்கிற மாதிரி நாங்க ஒன்னும் தப்பா நினைக்க வேண்டாம், நாங்களும் நல்ல குடும்பம் தான் பயப்பட வேண்டாம் என்று சொல்லி பாக்யா ஸ்வீட்டை கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

அதன் பிறகு மீனா செந்திலிடம் போனை எடுத்துக் கொண்டே வெளியே கிளம்ப கோமதி வெளியே போகாத எனக்கு தனியா இருந்தா ஹார்ட் அட்டாக் வந்துடும் என இங்கே உட்கார வைத்து பேச சொல்கிறார். மீனாவும் செந்திலும் போனில் பேசிக் கொண்டிருக்க கோமதிக்கு பாண்டியன் போன் செய்ய இவர் சத்தமாக பேசுவது மட்டுமல்லாமல் மீனாவை மெதுவா பேசு என திட்டுகிறார். பாண்டியன் பேசி போனை வைத்ததும் மீனாவையும் போனை வைக்க சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் கோவிலுக்கு கிளம்பி வர கதிர் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்க அங்கே எழிலும் வர கதிரை பார்த்து அதே டேபிளில் உட்கார்ந்து ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே இருவரும் பேசுகின்றனர். எழில் டைரக்டர் என தெரிந்ததும் தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க என கேட்கிறார். எழில் கண்டிப்பாக படம் பண்ணும் போது உங்களுக்கு சொல்றேன் என கூறுகிறார்.

கோவிலுக்கு வந்த மீனாவும் கோமதியும் அர்ச்சனை தட்டு வாங்க அங்கே 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என சொல்லிவிட சில்லறை மாற்றுவதற்காக வந்து கொண்டிருக்கும் போது எதிரே பாக்கியாவும் அமிர்தாவும் வர பாக்யா தன்னிடம் இருக்கும் 200 ரூபாயை எடுத்துக் கொடுத்து இருவருக்கும் அர்ச்சனை தட்டு வாங்க சொல்லி அமிர்தாவை அனுப்பி வைக்கிறார்.

வீட்டில் செழியன் குழந்தைக்கு பெயர் வைக்கும் பத்திரிக்கையை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ஈஸ்வரி அது எப்படி டா குழந்தை மேல உனக்கு உரிமை இல்லாம போகும் நாங்க எப்படி அப்படி விட்டு விடுவோம் என ஆறுதல் சொல்கிறார்.

பாக்யா ஜெனிக்கு போன் போட்டு பேச நிச்சயம் நீங்க இல்லாம குழந்தைக்கு பேர் வைக்கிறது எனக்கு கூட பார்க்க முடியல என கண்கலங்க பாக்யா என்ன பண்றது நிலைமை அப்படி இருக்கு என ஆறுதல் சொல்கிறார். அப்படியே மறுபக்கம் குன்னக்குடியில் ராஜிக்கு நிறைய நகை போட்டு தங்கத்தேரில் அனுப்பி வைக்கணும் என அப்பாவும் சித்தப்பாவும் பேசிக் கொண்டிருக்க கண்ணன் வீட்டை விட்டு கிளம்ப எல்லா ஏற்பாடுகள் பண்ணியாச்சு ரெடியா இரு என வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அதைக் கேட்டு ராஜி கண் கலங்குகிறார்.

இங்கே அமைச்சர் மூலமாக சமைக்க வந்த ஆட்கள் செய்யும் உணவில் நீ உப்பு போட்டது தெரியாம நான் உப்பு போட்டுட்டேன் என மாறி மாறி உப்பை போட்டு சொதப்பி விடுகின்றனர். அதை டேஸ்ட் செய்த பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 25-01-24
jothika lakshu

Recent Posts

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

2 hours ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

2 hours ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

9 hours ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

9 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

10 hours ago