பாக்கியா எடுத்த முடிவு. கோபிக்கு ஆப்பு வைத்த ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை ரூமுக்கு கூட்டிச்சென்று நீ ஏன் இப்படி சத்தம் போட்டு பேசிட்டு இருக்க பாக்கியா பண்ணது பெரிய தப்பு, நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற என கோபப்படுகிறார்.

செழியன் தப்பு பண்ணிட்டு உட்கார்ந்துட்டு இருக்கான் அவனை எதுவும் யாரும் கேட்கல எல்லாரும் சேர்ந்து அவர்களை திட்டிக்கிட்டு இருக்கீங்க அவங்க உங்ககிட்ட பேச வந்தாங்க ஆனா நான் தான் இடையில் வந்து குழப்பி விட்டுட்டேன் என கூறுகிறார். ஜெனி ரொம்ப வருத்தப்பட்டு போயிருக்க அதுக்கு தீர்வு என்னன்னு தெரியணும் என சொல்கிறார்.

கோபி இனிமே இந்த விஷயத்துல நீ தலையிட வேண்டாம். இது எங்க குடும்ப பிரச்சனை நாங்க பாத்துக்கிறோம் என சொல்ல அப்போ நான் யாருன்னு கேட்டு ராதிகா ஆப்பு வைக்கிறார்.

சும்மா விட கூடாது என கோபப்பட இன்னொரு பக்கம் கோபி செழியனை சந்தித்து பேச செழியன் அவர் சொன்னதுல பாதி உன்ன பாதி பொய் என கூறுகிறார். கோபி பாதி உண்மைதானே நீ செஞ்சது தப்பு ஜெனியை எவ்வளவு ஆசை ஆசையா காதலிச்சு கல்யாணம் பண்ண, அவளுக்கு நீ நம்பிக்கை துரோகம் பண்ணிட்ட என்று கூறுகிறார். செழியன் ஜெனிக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது அவ என்கிட்ட கல்யாணத்துக்கு அப்புறம் சரியா கூட பேசல வெளியே கூட வரல எப்பவும் அம்மா கூடவே இருந்தா அதனால எனக்கு மாலினி பேசினது ஆறுதலா இருந்துச்சு என சொல்ல என்னதான் இருந்தாலும் நீ பண்ணது தப்பு என கோபி கூறுகிறார். அதே சமயம் ஜெனி உன்னை விட்டு போக மாட்டா நீ திருந்திட்டேன்னு தெரிஞ்சா அவர் கண்டிப்பா உன்னை தேடி வருவா என சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து பாக்கியா எல்லோரும் திட்டியதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்க இனியாவும் எழிலும் ஆறுதல் கூறுகின்றனர். திடீரென பாக்யாவுக்கு எழில் பிரச்சனை குறித்து ஞாபகம் வர செடியின் விஷயத்தில் நடந்தது எழில் விஷயத்திலும் நடக்கக்கூடாது நாமளே உண்மையை சொல்லிவிட வேண்டும் என முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

BaakiyaLakshmi Serial Episode Update 09-11-23
jothika lakshu

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

13 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

13 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

13 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

14 hours ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

16 hours ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

17 hours ago