baakiyalakshmi serial episode update 08-03-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனியின் குழந்தையை எல்லோரும் வாங்கிக் கொஞ்சிக் கொண்டிருக்க ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி ரெஸ்டாரன்ட் வருகின்றனர்.
அவர்களிடம் வாங்க தாத்தா உள்ள போகலாம், இரண்டு பேர் புதுசா வந்திருக்காங்க என்று சொல்ல யாருன்னு தெரியாமல் இவர்கள் குழப்பம் அடைகின்றனர். பிறகு இருவரும் உள்ளே வர இனியா கையில் இருக்கும் குழந்தையை பார்த்து ஈஸ்வரி இது செழியனுடைய குழந்தை என சந்தோஷப்படுகிறார்.
ராமமூர்த்தி நம்ப பேரக் குழந்தை எப்படி இங்கு வந்தது என்று கேட்க இனியா ஜெனி அக்காவை தான் கூட்டிட்டு வந்தாங்க என்று சொல்ல ஜெனி முன்னாடி வந்து நிற்க ஈஸ்வரி முகத்தை திருப்ப ராமமூர்த்தி நலம் விசாரிக்கிறார்.
பிறகு ஜெனி ஈஸ்வரியிடம் பேச நீ என்கிட்ட பேசாத எனக்கு கோபப்படுகிறார். பாட்டி என்னை பாருங்க என்று சொல்லி முகத்தை திருப்ப அப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு போய்ட்டல்ல குழந்தைகள் கூட எங்க கண்ணுல காட்டல என வருத்தப்படுகிறார் ஈஸ்வரி. ராமமூர்த்தி குழந்தையை கேட்க நான் யார்கிட்டயும் தர மாட்டேன். ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன் நான் தான் கொஞ்சுவேன் எனது குழந்தையோட போய் உட்கார்ந்து கொள்கிறார்.
அதன் பிறகு அமைச்சர் வந்துவிடுவார்கள் என்பதால் எல்லா ஏற்பாடுகளையும் செய்து இவர்கள் தயார் நிலையில் இருக்க கோபி வந்து இறங்கி தூரமாக நின்று நோட்டம் பார்க்கிறார். நேரம் ஆக ஆக அமைச்சர் வருவாங்களா மாட்டாங்களா என எல்லோரும் கேள்வி எழுப்ப பாக்கியா கண்டிப்பா வருவாங்க என சொல்கிறார்.
பிஏ-க்கு போன் பண்ண அவரும் போனை எடுக்காததால் எல்லாரும் அமைச்சர் வராங்கன்னு பொய் சொல்லி விளம்பரம் தேடுறீங்களா என சத்தம் போடத் தொடங்குகின்றனர். அமைச்சருக்கு ஒரு முறை போன் பண்ணி பாருங்க என்று ஈஸ்வரி சொல்ல பாக்கியா அப்படியெல்லாம் உங்களுக்கு போன் பண்ண முடியாது அத்தை என்று கூறுகிறார்.
ஜெனி நேரில் போய் பாத்துட்டு வந்துருங்க என்று ஐடியா கொடுக்க பாக்யா நான் போயிட்டு வந்துடறேன் என்று சொல்ல எழில் ஒரு முறை அமைச்சருக்கு போன் பண்ணி பாருமா என்று சொல்கிறார். பிறகு பாக்கியா போன் பண்ண அமைச்சரின் அசிஸ்டன்ட் போனை எடுக்கிறார். உங்க ஹோட்டலுக்கு தான் வர மாதிரி இருந்தது ஆனா லாஸ்ட் மினிட்ல ஒரு ஸ்கூல் பங்ஷனுக்கு போய்ட்டாங்க என்று சொல்ல பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைய பாக்யாவின் ரியாக்ஷனை பார்த்து கோபி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…