BaakiyaLakshmi Serial Episode Update 07-03-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவும் ஆகாஷும் காபி ஷாப்பில் இருப்பதை கோபி பார்த்துவிட்டு கோபமாக வந்து எதுவும் சத்தம் போடாமல் இங்கிருந்து கிளம்பிவா இனியா அமைதியாக கோபமாக கூப்பிடுகிறார். ஆகாஷ் அங்கிள் என பேச வர பேசாத தொலைச்சிடுவேன் என்று மிரட்டி விட்டு இனியாவை அங்கிருந்து இழுத்துச் செல்கிறார். காருக்குள் உட்கார வைத்து விட்டு இதற்கு தான் இவன் கூட பேச தான் ஸ்பெஷல் கிளாஸ் டியூஷன் என்று இவ்வளவு பொய்யா அதுக்கு தான் 8 மணிக்கு எல்லாம் வந்தியா என்று கோபி கேட்க இல்ல டாடி ஆகாஷ் என்னோட ஃப்ரெண்ட் மட்டும்தான் என்று சொல்ல பிரெண்டுக்கு எதுக்கு திருட்டுத்தனமா ரெஸ்டாரன்ட்
ல மீட் பண்ணனும் என்று கேள்வி கேட்க இனியா பயத்தில் நடுங்குகிறார். இனியாவிடம் இருந்து கோபி போனை கேட்க தர மறுக்கிறார் என்ன டென்ஷன் பண்ணாத இனியா என்று சொல்லி கோபமாக பேசி போனை வாங்க அதில் பாஸ்வோர்ட் மாற்றி இருக்கிறார். ஓ இது வேறயா என்று சொல்லி பாஸ்வேர்ட் போட சொல்ல இனி யார் தயங்குகிறார் உடனே கோபி எனக்கு ஏற்கனவே அதிர்ச்சியில நெஞ்சு வலிக்குது ஒழுங்கா போடு என மிரட்டுகிறார். உடனே இனியாவும் போனுக்கு பாஸ்வேர்ட் போட்டு கொடுக்க அதில் ஆகாஷ் உடன் சேட் பண்ணி இருப்பதை கோபி பார்த்து இன்னும் அதிர்ச்சியாகிறார். பிரண்டுக்கு தான் இத்தனை ஐ லவ் யூ சொல்லி இருக்கியா என்று கோபமாக கேட்கிறார்.
உங்க அம்மா சொன்னது கரெக்டு தான் உனக்கு கொஞ்சம் இடம் கொடுத்தா தலை மேல ஏறி உட்கார்ந்து ஆடிடுவ உனக்கு பேசறதுக்கும் பழகறதுக்கும் வேற ஒரு பையனே தெரியாதா அதுவும் போய் அந்த செல்வி பையன் கூட பேசிகிட்டு இருக்க என்று சொல்ல இனியா பேச வர இதுக்கு மேல நீ எதுவுமே பேசாத வீட்ல இருக்குறவங்க கேள்வி கேப்பாங்க அவங்களுக்கு பதில் சொல்லி என்று சொல்ல வீட்ல சொல்ல வேண்டாம் என ஆரம்பிக்க இனியாவை மிரட்டி சீட் பெல்ட் போடு என்று சொல்லி வீட்டுக்கு வருகிறார். ஹாலில் அனைவரும் சந்தோஷமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். காரில் இனியாவுடன் கோபி வந்து இறங்க இனியா கோபியிடம் வீட்டில் சொல்ல வேண்டாம் டாடி எனக்கு கெஞ்சுகிறார்.
ஆனால் இனியா கையில் இருந்து போனை வாங்கிய கோபி இனியவை வீட்டுக்குள் இழுத்து வருகிறார். அனைவரும் இப்பதானே இனியாவ டிராப் பண்ண போன என்ன ஆச்சு கோபி உடம்புக்கு ஏதாவது முடியலையா என்ன பிரச்சனை என்று கேட்க கோபி செழியன் இடம் தண்ணீர் கேட்கிறார். பிறகு அமிர்தா எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க தண்ணீர் குடித்துவிட்டு கொஞ்ச நேரம் கோபி உட்கார அனைவரும் பதற்றம் ஆகி என்ன ஆச்சு என்று கேட்கின்றனர். இனியா ஏன் அப்படி இருக்கா என்று கேட்க பாக்யா வந்துட்டாளா என்று கோபி கேட்கிறார் ரெஸ்டாரண்ட்லதான இருக்கா எப்படி வருவாய் என்று சொல்ல நான் போன் பண்ணி வர சொல்லி இருக்கேன் என்று சொல்லியிருக்கேன் பாக்யா வந்தவுடன் சொல்றேன் என சொல்ல கொஞ்ச நேரத்தில் பாக்யா வந்துவிடுகிறார். என்னாச்சு எதுக்கு என்ன வீட்டுக்கு வர சொன்னிங்க என்று கோபியிடம் கேட்க இனியாவின் போனை ஆன் பண்ணி அதில் இருக்கும் சாட் அனைத்தையும் பாக்கியாவிடம் காட்டுகிறார். பிறகு பாக்யா ஒரு பையனை லவ் பண்ணும் விஷயம் பாக்யாவுக்கு தெரிஞ்சு அதிர்ச்சியாக எதுவும் பேச முடியாமல் நிற்கிறார்.மறுபக்கம் குடும்பத்தினர் அனைவரும் அந்த போன்ல என்னதான் இருக்கு என்று கேட்க இனியா ஒரு பையன லவ் பண்றா என்று சொல்ல ஈஸ்வரி டென்ஷன் ஆகி இனியாவை திட்டுகிறார்.உன்னால எந்த பிரச்சினையும் பண்ணாம இருக்க முடியாதா உன்ன கஷ்டப்பட்டு உன்னை இஷ்டப்பட்ட படிப்பு காலேஜ்ன்னு எல்லாம் பண்றா ஆனா உன்னால இதுவரைக்கும் எந்த நல்லது நான் நடந்திருக்கா பிரச்சனையை மட்டும் எதுக்கு இழுத்துட்டு வர என்று கோபப்பட்டு திட்ட எழில் லவ் பண்றது என்ன தப்பா அவ வயசுக்கு எல்லாம் வரது தானே என்று சொல்லுகிறார்.
பிறகு கோபி இனியா காதலிப்பது யார் என்ற உண்மையை கோபி செல்ல குடும்பத்தினர் கொடுக்கப் போகும் ரியாக்ஷன் என்ன? முடிவு என்ன? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…