Baakiyalakshmi Serial Episode Update 14.03.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. விடிந்ததும் ராதிகா வீட்டில் இருந்து வீட்டுக்கு வந்த கோபி பாக்கியாவிடம் ஒரு பிளாக் காபி, ஒரு வாட்டர் பாட்டில் எடுத்துக்கிட்டு பத்து நிமிஷம் கழிச்சு மேலே வா எனக் கூறுகிறார். ஒரு நிமிஷம் என கோபி தடுத்து நிறுத்திய பாக்கியா எங்க போயிட்டு இருக்கீங்க நீங்க வருவீங்கன்னு நான் காத்துட்டு இருந்தேன் பயந்தே போயிட்டேன் என்று கூறுகிறார். எதுக்கு கேக்குற என பாக்கியாவிடம் சத்தம் போடுகிறார் கோபி. இல்லை என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல என சொல்ல எல்லாரையும் கண்ட்ரோல் பண்ணனும்னு நினைக்கிறியா? வந்தா போகும்போது சொல்லிட்டு பண்ணி இந்த வீட்டுக்கு வர்ற புடிக்கலைன்னு, இப்படியே பண்ணிட்டு இருந்தா ஒரேடியா வராமல் போய் விடுவேன் என மிரட்டுகிறார். குறுக்கே வந்து கேள்வி கேட்ட எழிலையும் நான் உன் கிட்ட பேசினா உங்க அம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன், உன் வேலைய போய் பாரு என திட்டுகிறார்.
இதனையடுத்து அமிர்தா வீட்டுக்குப் போன எழில் தன்னுடைய அம்மாவை அப்பா நடக்கும் விதத்தை பற்றி கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் பக்கம் பாக்கியாவும் செல்வியும் சுலோச்சனா மேடம் அவர்களிடம் பணம் வாங்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். பணத்தை வாங்கிவிட்டு இப்படியே ராதிகா வீட்டிற்கு போய் விட்டு வரலாம் என பாக்கியா கூறுகிறார். முதல்முதலா அவங்க கிட்ட தான் நாம பணம் வாங்கினோம் ஐந்தாயிரம் ரூபாய் திருப்பித் தரணும். ஆனால் அதை இன்னும் தர முடியாமல் இருக்கிறது அதை கொடுத்து விட்டு வரலாம் எனக் கூறுகிறார். செல்வியும் சரி என சொல்ல பின்னர் இருவரும் பைக்கில் கிளம்புகின்றனர்.
இந்தப் பக்கம் ராதிகா வீட்டிற்கு வந்த கோபி மய்யூவை மியூசிக் ஸ்கூலில் விட்டு விட்டதாகவும் அவளுக்கு மியூசிக்னா ரொம்ப பிடிக்குமா? போய் இறங்குற வரைக்கும் மியூசிக் பத்திதான் பேசிட்டு இருந்தா என கேட்கிறார். நானும் அவளுக்கு படிப்பை விட மியூசிக் தான் ரொம்ப பிடிக்கும் என ராதிகா கூறுகிறார். பிறகு ராதிகா மதியம் லஞ்ச் சமைக்கவா எனக்கேட்க சரி சமை இன்னிக்கு முழுக்க உன்னோடு தான் இருக்க போகிறேன் ஆபிசுக்கு போகல என கோபி கூறுகிறார்.
பிறகு ராதிகா ஜூஸ் சாப்பிடுறீங்களா எனக் கேட்க கோபியும் சாப்பிடலாம் என சொல்கிறார். அதன்பிறகு ராதிகா ஜூஸ் போட பின்னாடியே போய் நின்ற கோபி அவருடன் ரொமான்ஸ் செய்கிறார். இருக்க இருக்க ரொம்ப அழகா ஆயிட்டே போற என கூறுகிறார். உங்க கண்ணுக்கு தான் அப்படி தெரியம் போல என ராதிகா சொல்ல இல்ல உண்மையாகத் தான் சொல்கிறேன் என சொல்கிறார். இந்த நேரத்தில் பெல் அடிக்க கோபி நான் திறக்கிறேன் என வருகிறார்.
வெளியில் பாக்கியாவும் செல்வியும் நிற்க கோபி கதவை திறக்க வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc