ராதிகா சொன்ன வார்த்தை, கடுப்பான ஈஸ்வரி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஹாலில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி பேப்பர் படிக்கலையாப்பா என்று கேட்கிறார் இல்லம்மா நான் அப்புறம் படிச்சுக்கறேன் நீங்க போய் படிங்க என்று சொல்ல வாக்கிங் போலயா என்று கேட்கிறார் இல்லம்மா இன்னைக்கு என்னமோ டயர்டா இருக்கு சோம்பேறித்தனமா இருக்கு என்று சொன்ன அப்படியெல்லாம் இருக்கக்கூடாது டாக்டர் நடக்க சொல்லி இருக்காருல்ல வா போகலாம் என வற்புறுத்தி வெளியில் வர வைக்கிறார்.

வெளியில் உட்கார்ந்து கோபி ஷூ போட்டுக் கொண்டிருக்க கண்டிப்பா போயி ஆகணும்மாமா என்று கேட்கிறார். ஆமாம் கோபி போயிட்டு வரணும் என்று சொல்ல எல்லோரும் கிளம்பும் நேரம் பார்த்து ராதிகா வந்து எங்கே போகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி பக்கத்து தெருவுல ரெண்டு கிரவுண்ட் இடம் வாங்க போறோம் என்று கிண்டல் பண்ண கோபி அம்மா சும்மா விளையாட்டுக்கு சொன்னாங்க வாக்கிங் போறோம் என்று சொல்ல நான் கூட்டிட்டு போறேன் என்று ராதிகா சொல்லுகிறார்.

நான் தானே கூட்டிட்டு போக ரெடியா இருக்க நீ வந்து சொன்னா என்ன அர்த்தம் என்று சொல்ல உங்களுக்கு தான் முட்டி வலி இருக்குல்ல அதனால நீங்க பார்க்கிங்கலே வாக்கிங் போங்க அங்கெல்லாம் வர வேண்டாம் என சொல்ல கோபியும்உடனே அங்கு ரோடு வேற மேடு பல்லமா இருக்கும் வேணாமா? நீங்க வீட்டிலேயே வாக்கிங் போங்க என்று சொல்லிவிட்டு கிளம்ப ஈஸ்வரி கடுப்பாகிறார். உடனே செழியன் வர நடந்த விஷயங்களை அவரிடம் சொல்ல இதெல்லாம் ஒரு விஷயமா பாட்டி அவங்களும் அந்த சின்ன பொண்ணு வந்து அப்படியே பிரச்சனை பெருசா ஆகணும்னு நினைச்சேன் அதுவே எதுவும் நடக்காதா போய் இது எல்லாம் ஏன் நீங்க பெருசு படுத்திட்டு இருக்கீங்க விடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

இவன் கிட்ட போய் சொன்னான் பாரு என்று சொல்லிவிட்டு இவ என்ன பார்க்கிங்ல போ சொல்லுறது நான் பார்க்கல தான் போவேன் என்று ஈஸ்வரியும் வாக்கிங் வருகிறார். பிறகு கோபியும் ராதிகாவும் வாக்கில் நடந்து கொண்டிருக்க அங்கு ஒருவர் வீடு காலி பண்ணதா சொன்னீங்க என்று கேட்க இப்போ அம்மா வீட்டிலேயே தான் வந்திருக்காங்க என்று மற்றொருவர் சொல்லுகிறார் ஆமா அங்க தான் இருக்கோம் ஒண்ணா தான் இருக்கோம் என்று ராதிகா சொல்ல அவர்கள் கிளம்புகின்றனர். பிறகு இருவரும் பேசிக் கொண்டு வர கோபிக்கு மூச்சு வாங்குகிறது. நீ ரொம்ப பாஸ்டா நடக்கிற ராதிகா, நீ முன்னாடி போனா வரேன் என்று சொல்ல எனக்கு அப்படியே நடந்து பழகிருச்சு கோபி உன்னால நடக்கட்டுமா என்று கேட்க வேண்டாம் நீ முன்னாடி போனா ஸ்லோவா வரேன் என்று சொல்ல ராதிகா வேகமாக நடந்து வருகிறார் எதிரில் பாக்யா வந்தவுடன் எங்க பாத்தாலும் நீங்க இருக்கீங்க பாக்கியா கிச்சன்ல பார்த்தாலும் இருக்கீங்க பார்க்கல பார்த்தாலும் இருக்கீங்க வீட்ல பார்த்தாவது இருக்கீங்க என்று கேட்க அப்படி இருக்கறதுனால உங்களுக்கு ஏதாவது தொந்தரவா இருக்கா என்று கேட்கிறார். அதுக்கு சொல்லல நீங்க எவ்வளவு சீக்கிரம் எழுந்திருப்பீங்க என்று கேட்க ஒரு நாலரை அஞ்சு மணிக்கு எழுந்திருப்பேன் என்று சொல்லுகிறார் ஆனால் எனக்கு அப்பதான் நல்லா தூக்கம் வரும் என்று ராதிகா சொல்லுகிறார் மயூக்கு சாப்பாடு கொடுப்பதற்காகவே கஷ்டப்பட்டு 6:30 மணிக்கு எழுந்திருப்பேன் என்று சொல்ல சரி வாங்க வாக்கிங் போகலாம் என்று இருவரும் நடக்கின்றனர்.

ஈஸ்வரி பார்க்கில் உள்ளே வர அவ சொன்னது கரெக்டு தான் கோபி வேகமா நடப்பா நம்ம இந்த மாதிரி நடந்தா எங்க கூட நடக்க முடியும் என்று சொல்லிக் கொண்டு வர எதிரில் ராதிகாவும் பாக்யாவும் ஒண்ணா நடந்து கொண்டிருக்கின்றனர். என்னமோ என் புருஷனை நான் தான் கூட்டிட்டு போவேன்னு வந்தா இப்ப இவ கூட நடந்துகிட்டு இருக்கா அப்ப கோபி எங்க என்று பார்க்க கோபி ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பிறகு கோபியிடம் நீ எங்கடா இங்க உக்காந்துட்டு இருக்க அவங்க ரெண்டு பேரை ஜோடியா போயிருக்காங்க என்று சொல்ல பாக்கியா இங்க இருக்காளா என்று கேட்க ஆமா ரெண்டு பேரும் தான் ஜோடியா நடந்துகிட்டு இருக்காங்க என்று சொல்லி ஈஸ்வரியை நடக்க கூப்பிடுகிறார். இருவரும் நடந்து கொண்டு வந்திருக்கிற ராதிகாவும் பாக்கியம் எனது செல்வதை பார்த்து கோபி சந்தோஷப்படுகிறார்.

ராதிகா மற்றும் பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க ஈஸ்வரி டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் கோபி இருவரும் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க மயூரா படித்துக் கொண்டிருக்கிறார் சந்தேகம் வந்தவுடன் கோபியிடம் கேட்க கோபியும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து ராதிகா சந்தோஷப்பட ஈஸ்வரி கடுப்பாகிறார். கொஞ்ச நேரத்தில் இனியா வந்து பாக்யாவிற்கும் ஈஸ்வரிக்கும் குட் மார்னிங் சொல்லிவிட்டு திரும்ப மயூ கோபியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து முகம் மாறுகிறது. உடனே அங்கு சென்று இனியா கோபியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க மயூவால் படிக்க முடியாமல் போகிறது இதனால் கோபி ஒரு நிமிஷம் இரு இனியா நான் கணக்கு சொல்லிக் கொடுத்துட்டு வரேன் என்று சொல்ல ஈஸ்வரி கடுப்பாகி மயுவிடம் உனக்கு ஏதாவது டவுட்ன்னா உங்க அம்மா கிட்ட கேட்க வேண்டியது தானே எதுக்கு கோபி கிட்ட கேக்குற கோபிக்கு இனியா தான் முக்கியம் என்று கோபமாக நடந்து கொள்ள ராதிகா மயூ அழைத்துச் சென்று நான் சொல்லி தரேன் என்று கூட்டிச் செல்கிறார்.

உடனே கோபி ஈஸ்வரியிடம் என்ன சொல்கிறார். அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன? ராதிகாவை எப்படி சமாதானம் படுத்துகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 07-01-25
jothika lakshu

Recent Posts

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த ஒரு அழைப்பும் எனக்கு வரவில்லை: மகாநதி சீரியல் லட்சுமி பிரியா..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த சீரியல்…

53 minutes ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட அதிதி சங்கர்..!

தாவணியின் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர். தமிழ் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான…

1 hour ago

மதராசி : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மதராசி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

1 hour ago

காருக்குள் இருக்கும் க்ரிஷ்,அருனிடம் முத்து சிக்குவாரா?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் மேனேஜர்…

3 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…

3 hours ago

தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!

தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

16 hours ago