பழனிச்சாமி குடும்பத்தினர் கேட்ட கேள்வி, பாக்கியா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ரெஸ்டாரன்ட் வந்து பாக்கியாவிடம் உனக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணமா? அவங்க அக்கா என்கிட்ட முகத்துக்கு நேரா வந்து சொல்றாங்க.‌ உன்னை பொண்ணு கேட்க போறாங்களாம் என்று பாக்கியாவை அவமானப்படுத்தி பேசுகிறார். நீயும் பழனிச்சாமியின் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு நல்ல அம்மானு போடுற இந்த வேஷம் கலைஞ்சு போயிடும். அப்புறம் கிளைமாக்ஸ்ல உன்கூட யாருமே இல்லாம நீ தனி மரமா தான் நிக்கணும். நீ என்ன வேணா பண்ணிட்டு போ அத பத்தி எனக்கு கவலை கிடையாது ஆனால் என் பொண்ணு எதுக்கு அந்த விமலோட பேச விடுற? என் பொண்ணுக்கு ஏதாவது ஒன்னுனா தொலைச்சிடுவேன்.

நீ காலேஜ் முடிச்சுட்டு யாராவது நம்ம கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு காத்துக்கிட்டு இருக்கியா என்று வாய்க்கு வந்தபடி பேச பாக்கியா போதும் நிறுத்துங்க நீங்க சொல்றது எதுவும் நடக்காது என்று கூறுகிறார். கோபி என்னது கல்யாணம் நடக்காதா என்று கேட்க என் குடும்பம் என்னை விட்டு வரமாட்டாங்க என்று சொல்கிறார். எல்லாத்துக்கும் உங்களுக்கு விளக்கம் சொல்லனும்னு தனக்கு எந்த அவசியமும் கிடையாது வெளியே போங்க என்று துரத்துகிறார்.

பிறகு பாக்கியா பழனிச்சாமி வீட்டுக்கு வர அவரது அக்கா நேத்து உங்ககிட்டையும் உங்க குடும்பத்தார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஆனா பேச முடியல என்று சொல்லி கல்யாணம் பற்றி நேரடியாக கேட்க பாக்யா அதிர்ச்சி அடைகிறார். என் மனசுல அப்படி ஒரு எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது. நீங்க சார் கிட்ட இத பத்தி பேசி இருந்தா என்கிட்ட பேச வேண்டியது இருந்திருக்காது. தயவுசெய்து இந்த பேச்சை இதோட விட்டுடுங்க என்று சொல்கிறார்.

இதனால் சுந்தரி கோபப்பட்டு ரூமுக்கு சென்று விட பழனிச்சாமி நம்ம அவ மனசுல பட்டதை கேட்டுட்டான் இந்த விஷயம் பழனிக்கு கூட தெரியாது. நீ அவனை தப்பா நினைக்காத என்று சொல்ல பாக்கியா இல்லம்மா, நான் அவர்கிட்ட இதை பத்தி கூட பேச மாட்டேன் என்று சொல்கிறார். பழனிச்சாமி நம்ம உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லைன்னு தெரிஞ்ச பிறகு நாங்களும் இதை பத்தி பேச மாட்டோம் என்று சொல்ல பாக்கியா அங்கிருந்து கிளம்பி வருகிறார்.

பிறகு பழனிச்சாமியிடம் இப்பவே இதை பத்தி பேசி தனது மாதிரி இருப்பதை தெரிவித்து விட வேண்டும் என்று முடிவெடுத்து வெளியே வந்து எப்படி பேசுவது என்ன பேசுவது என்று யோசித்தபடி நிற்க பழனிச்சாமி அங்க வந்து எங்க மேடம் என்று கேட்கிறார்.

சூப்பர் மார்க்கெட்ல பில்லுல கொஞ்சம் தப்பு இருக்கு அதுக்கு இப்ப போலாமா அப்புறம் போலாமா நீ யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்ல பழனிச்சாமி நானும் அங்கதான் போற மேடம் வாங்க என கூப்பிட பாக்கியா போகும்போது இதைப்பற்றி பேசி விடலாம் என்று முடிவெடுத்து கிளம்பி செல்கிறார். காரில் செல்லும்போது உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 17-06-24
jothika lakshu

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

5 hours ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

5 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

5 hours ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

5 hours ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

7 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

8 hours ago