Baakiyalakshmi Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி வீட்டில் அவரது அம்மாவின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் நடக்க பாக்யா சமைத்து முடித்துவிட்டு குடும்பத்தார் அனைவரையும் கூட்டி வர வீட்டிற்கு வந்துள்ளார்.
பழனிச்சாமி வீட்டுக்கு கூட படிப்பவர்கள் உட்பட எல்லோரும் வருகை தர பிறகு பாக்யாவின் குடும்பமும் வந்து இறங்குகிறது. எல்லோரையும் வரவேற்று மகிழும் பழனிச்சாமி அனைவரையும் உட்கார வைத்து பேச அவரது அம்மா இன்னும் இவனுக்கு கல்யாணம் ஆகல என்ற கவலையை சொல்ல ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பழனிச்சாமிக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண வேண்டியது எங்களோடு பொறுப்பு என வாக்கு கொடுக்கின்றனர்.
பழனிச்சாமி எனக்கு கல்யாணம் எல்லாம் எதுக்கு என சொல்ல பாக்கியா அம்மா ஆசைப்படுகிறார்கள், அம்மாவோட ஆசையை நிறைவேற்றுவது பையனோட கடமை என சொல்கிறார். பிறகு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட மீண்டும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேச அப்போது யாரோ ஒருத்தரோட குரல் ரொம்ப இனிமையா இருந்தது என்று பழனிச்சாமி கேட்கிறார்.
உடனே எழில் அது அமிர்தாவோட குரல் தான், அவங்க ரொம்ப நல்லா பாடுவாங்க என சொல்ல பிறகு அமிர்தாவை ஒரு பாட்டு பாட சொல்லி கேட்கிறார். அவரும் ஒரு பாட்டு பாட எல்லோரும் சந்தோஷமாக இருக்க அதன் பிறகு வீட்டில் இருந்து கிளம்புகின்றனர்.
இங்கே கோபி ரூமில் உட்கார்ந்து இருக்க அப்பாவித்தனமாக பக்கத்தில் வந்து உட்காரும் ராதிகா எனக்கு ரொம்ப போர் அடிக்குது என சொல்ல கோபி ஏதாவது மூவி பார்க்கலாமா என்று கேட்க இப்ப சொல்லல எப்பயும் எனக்கு போர் அடிக்குது, இந்த வீட்ல எல்லாரும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க.
நான் என்ன சொன்னாலும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க. நாம நம்ப வீட்டுக்கு போயிடலாம் நீங்க, நான், மயூனு மூணு பேரும் சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்ல கோபி இனியாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் போகலாம் என்று சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
நீ இந்த வீட்டுக்கு வந்த அன்னைக்கு நாம போகலாம்னு சொன்னதுக்கு நீ கேட்கல. உங்க அம்மா, அப்பா என்னை மருமகளா ஏத்துக்கணும், எல்லோரும் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று லட்சியத்தோடு வந்த இப்போ அதெல்லாம் விட்டுட்டு வீட்டுக்கு போயிட்டா உனக்கு கஷ்டமா இருக்கும். உன்னுடைய லட்சியம் நிறைவேறனும். அதுவரை இங்கேயே இருக்கலாம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…