கோபிக்கு பதிலடி கொடுத்த பாக்கியா.ராதிகா செய்த வேலை.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியா இன்னும் வரலையா என்ன ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் கேட்டுக் கொண்டிருக்க அப்போது பாக்யா வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார்.

ஈஸ்வரி இவ்வளவு நேரமா எங்க போயிருந்த என்கிட்ட கூட சொல்லாம போயிட்ட என கோபப்பட பழனிச்சாமி சார் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு கூட்டிட்டு போயிருந்தார் என கூறுகிறார். காண்ட்ராக்ட் விஷயமா போய் இருக்கிறதா சொன்னா அதான் கை விட்டு போயிடுச்சு அப்புறம் அதுல பேச என்ன இருக்கு என கேள்வி கேட்க பாக்கியா காண்ட்ராக்ட் திரும்பவும் கைக்கு வந்த விஷயம் குறித்து சொல்கிறார்.

அந்த காண்ட்ராக்ட் எடுத்தவர் அதை நமக்கு திருப்பி கொடுத்துவிட்டார் கூடுதலா 50 லட்சம் பணம் கொடுக்கணும் அவ்வளவுதான் என்று சொல்ல ஏற்கனவே ஒரு லட்சம் போச்சு இப்போ 50 லட்சம் இது எதுவும் சரியா படல என ஈஸ்வரி நெகட்டிவாக பேச பாக்யா எல்லாம் சரியா வருமா அத்தை என்று பேசுகிறார். ஆனாலும் ஈஸ்வரி இதெல்லாம் வேண்டாம் என சொல்ல கோபி அவருடன் சென்று கொண்டு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று பேச பாக்கியா பதிலடி கொடுக்கிறார். ராமமூர்த்தி உனக்கு சரியா வரும்னு சொன்னனா நீ தைரியமா பண்ணு என பாக்யாவை என்கரேஜ் செய்கிறார்.

அதைத் தொடர்ந்து எழில் ஏடிஎம்க்கு போய் 50 ஆயிரம் பணத்தை எடுத்து வந்து அம்மாவிடம் கொடுக்க பிறகு எழில்,பாக்கியா மற்றும் பழனிச்சாமி என மூவரும் கொடுப்பதாக சொன்னவரை சந்தித்து பணத்தை கொடுத்து காண்ட்ராக்ட் ஆர்டரை வாங்குகின்றனர்.

வீட்டுக்கு வந்து இது குறித்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் ஈஸ்வரி இது எதுவும் எனக்கு சரியா படல இது மட்டும் சரியா வரலைன்னா நான் உன்கிட்ட பேசவே மாட்டேன் என அதிர்ச்சி கொடுத்து விட்டு செல்கிறார். அடுத்து வரும் கோபி ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பேர் வருவாங்க அதெல்லாம் எப்படி உன்னால சமாளிக்க முடியும் நீ பெருசா அடிபட்டு தான் நிக்க போற என்று சொல்ல பாக்கியா இப்படி சொல்லி சொல்லித்தான் நான் இந்த இடத்துக்கு வந்து இருக்கேன் என கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து ராதிகா கிச்சனுக்கு வர செல்வி யாருடைய தொந்தரவும் இல்லாம நாம நல்லபடியா சமைக்கலாம் என்று சொல்ல ராதிகா பாக்கியா அருகே வந்து கையை கொடுத்து கங்கிராஜுலேசன் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 22-11-23
jothika lakshu

Recent Posts

அத்திக்காயில் இருக்கும் நன்மைகள்.!!

அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…

14 hours ago

பைசன்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

20 hours ago

டியூட்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

21 hours ago

சண்டை போட்ட சீதா, விட்டுக்கொடுத்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…

22 hours ago

சூர்யாவை திருத்த நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

22 hours ago

டாஸ்கில் கோபப்பட்ட ஆதிரை, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

23 hours ago