Baakiyalakshmi Serial Episode Update 11.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. அமிர்தாவின் வீட்டுக்கு போன எழிலிடம் தாத்தா பற்றி விசாரிக்கின்றனர். எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறார் பிரச்சனையும் எதுவும் இல்லை என கூறுகிறார் எழில். மேலும் தன்னுடைய தாத்தா எல்லோரையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என் அம்மாவை பெத்த பொண்ணு மாதிரி பார்த்துப்பார் என கூறுகிறார். அதை பார்க்கும்போதே தெரியுது என அமிர்தாவின் அப்பா சொல்கிறார்.
பிறகு நிலா பாப்பாவை தூக்கி வைத்து கொஞ்சுகிறார். பக்கத்துல ஒரு மால் இருக்கு அங்க குழந்தைகள் விளையாட நிறைய விஷயம் இருக்கு அங்க ஒரு நாள் பாப்பாவை கூட்டிட்டு போகலாம் என எழில் சொல்கிறார். பிறகு அமிர்தா பாட்டு பாடி குழந்தையை தூங்க வைக்கிறார். அமிர்தா பாடுவதைக் கேட்ட இனி என்னுடைய படத்தில் ஒரு பாட்டு இருக்கு அதை நீங்கதான் பாடறீங்க என கூறுகிறார். சினிமாவுல எல்லாம் பாட முடியாது என அமிர்தா சொல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல நீங்கள் பாடுங்க என எழில் கூறுகிறார். அமிர்தாவின் அம்மாவும் நீ பாடு என சொல்கிறார்.
இந்தப் பக்கம் ஈஸ்வரியின் அவருடைய கணவரும் வெளியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது ஈஸ்வரி ஊருக்கு போகலாமா அங்க போயிட்டு இருக்கலாம் என சொல்ல அவருடைய கணவர் வேண்டாம் என தலையை ஆட்டுகிறார். இந்த நேரத்தில் பாக்கியா வார ஈஸ்வரி ஊருக்கு போகலாமா வேணாம்னு சொல்கிறார் என கூறுகிறார். அதெல்லாம் வேண்டாம் அத்தை இங்க தான் நிறைய ஆஸ்பிட்டல் இருக்கு, பிசியோதெரபி வராரு. மாமாவுக்கு கொஞ்சம் குணமானதும் ஊருக்கு போகலாம் என சொல்கிறார். அதுக்கு இல்ல அங்க 4 மனுஷங்களை பார்ப்பார் என ஈஸ்வரி சொல்ல இப்ப என்ன மாமா 4 மனுஷங்களை பார்க்கணும் அவ்வளவுதானே என அவரை அழைத்துச் சென்று வீட்டு வாசலில் அமர வைக்கிறார்.
ரோட்டில் போற வரவங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ராமமூர்த்தி. ஈஸ்வரி உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். பாக்கியா மிளகாயை எடுத்து வைத்து விட்டு வருகிறேன் என மேலே செல்கிறார். கோபி அப்பா மட்டும் தனியாக அமர்ந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் ராதிகாவின் கணவர் வருகிறார். கோபி ராதிகா வீட்டுக்கு வருவதையும் அவரை கல்யாணம் பண்ணிக்க போவதாக அவர்கள் சொன்னதையும் சொல்லி உங்க புள்ளைய கண்டித்து வைக்க மாட்டீங்களா. அவரும் ராதிகாவும் எப்படினா போகட்டும் அதை பத்தி எனக்கு கவலை இல்ல ஆனா என் பொண்ணுக்கு நான்தான் அப்பா உங்க பையன் எப்படி அப்பாவாக முடியும் என கோபப்படுகிறார். உங்க பையன் கிட்ட சொல்லி வையுங்கள் வெட்டி போட்டு விடுவேன் என சத்தம் போடுகிறார்.
ஏதோ சத்தம் கேட்கிறது என ஈஸ்வரி மற்றும் பாக்கியா இருவரும் வெளியே ஓடி வருகின்றனர். உடனே ராமமூர்த்தி சத்தம் போட்டு பிரச்சினையை திசை திருப்புகிறார். பிறகு யார் நீங்க என கேட்க ராதிகாவின் கணவர் அமைதியாகவே இருக்கிறார். ஈஸ்வரி நீ போலீசுக்கு போன் போடு என சொல்ல அங்கிருந்து ராஜேஷ் கிளம்பிவிடுகிறார். பிறகு கோபியின் அப்பாவை உள்ளே அழைத்துச் சென்று விடுகின்றனர்.
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…
நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினர் தங்களது 16வது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கணவர் சிவகார்த்திகேயனுடன்…
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…