பழனிச்சாமி வீட்டுக்குச் சென்ற பாக்கியா குடும்பத்தினர்.. ராதிகா எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி வீட்டில் அவரது அம்மாவின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் நடக்க பாக்யா சமைத்து முடித்துவிட்டு குடும்பத்தார் அனைவரையும் கூட்டி வர வீட்டிற்கு வந்துள்ளார்.

பழனிச்சாமி வீட்டுக்கு கூட படிப்பவர்கள் உட்பட எல்லோரும் வருகை தர பிறகு பாக்யாவின் குடும்பமும் வந்து இறங்குகிறது. எல்லோரையும் வரவேற்று மகிழும் பழனிச்சாமி அனைவரையும் உட்கார வைத்து பேச அவரது அம்மா இன்னும் இவனுக்கு கல்யாணம் ஆகல என்ற கவலையை சொல்ல ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பழனிச்சாமிக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண வேண்டியது எங்களோடு பொறுப்பு என வாக்கு கொடுக்கின்றனர். ‌‌ ‌‌

பழனிச்சாமி எனக்கு கல்யாணம் எல்லாம் எதுக்கு என சொல்ல பாக்கியா அம்மா ஆசைப்படுகிறார்கள், அம்மாவோட ஆசையை நிறைவேற்றுவது பையனோட கடமை என சொல்கிறார். பிறகு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட மீண்டும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேச அப்போது யாரோ ஒருத்தரோட குரல் ரொம்ப இனிமையா இருந்தது என்று பழனிச்சாமி கேட்கிறார்.

உடனே எழில் அது அமிர்தாவோட குரல் தான், அவங்க ரொம்ப நல்லா பாடுவாங்க என சொல்ல பிறகு அமிர்தாவை ஒரு பாட்டு பாட சொல்லி கேட்கிறார். அவரும் ஒரு பாட்டு பாட எல்லோரும் சந்தோஷமாக இருக்க அதன் பிறகு வீட்டில் இருந்து கிளம்புகின்றனர்.

இங்கே கோபி ரூமில் உட்கார்ந்து இருக்க அப்பாவித்தனமாக பக்கத்தில் வந்து உட்காரும் ராதிகா எனக்கு ரொம்ப போர் அடிக்குது என சொல்ல கோபி ஏதாவது மூவி பார்க்கலாமா என்று கேட்க இப்ப சொல்லல எப்பயும் எனக்கு போர் அடிக்குது, இந்த வீட்ல எல்லாரும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க.

நான் என்ன சொன்னாலும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க. நாம நம்ப வீட்டுக்கு போயிடலாம் நீங்க, நான், மயூனு மூணு பேரும் சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்ல கோபி இனியாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் போகலாம் என்று சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

நீ இந்த வீட்டுக்கு வந்த அன்னைக்கு நாம போகலாம்னு சொன்னதுக்கு நீ கேட்கல. உங்க அம்மா, அப்பா என்னை மருமகளா ஏத்துக்கணும், எல்லோரும் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று லட்சியத்தோடு வந்த இப்போ அதெல்லாம் விட்டுட்டு வீட்டுக்கு போயிட்டா உனக்கு கஷ்டமா இருக்கும். உன்னுடைய லட்சியம் நிறைவேறனும். அதுவரை இங்கேயே இருக்கலாம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

3 hours ago

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன்.. தொடர்ந்து ரிலீசில் வரும் சிக்கல், வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…

7 hours ago

கருப்பு : ஆர் ஜே பாலாஜி கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…

10 hours ago

VEGULI – Official Teaser

VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ

10 hours ago

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

1 day ago