baakiyalakshmi serial episode update 12-01-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த பாக்கியா ரூமுக்கு சென்று கண்ணாடியில் தனது அழகை பார்த்து ரசிக்க அங்கு வரும் ஜெனி பிடிச்சிருக்கா என கேட்க இதுவரைக்கும் நான் இப்படி பார்லர் எல்லாம் போனதே கிடையாது. என்னையே அழகா பார்க்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என கூறுகிறார்.
இதுவரைக்கும் நான் இப்படி கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து பார்த்தது கிடையாது, அவர் பக்கத்துல தல வராம போய் உட்காருவேன் மாவரைச்ச கையோடு போய் உட்கார்ந்து பேசுவேன் என்ன ஒரு மாதிரி பார்ப்பாரு என பாக்யா சொல்லி வருத்தப்படாத ஜெனி உங்களுக்கு புடிச்ச மாதிரி இருங்க என அறிவுரை கூறுகிறார்.
அடுத்து கோபி போனில் 16000 பணம் எடுத்ததாக மெசேஜ் வர அதை பார்த்து அதிர்ச்சியாகி சத்தம் போடுகிறார். கோபி போட்டா சத்தத்தில் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த மயூ அலறி எழுந்து கொள்கிறார். பிறகு கோபி ராதிகாவை கூப்பிட்டு என்னுடைய டெபிட் கார்டு உன்கிட்ட பத்திரமா இருக்கா 16,000 பணம் போய் இருக்கு என சொல்ல நான் தான் பார்லர்ல ஸ்பை பண்ணேன் என சொல்ல அதிர்ச்சடைகிறது.
பார்லருக்கு 16 ஆயிரம் ரூபாய் என கோபி கேட்க மாசத்துக்கு ஒரு தடவை தானே அதனால என்ன இருக்கு என ராதிகா சொல்ல எதுவும் பேச முடியாமல் திகைத்து நிற்கிறார் கோபி. நீதானே யூஸ் பண்ண நீ யூஸ் பண்ண ஒன்னும் பிரச்சனை இல்ல என சொல்லி சமாளிக்கிறார்.
நான் சலூனுக்கு போனா 200 ரூபா தான் செலவாகுது, 16 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு செலவாகுதா என கேட்க என்னவெல்லாம் பண்றோம் என்பதை சொல்லி செலவாக தான் செய்யும் என ராதிகா சொல்கிறார்.
அடுத்து பாக்கியா வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது செழியன் பாக்யாவை பார்த்து என்னம்மா இன்னிக்கி வித்தியாசமா இருக்க ஹேர் கட் பண்ணியா என கேட்க அதெல்லாம் இல்லை என சொல்லி சமாளித்து விடுகிறார். அடுத்து எல்லோரும் சாப்பிட்டு எழுந்து சென்றதும் பாக்யா எழிலிடம் பார்ட்னர் சென்று வந்த விஷயத்தையும் முடி வெட்டிய விஷயத்தையும் சொல்லி அவனிடம் காட்ட இதை ஈஸ்வரி பார்த்து விடுகிறார்.
வீட்ல என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு உனக்கு விவாகரத்து ஆயிடுச்சு உன் பொண்ணு உன்னை விட்டு அப்பாவோட போய் இருக்கா இந்த நேரத்துல உனக்கு இதெல்லாம் தேவையா? உனக்கு வெக்கமா இல்லையா என சொல்ல பாக்யா கண்ணீர் விட்டு அழைக்கிறார். எழில் பாக்கியாவுக்காக பேச ஈஸ்வரி என்னமோ பண்ணுங்க என கோபப்பட்டு சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…
Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…