இனியா சொன்ன வார்த்தை, ஆறுதல் சொல்லும் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் விசாரிக்க பாக்கியா உங்க பொண்ணோட கல்யாண பத்திரிகையை காட்டுங்க என்று சொல்ல பத்திரிக்கை கையில வச்சுட்டு இருக்க முடியும் என்று கேட்கிறார் உடனே செல்போன் அனுப்பி இருப்பாங்க இல்ல அத காட்டுங்க என்று சொல்ல பத்திரிகையை போடல என்று சொல்லுகிறார் என்னங்க சொல்றீங்க ஆயிரம் பேருக்கு நைட் சாப்பாடு சொன்னீங்க முகூர்த்தத்துக்கு 500 பேருக்கு சொன்னிங்க எல்லாருக்குமே நேரடியா போய் கூப்பிட்டீங்க பத்திரிகை இல்லாம என்று கேட்க திரு திரு வென்று முழிக்கிறார். உடனே மண்டபத்தோட பேர சொல்லுங்க என்று சொல்ல ஏதோ ஒரு பேரை சொன்னவுடன் செழியன் போனில் போட்டு பார்க்க அப்படி ஒரு மண்டபமே இல்லை என சொல்ல உடனே போலீஸ் எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்த என்று கேட்க 5 லட்சம் என்று சொல்லுகிறார் உடனே ஒரு அரை விட்டு எவ்வளவு என்று கேட்க ஐம்பதாயிரம் என உண்மையை ஒத்துக் கொள்கிறார்.

இவரை புடிச்சு வேனில் ஏத்துங்க என்று போலீஸ் சொல்லிவிட்டு பாக்யாவிடம் பேசிக் கொண்டிருக்க உடனே போலீசை தள்ளிவிட்டு வண்டியில் ஏறி தப்பித்து விடுகிறார். மறுபக்கம் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து நடந்த விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க இது மாதிரி யார் பண்ணி இருப்பாங்க என்று யோசிக்கின்றனர் ஈஸ்வரி ஏற்கனவே எதிரி அதிகம் இது வேறயா என்று யோசிக்கிறார். ஏற்கனவே மன கஷ்டம் அதிகமா இருக்குது இதுல பணக்கஷ்டம் வந்திருந்தால் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். நான் நாளைக்கு ஜோசியரை போய் பார்த்து ஏதாவது பரிகாரம் கேட்டுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் எழில் மற்றும் கோபி இருவரும் காரில் வர கோபி எழிலிடம் வேலை பற்றியும் விசாரிக்கிறார் பிறகு இனியா உன்கிட்ட ஏதாவது சொல்றாளா பேசுறாளா ஓகே தானே என்று கேட்கிறார். என்ன பொறுத்த வரைக்கும் இனிய போல்டா ஸ்ட்ராங்கா தான் இருக்கா என்று சொல்ல அவ மேல கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக் கொள்ளும் நான் செவி என்கிட்டயும் சொல்றேன் என சொல்லுகிறார் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு வர கோபி திடீரென காரை நிறுத்த சொல்லுகிறார். பாக்யாவை ஏமாற்றிய நபர் காத்துக் கொண்டிருக்க எழில் பார்த்துவிட்டு அவனை அடிச்சு போலீஸ்கிட்ட ஒப்படைக்க வேண்டும் என்று சொல்ல கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு என்று சொல்லுகிறார் உடனே சுதாகர் காரில் வந்து இறங்கி அவரிடம் பேசிக் கொண்டிருப்பதை இருவரும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர் உடனே டென்ஷன் ஆகி எழில் சண்டை போட போக கோபி எந்த பிரச்சனையும் வேணாம் நாளைக்கு இனியாவோட ஃபர்ஸ்ட் கோர்ட் டியரிங் இருக்கு இதனால அவளுக்கு ஏதாவது பிரச்சனை வரும் அமைதியா இரு என்று சமாதானப்படுத்தி விடுகிறார்.

பாக்யா ஈஸ்வரியை சாப்பிட கூப்பிட எழில் வந்துடட்டும் என்று சொல்லுகிறார் உடனே எழில் கோபி இருவரும் கோபமாக வந்து உட்கார எங்க போயிட்டு வரீங்க என்று கேட்க கோபி ஹோட்டலில் பிரச்சனை பண்ணது யாரு பண்ண வச்சவங்க யாருன்னு எல்லாம் தெரிஞ்சுடுச்சு என்று சொன்ன எழில் அந்த நித்திஷோட அப்பாதான் இதையெல்லாம் பண்ணி இருக்காரு என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் ஈஸ்வரி எல்லாத்தையும் புடுங்கியாச்சு இன்னும் மிச்சம் இருக்குன்னு நினைச்சி இருக்காரா என்று கோபப்படுகிறார். உடனே செழியன் அப்படியே இரண்டு பெயரையும் அடிச்சிருக்க வேண்டியது தானே என்று சொல்ல இவர் தான் அமைதியா இருக்க சொல்லிட்டாரு என்று சொல்லுகிறார் உடனே இனியா நான் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்ல இந்த நேரத்துல எங்க வெளியே போற என்று கேட்கின்றனர் இப்ப என்னடி அங்க போய் சண்டை போட போறியா என்று சொல்ல வேற என்ன பண்ண சொல்றீங்க என்று கேட்கிறார் அதெல்லாம் எதுவும் வேண்டாம் என்று சொல்லி குடும்பத்தினர் இனியாவை மேலே அனுப்புகின்றனர். கோபி எழில் மற்றும் செழியன் இடம் தயவு செய்து எந்த பிரச்சனையும் பண்ணிடாதீங்க என்று சொல்லுகிறார்.

இனியா ரூமில் சோகமாக இருக்க பாக்யா வருகிறார். இனியா பாக்கியவிடம் என்ன பேசுகிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 18-07-25
jothika lakshu

Recent Posts

லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

10 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஜோதிகா..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…

13 hours ago

குடும்பத்தினரிடம் உண்மையை சொல்லப்போன மீனா, கண்ணீர் விட்டு கெஞ்சிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…

16 hours ago

ரேங்கிங் டாஸ்க்கில் பார்வதி செய்த வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

16 hours ago

Kanaga Lyrical Video

Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…

17 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, மாதவி பேசிய பேச்சு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

19 hours ago