எழில் கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு அவருடைய மனைவி கர்ப்பமா இருக்காங்க இந்த சின்ன விஷயத்தை சொல்ல எதுக்கு இவ்வளவு யோசிக்கணும் என்று பாக்யா உண்மையைப் போட்டு உடைக்க எல்லோரும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

ஈஸ்வரி தலையில் அடித்துக் கொண்டு சோபாவில் சென்று உட்கார கோபி உன்னை யாராவது இத வந்து சொல்ல சொல்லி கூப்பிட்டாங்களா என்று பாக்கியாவிடம் சண்டைக்கு போக நீங்கதான் சொல்ல முடியாம தயங்கிட்டு இருக்கீங்களே உங்களுக்கு உதவி பண்ணலாம்னு தான் நான் சொன்னேன். எவ்வளவு நேரம் என் புள்ளைங்க காத்துகிட்டு இருப்பாங்க. உங்க எல்லாருக்கும் வேலை இருக்கு என்று பேசுகிறார்.

உங்களுக்கு பண்ண உதவிக்காக நீங்க நன்றி சொல்லனாலும் பரவாயில்லை ஆனால் திட்டாதீங்க என்று சொல்லி பாக்கியா கிச்சனுக்குள் சென்று விடுகிறார். இதையடுத்து ஜெனி அமிர்தா ஆகியோர் மேலே சென்று விட செழியன் எழில் இனியா முகத்தை பார்க்க முடியாமல் கோபி தலை குனிந்து நிற்கிறார்.

முதலில் இனியாவிடம் கோபி பேச போக இதுக்குத்தான் உன் காலேஜ்ல படிக்கிறவங்களுக்கு தம்பி தங்கச்சி இருக்கான்னு கேட்டீங்களா என்று கேள்வி கேட்டு கோபப்பட்டு செல்கிறார்.

அதன் பிறகு செழியனிடம் பேச செழியன் அன்னைக்கு உங்க சீனியருக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று கதை விட்டீங்களே அது இதுக்காக தானா என்று கேள்வி கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறார். எழில் கோபியை பார்க்கும் முறைத்து விட்டு எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். அதன் பிறகு அங்கு நின்று கொண்டிருந்த ராதிகாவும் ஒன்றும் பேசாமல் ரூமுக்கு சென்று விட கோபி ஈஸ்வரியிடம் பேச ஈஸ்வரி உன் புள்ளைங்களோட முகத்தை பார்த்த தானே? நான் சொல்றதை கேட்டு இருந்தா எனக்கு இப்படி நடந்திருக்குன்னா அது சரி நீ என்னைக்கு என் பேச்சைக் கேட்டு இருக்க என்று உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு ஏதோ ஒரு யோசனை இருக்கும் ஜெனியிடம் செழியன் என் குடும்பத்தை பத்தி தப்பா நினைக்காத என் அம்மா எழில் பாட்டி அமிர்தா எல்லாரும் நல்லவங்க தான் என்று பேச ஜெனி இதே மாதிரி மாலினி கர்ப்பமா இருக்கான்னு ஒரு நாள் நீ வந்து சொல்ல மாட்டியே என்று அதிர்ச்சி கொடுக்கிறார். செழியன் அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது என்று சொல்ல இல்லை எனக்கு பயமா இருக்கு என்று ஜெனி பேச செழியன் சத்தியமா அதுக்கு வாய்ப்பே கிடையாது என்று சொல்கிறார்.

அதன் பிறகு இனியா ரூமுக்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க அங்கு வரும் பாக்யா இனியாவுக்கு ஆறுதல் சொல்லி தூங்க சொல்கிறார். ஒரு விஷயத்தை நம்மளால மாத்த முடியாதுன்னா அதை ஏத்துக்கணும் ஏத்துக்கிட்டாலே பாதி பிரச்சனை சரியா போயிடும் என்று சொல்கிறார். இனிய உனக்கு கஷ்டமாகவே இல்லையா என்று கேட்க உனக்கு நாளும் அப்பானு ஒரு பாண்டிங் இருக்கு எனக்கு அப்படி என்ன இருக்கு நான் இதுக்கு கஷ்டப்படணும் என்று சொல்கிறார்.

எழில் மொட்டை மாடியில் வாசனையில் இருக்க செழியன் ரெண்டு பாட்டில் சரக்கு வாங்கிட்டு வந்து ஓபன் செய்து எழில் இடம் கொடுக்கிறார். இப்ப என்ன ஆச்சு எதுக்கு சரக்கு வாங்கிட்டு வந்த என்று எழில் கேட்க ஜெனி பேசிய விஷயங்களை சொல்லி

baakiyalakshmi serial episode update 13-05-24

வருத்தப்படுகிறார். நல்லா இருந்த வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேன் என்று செழியன் புலம்ப ஜெனி சீக்கிரம் உன்னை புரிஞ்சிப்பாங்க அதுவரைக்கும் எப்போதுமே ஆகி இருக்கணும் என்று சொல்ல செழியன் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் பொறுமையா இருக்கேன் ஆனா அந்த நாள் திரும்ப வருமானு தெரியல என்று வருத்தப்படுகிறார்.

அதன் பிறகு கோபி பற்றிய பேச்சு வர எழில் இது அம்மாவோட வீடு அந்த ஆள் இங்க வந்து இருக்கிறது மட்டும் இல்லாம இப்ப குழந்தை குட்டினு வேற, அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும் அவர் இந்த வீட்ல இனிமே இருக்கக்கூடாது நாளைக்கு நான் இதைப்பற்றி பேச போறேன் என்று சொல்ல செழியன் நீ சொல்றதுதான் சரி அம்மாவுக்கு ஒண்ணுன்னா நாம தான் அவங்க கூட நிக்கணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

 

jothika lakshu

Recent Posts

Vasthara – Lyrical video

https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be

1 hour ago

Mu Dha La Li Song

https://www.youtube.com/watch?v=mDFGW7H_gU8

1 hour ago

தெய்வமா பாக்குற Fans வேண்டாம் – சிவகார்த்திகேயன் பேச்சு

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…

5 hours ago

பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 ரிலீஸ்.. வெளியானது அப்டேட்!

பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…

5 hours ago

ரீ-ரிலீஸ் ஆகிறது விஜய்யின் காவலன் & ரஜினியின் எஜமான் உற்சாகத்தில் ரசிகர்கள்

ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…

5 hours ago

நடிகர் ரிஷப் ஷெட்டிபோல் நடிப்பு….கிளம்பிய சர்ச்சை – மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…

5 hours ago