baakiyalakshmi-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் எல்லோரும் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த நிலையில் பாக்யா நான் போய் எழில் கிட்டயும் செழியன் கிட்டயும் பேசிட்டு வந்துடறேன் என செழியனுக்கு போன் போட மாலினியுடன் இருக்கும் செழியன் போனை எடுக்காமல் விடுகிறார்.
அதைத்தொடர்ந்து எழில் , அமிர்தா இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க தாத்தா தவறுதலாக கிச்சனுக்குள் நுழைந்து விட இதை பார்த்துவிட்டு நான் கோவிலுக்கு போறேன் என கிளம்பி செல்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்கியா அமிர்தாவுக்கு போன் போட எல்லோரும் ஸ்பீக்கரில் போட்டு பேச பாக்யா இங்கு நடந்த விஷயங்களை சொல்கிறார்.
அடுத்ததாக சாப்பிட்டு முடித்து ரூமுக்கு கிளம்பி சென்று கொண்டிருக்கும் போது கோபி இனியாவுக்கு போன் செய்து எங்க இருக்கீங்க சாப்டீங்களா இல்லையா? ஏற்கனவே ரூம் புக் பண்ணிட்டீங்களா இல்ல இதுக்கு அப்புறம் தான் போய் தேடணுமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு டென்ஷனாக இதையெல்லாம் ராதிகா பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ரூம் ஏற்கனவே எழில் புக் பண்ணிட்டான் என்று பாக்கியா சொல்ல அதைக் கேட்டு கோபி ரூமுக்கு போனதும் எனக்கு ஹோட்டலோட காண்டாக்ட் நம்பர், ஹோட்டல் போட்டோ எல்லாத்தையும் எடுத்து அனுப்புங்க என சொல்லி ஃபோனை வைக்கிறார்.
ராதிகா அவங்க நாலு பேர் போயிருக்காங்க சின்ன குழந்தைங்க கிடையாது, அவங்க பாத்துக்குவாங்க நீங்க இங்க இருந்து அவங்க கிட்டயே பேசிகிட்டு இருக்குறதுக்கு, கூடவே போய் இருக்கலாம் என திட்டி செல்கிறார்.
அடுத்ததாக எழில் அமிர்தாவின் அப்பா அம்மாவுக்கு போன் போட்டு பேச நாளைக்கு தங்களது மகன் கணேஷின் நினைவு நாள் என்று சொல்லி வருத்தப்பட எழில் அமர்தாவிற்கு ஆறுதல் கூறுகிறார். இங்கே ரூமுக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென வழியில் ரிப்பேர் ஆகி நிற்க என்ன ஆச்சு என்று தெரியாமல் ஈஸ்வரி கோபப்பட பாக்யா கொஞ்சம் அமைதியா இருங்க அத்தை என்னன்னு பார்க்கலாம் என்று காரை விட்டு இறங்க எல்லோரும் காரில் இருந்து இறங்கி விடுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…