baakiyalakshmi serial episode update 15-05-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் கிச்சனுக்கு வந்த ராதிகா நேத்து இப்படி எல்லாம் நடக்கும் நீங்க எதிர்பார்க்கவே இல்லை தானே என்று கேட்க நேத்து நிறைய நடந்துச்சு நீங்க எத பத்தி கேக்குறீங்க என பாக்கியா கேட்க கோபி உங்கள பத்தி பேசுனது தான். இன்னைக்கு கோபி பேசியிருக்கிறார் இன்னும் போக போக பாருங்க எல்லாரும் பேசுவாங்க என்று சொல்ல எழில் கோபப்படுகிறார்.
நீ இரு எழில் நான் பதில் சொல்லிக்கிறேன் என பாக்கியா தொடங்குகிறார். எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிடுச்சு விவாகரத்து பேப்பரில் கையெழுத்து பார்க்கணும் அவரை என்னுடைய மனசுல இருந்தும் என் வாழ்க்கையில் இருந்தும் மொத்தமா தூக்கி போட்டுட்டேன், அவர் பேசுவதை நினைத்து வருத்தப்பட மாட்டேன்.
அவர் எதுக்கு என்னை இன்னும் மனசுல நினைச்சுகிட்டு இருக்காரு அது உங்களுக்கு கஷ்டமா தெரியலயா? இது உங்களுடைய வாழ்க்கை கொஞ்சம் யோசிச்சு பாருங்க என ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் பாக்யா.
அதற்கு அடுத்ததாக கோபி வாக்கிங் செல்ல எழில் வாக்கிங் செல்ல வழியில் சந்திக்கும் கோபி எழிலிடம் உங்க அம்மா எதுக்கு அவன் வீட்டுக்கு போகணும்? எதுக்கு சிரிச்சு சிரிச்சு பேசணும் இதெல்லாம் தப்பாவே தெரியலையா என கேட்க அவங்க என்னமோ பண்ணிக்கிட்டு போறாங்க உங்களுக்கு என்ன? அத பத்தி நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க நீங்க எதுக்கு கேக்குறீங்க என கேட்க நான் கேட்காம வேற யார் கேட்பா என கோபி பதில் கொடுக்கிறார்.
செழியன் உங்கள அடிக்க வந்தான், நானா இருந்தா அடிச்சு இருப்பேன் என பதிலடி கொடுக்கிறார். சும்மா தேவையில்லாமல் என்கிட்ட வந்து பேசிகிட்டு இருக்காதீங்க நான் இதே மாதிரி பேசிக்கிட்டே இருக்க மாட்டேன் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார் எழில்.
பிறகு ஜெனி ரூமில் இருக்க செழியன் அவரிடம் வந்து பேசிக்கொண்டே கால் அழுத்திக் கொண்டிருக்க செழியன் கிளைன்ட் விடாமல் போன் செய்ய கடுப்பாகி செழியன் ஒரு கட்டத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். பிறகு பிறகு ஜெனிக்காக ஜூஸ் எடுத்துச் செல்ல கீழே வருகிறார்.
கீழே கோபி ராதிகா செய்து கொடுத்த ஸ்வீட்டை சாப்பிட்டு கொண்டு பேசிக்கொண்டே ராதிகாவுக்கு ஊட்டிவிட அதைப் பார்த்த செழியன் கடுப்பாகி வெளியே செல்கிறார். செழியன் பார்த்து விட்டதை பார்த்த கோபி எழுந்து ரூமுக்குச் செல்ல பிறகு இருவரும் நேருக்கு நேராக பார்த்து முறைத்து கொள்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…