BaakiyaLakshmi Serial Episode Update 23-07-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா கோபப்பட்டு பேசிக்கொண்டிருக்க சுதாகர் உங்க பொண்ணா பொறுமையான பொண்ணு என்று சொன்னீர்கள் என்று சொல்லுகிறார் என் பொண்ணு ஹாஸ்பிடல் போக வேண்டிய அவசியம் இல்ல உங்க குடும்பத்துல இருக்குறவங்க தான் ஹாஸ்பிடல் போகணும் என்று கோபி சொல்லிவிட்டு இனியாவை அழைத்துச் செல்கிறார். பிறகு பாக்யா போன் பண்ண நான் சுதாகர் வீட்ல இருந்து இனியாவ கூட்டிட்டு வந்துட்டேன் என்று சொல்ல பாக்கியா நிம்மதி அடைகிறார். உடனே பாக்கிய இனியாவை நினைத்து கண் கலங்கி ஹோட்டலில் அழுது கொண்டே இருக்க செல்வி ஆறுதல் சொல்லுகிறார்.
மறுபக்கம் கோபி இனியாவை அழைத்துச் சென்று காபி வாங்கி கொடுத்து விட்டு பேசுகிறார் இனியா நான் ஏன் டாடி இப்படி ட்ரிக்கர் ஆகி பேசிகிட்டு இருக்க என்று சொன்னால் அவங்க பையன் மேல நம்ம இப்போ கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம் அதனால அவங்க இப்படித்தான் நடந்துக்குவாங்க அதுக்குன்னு அபாண்டமா இவ்ளோ பொய் சொல்லுவாங்க டாடி என்று சொல்ல இந்த பிரச்சனையை எப்படியாவது தீர்த்து வச்சு கண்டிப்பா நான் உனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்து விடுவேன் என்று சொல்லி வீட்டுக்கு போகலாம் என்று சொல்லுகிறார் வேணா டாடி நான் ஆபீஸ்க்கு போறேன் என்ன விட்டுருங்க என்று சொல்ல கோபியும் அங்கிருந்து கிளம்புகிறார்.
கொஞ்ச நேரத்தில் கோபி பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு வந்து நிற்க ஆகாஷை பார்த்தவுடன் கோபி அமைதியாக இருக்கிறார் உடனே ஆகாஷ் வெளியில் வர நல்லா இருக்கியா ஆகாஷ் என்று கேட்டவுடன் ஆகாஷ் நல்லா இருக்கேன் என சொல்லிவிட்டு வெளியில் வந்து விடுகிறார். ஒரு காபி கிடைக்குமா பாக்கியா என்று சொல்ல பாக்கியாவும் கோபிக்கு காபி கொடுத்தவுடன் இருவரும் உட்கார்ந்து பேசுகின்றனர். இனியா எப்படி இருக்கா என்று கேட்க அவளும் உன்ன மாதிரி தான் ஏதாவது பிரச்சினை வந்தா வேலையில் டைவர்ட் பண்ணிக்கிறா என்று சொல்ல உடனே பாக்யா செழியன் வாழ்க்கையில் பிரச்சனை வந்திருக்கு எழில் வாழ்க்கையில் பிரச்சனை வந்திருக்கு அப்போலான எல்லாத்தையும் சொல்லி சமாளிச்சு எந்த பிரச்சினையா இருந்தாலும் பாத்துக்கலாம்னு இருந்தேன் ஆனா இனியாவுக்கு வந்து பிரச்சனையே என்னால தாங்க முடியல என்று சொல்லி அழுது கொண்டே இருக்க கோபியும் இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு பாக்கியம் என் குழந்தை வாழ்க்கையை நானே எடுத்துட்டு நானும் தோணுது எல்லாத்துக்கும் காரணம் நான் தான் சரியா தூக்கம் வரமாட்டேங்குது சாப்பிட மாட்டேங்குற என்று சொல்லுகிறார்.
அடுத்த இயரிங் ஒரு மாசம் இருக்கு அதுக்குள்ள இனியாவை எங்கேயாவது ஒரு ஒன் வீக் அவளுக்கு புடிச்ச இடத்துக்கு கூட்டிட்டு போகலாம் அவ சந்தோசமா இருப்பா என்று சொல்ல நானும் அதைத்தான் நினைச்சேன் என்று பாக்கியா சொல்லுகிறார் அப்ப நம்ம எல்லாரும் ஒன்னா போகலாம் என்று சொல்ல நம்ம எல்லாருமா என்று கேட்டு பாக்யா யோசிக்க நீ ஹோட்டல் திறந்து இருக்க என்று கூப்பி சொல்ல எனக்கு ஹோட்டல்லாம் முக்கியம் இல்ல நான் ஒரு வாரம் ஹோட்டல்ல மூடிட்டு கூட வருவேன் என்று சொல்லிவிட்டு இனியாவோட சந்தோஷம் தான் முக்கியம் என சொல்லுகிறார்.
மறுபக்கம் இனி ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பிரெண்ட்ஸ் வந்து டீ காபி குடிக்க கூப்பிடுகின்றனர் நான் வரவில்லை என்று சொல்ல என்ன கேட்க இனியா நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லுகிறார் பிறகு எவ்வளவு பேரோட பிரச்சனையை நம்ம இந்த நியூஸ் சேனல சொல்லி இருக்கோம் ஏன் பிரச்சனையே சொல்லக்கூடாது என்று கேட்க அவர்களும் சொல்லலாம் என முடிவெடுத்து பேசுகின்றனர். இனியா என்ன பேசுகிறார்? சுதாகரின் குடும்பம் என்ன சொல்ல போகிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…