BaakiyaLakshmi Serial Episode Upadate 03-03-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்கியாவிடம் உனக்கு கோபி கூட சேர்ந்து வாழறதுல என்ன பிரச்சனை என்று கேட்க, மறுபடியும் உங்க பையன் கிட்ட கையேந்தி நிற்கணுமா இந்த வீட்டோட வேலை செஞ்சுகிட்டு இருக்கணுமா என்று கேட்கிறார். உனக்கு ரொம்ப தலைகனம் அதிகமாயிடுச்சு பாக்கியா. பிறந்தநாளுக்கு உன்ன பாராட்டி பேசுறதுக்கு ஆள் இருக்காங்க என்ற தைரியத்துல இதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கியா என்று கோபப்படுகிறார்.
உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னா மூனாவதா ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வையுங்க என்ன விட்ருங்க என்று சொல்லுகிறார். நீ பணம் சம்பாதிக்கிற திமிர்ல பேசுற இதைவிட எவ்வளவோ உசரத்தில் இருந்தவங்களா கீழே இறங்கி பார்த்து இருக்கேன் நீ ஒரு நாள் வருவ அப்ப பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு சொல்லுகிறார். என்ன அக்கா உங்க மாமியார் உனக்கு சாபம் விடுது என்று ஈஸ்வரி சொல்ல அது மட்டும் இல்லாம நீ வேற மூன்றாவது கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லிட்டேன் அந்த மூணாவது பொண்ணோட வாழ்க்கை என்ன அவரது என்று சொல்ல நான் இதை யோசிக்கவே இல்லையே என்று பாக்யா சொல்லுகிறார்.
மறுபக்கம் கோபி எழிலை ரெஸ்டாரண்டுக்கு வர வைத்து முதலில் வீடு வாங்கி தரேன்னு சொன்னாரு அது எவ்வளவு வேலை போயிட்டு இருக்கு என்று கேட்டுவிட்டு, வீட்டுக்கு வரும் விஷயத்தை பற்றி பேசுகிறார்.ஆனால் இப்ப குடும்பத்தோட வெளியே செட்டில் ஆயிடுச்சு இப்ப வந்தா சரியா இருக்காது ஏதாவது பிரச்சனை வரும் என்று சொல்ல எதுவும் வராது எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்லுகிறார். உங்கம்மா ரொம்ப கஷ்டப்படுற அவ கண்ணில் ஒரு வலி தெரிஞ்சுகிட்டே இருக்கு உங்கள நினைச்சு வருத்தப்படுறா.
நான் இப்போ கெஸ்ட் தான் அந்த வீட்ல இருக்கேன் இன்னும் ஒரு வாரம் ஒரு மாசத்துல நான் வேற ஒரு பாதையில போயிடுவேன் அதுக்கப்புறம் வீட்ல அம்மா இனியா பாக்யா மட்டும் தான் இருப்பாங்க அவங்களுக்கு யாரு உதவி பண்ணுவாங்க அவ ஏதாவது ஒன்னுனா பாக்கியா யார்கிட்டயும் ஹெல்ப் கேட்க மாட்டார் அவளே செய்றன்னு கஷ்டப்படுவா அதனால நீங்க எல்லாரும் இருந்தா சந்தோஷமா இருப்போம் என்று சொல்ல அதற்கு எழில் நாங்க எல்லாரும் வந்துட்டா அம்மாவுக்கு வேலை அதிகமாகிடும் அவங்களுக்கு பிரஷரா இருக்கும் என்று சொல்ல நீ உங்க அம்மாவ பத்தி தெரிஞ்சுக்கிட்டு அவ்வளவுதானா அவ அதெல்லாம் ஈஸியா பண்ணிடுவ அது மட்டும் இல்லாம அமிர்தா இருக்க போறாங்க ஜெனி செல்வியின் எல்லாரும் வேலை செய்யப் போறாங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்ல தெரியணும் வீட்டுக்கு வர சம்மதித்த விஷயத்தை சொல்ல எழிலும் சம்மதித்து விடுகிறார்.
மறுபக்கம் இனியா பாக்யாவுடன் ரெஸ்டாரன்ட் அக்கவுண்ட்ஸ் ஹெல்ப் பண்ணி கொண்டு இருக்க செல்வி ஜூஸ் கொடுத்துவிட்டு பாக்யாவை கிச்சனுக்கு கூப்பிடுகிறார் இனிய ஜூஸ் எடுத்து குடிக்கும்போது அங்கு ஒரு லவ்வர்ஸ் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க உடனே ஆகாஷ் ஞாபகம் வந்து போன் பண்ணி ரெஸ்டாரன்ட்ல ஒரு லவ்வர்ஸ் சாப்பிட்டுகிட்டு இருக்காங்க என்று சொல்ல அதுக்கு என்ன இப்போ என்று கேட்கிறார். நான் உன்னை இப்பவே பார்க்கணும்வா என்று சொல்லுகிறார். இப்பவே எப்படி வர முடியும் என்று கேட்டுக் கொண்டே இருக்க அந்த நேரம் பார்த்து பாக்யா வந்துவிட வா என சொல்லி போனை வைத்து விடுகிறார். உடனே ஆகாஷ் ரெஸ்டாரண்டுக்கு வர செல்வி இவன் எதுக்கு இங்க வரான் என்று பார்க்கிறார். என்ன விஷயம் ஆகாஷ் என்று கேட்க , பிரெண்ட பாக்க வந்தேன் அப்படியே வந்துட்டு போனமா என்று சொல்ல மீண்டும் பாக்யாவும் செல்வோம் கிச்சனுக்கு சென்று விட இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் கொஞ்ச நேரத்தில் செல்வி வந்துவிட இவர்கள் பேசுவதை கவனித்து இவன் எதுக்கு இனியா பாப்பா கிட்ட பேசணும் என்று யோசித்து விட்டு வீட்டுக்கு போகச் சொல்லுகிறார். இவர்கள் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த செல்வி வெளியில் வந்து ஆகாஷை நிறுத்தி இனிமேல் இனியா பாப்பாகிட்ட பேசக்கூடாது ரெஸ்டாரன்ட் பக்கம் வரக்கூடாது என்று சொல்லுகிறார்.
பிறகு பாக்யா நீ எதுக்கு இப்படி எல்லாம் சொல்ற நம்ம பசங்கள நம்ப தான் நம்பணும் என்று சொல்லி அட்வைஸ் கொடுக்க அங்கிருந்து கிளம்புகிறார் ஆகாஷ். வீட்டில் ஈஸ்வரி இனியாவிடம் பேசிக் கொண்டிருக்க கோபி என்ன சொல்லுகிறார்? அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…