குடும்பத்தாரிடம் சிக்கப் போகும் கோபி.. கோபியை திட்டிய ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சண்டைக்கு பிறகு செழியன் மற்றும் ஜெனி ஆகியோர் ரூமில் இருக்க அப்போது கோபி கதவை தட்டுகிறார். அதன் பிறகு உள்ளே வந்து அமர்ந்த கோபி இருவரிடமும் பேசுகிறார்.

பாக்கியா உன்னை அடித்தது தப்பு தான் ஆனா நீ பேசுனது அதைவிட ரொம்ப தப்பு. ஜெனியை எந்த நேரத்திலும் நீ கைவிடக்கூடாது. உன்னை நம்பி தான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கா. ஜெனி நீ எல்லாத்தையும் எமோஷனலா எடுத்துக்கணும்னு அவசியமில்லை. லவ் பண்ணும் போது இருந்த வாழ்க்கையே கல்யாணம் பண்ணும் போதும் இருக்காது. லவ் பண்ணும் போது எப்பயாவது தான் பார்த்து போ ஒருத்தரை ஒருத்தரை இம்பிரஸ் பண்ண முயற்சி செய்வோம். ஆனால் கல்யாண வாழ்க்கை நமது ஒரே வீட்டில் இருப்போம் அதனால் இது முற்றிலும் மாறுபட்டு தான் இருக்கும். நீங்க ரெண்டு பேருமே மெச்சூரிட்டியான ஆளுங்க. உங்களுடைய பிரச்சனை நீங்களே பேசித் தீர்த்துக்கணும், உங்க பிரச்சனை ஃபேமிலி பிரச்சனையா மாறுவது இதுவே கடைசியாக இருக்கட்டும் என சொல்லிவிட்டு வெளியே வருகிறார்.

அதன் பிறகு எழில் வீட்டிற்கு வர இனியா அவரிடம் நடந்த பிரச்சனைகளை சொல்கிறார். வீட்டிலே மாத்தி மாத்தி ஒரே பிரச்சினையா இருக்கு எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாம் என சொல்ல எழில் பட வேலை முடியட்டும் என சொல்கிறார். அதுக்குள்ள எனக்கு ஸ்கூல் திறந்து விடுவாங்க என சொன்னதும் சரி நாளைக்கு எல்லோரும் வெளியே போயிட்டு வரலாம் என சொல்கிறார். ஈஸ்வரி நீங்க போய்ட்டு வாங்க நான் அவரை பார்த்துக்கிறேன் என சொல்ல எல்லோரும் நான் தாத்தாவையும் சேர்த்துதான் ஒரு நாள் தானே பார்த்துக்கலாம் என சொல்கிறார்.

பிறகு இனியா கோபியிடம் பிக்னிக் பற்றி சொல்ல எனக்கு வேலை இருக்கு நீங்க போயிட்டு வாங்க என அவர் சொல்ல எல்லோரும் போனால் ஜாலியாக இருக்கும் நீங்க கண்டிப்பா வரணும் நீங்க வரல உங்க கிட்ட பேச மாட்டேன் என கோபித்து கொண்டு மேலே சென்று விடுகிறார்.

பிறகு கோபி ராதிகா வீட்டிற்கு வருகிறார். மயூ நாளைக்கு பிக்னிக் போக போறோம் என்பதால் ஆர்வமாக எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்க அப்போது வந்த கோபி ஒரு முக்கியமான வேலை ரெண்டு நாள் கழிச்சி போகலாம் இல்லனா ஒரு வாரம் தள்ளிப் போடலாம் என சொல்ல மய்யூ கோபித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார். உங்களால முடியாது நான் எதுக்கு கமிட்மெண்ட் கொடுக்கறீங்க நான் கூட பரவாயில்லை. மயூராவை எதுக்கு ஏமாத்தறீங்க என ராதிகா கோபப்படுகிறார். எல்லா விஷயத்துலயும் இப்படித்தான் கமிட்மென்ட் ஒன்று கொடுக்க வேண்டியது, அதுக்கப்புறம் வந்து எக்ஸ்யூஸ் கேட்க வேண்டியது என திட்ட கோபி வேறு வழியில்லாமல் இவர்களை சமாதானப்படுத்துவதற்காக சரி நாளைக்கு போகலாம், எனக்கு முக்கியமான வேலை தான், உங்களுக்காக அதை தள்ளி வைக்கிறேன் என கூறி விடுகிறார். இப்போ இனியாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியலையே என குழம்புகிறார் கோபி.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 24.03.22
jothika lakshu

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

6 hours ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

9 hours ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

1 day ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

1 day ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

1 day ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

1 day ago