ஈஸ்வரி எடுத்த சபதம். கோபத்தில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராமமூர்த்தி மற்றும் இனியா என மூவரும் உட்கார்ந்து இருக்க அப்போது இனியா அவங்க வந்துட்டாங்களா என கேட்க ஈஸ்வரி இனிமே அவ வர மாட்டா என சொல்ல ராமமூர்த்தி உன் கிட்ட சொன்னாளா? என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு அடுத்ததாக கோபி கீழே வர ஈஸ்வரி அவருக்கு காபி போட்டு கொடுத்து இனிமே உனக்கு ராதிகா வேணாம், விவாகரத்து பண்ணிடு என்று பேசிக் கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து ராதிகா வீட்டுக்கு வந்து விடுகிறார். இதனால் ராதிகா கோபி மற்றும் ஈஸ்வரியிடம் வாக்குவாதம் செய்ய ஈஸ்வரி நீ வந்ததால தான் அவன் வாழ்க்கை இப்படி நாசமா போச்சு என முகத்துக்கு நேராக சொல்லி அதிர்ச்சி கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து கோபி ராதிகாவை ரூமுக்கு அழைத்துச் செல்ல இனியா இவங்க வரமாட்டாங்க இனி சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சேன் என்று சொல்ல அவளை இந்த வீட்டை விட்டு எப்படி ஓட வைக்கறேனு பாரு, இந்த ஈஸ்வரி பத்தி இன்னும் அவளுக்கு முழுசா தெரியல என சபதம் எடுக்கிறார்.

பிறகு கோவிலுக்கு போன பாக்கியா வீட்டுக்கு வந்ததும் செல்வி வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல பாக்கியா அதை எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார். கோபி சாரை திரும்பவும் உன் தலையில கட்டி வச்சுடுவாங்கன்னு நினைச்சு பயந்துட்டியா என கேட்க பாக்யா ஆமாம் எனக்கு இப்பதான் ஒரு தனித்துவமும் அடையாளமும் கிடைச்சிருக்கு. அதை எக்காரணத்தைக் கொண்டும் இழக்க விரும்பல என சொல்கிறார்.

பிறகு ரூமுக்கு போன ராதிகா கோபியிடம் வளைத்து வளைத்து சண்டை வாங்க கோபி தலை வலிக்குது கொஞ்சம் அமைதியா இரு என சொல்கிறார். அனைத்திற்கும் ராதிகா எடக்கு முடக்காக பதில் பேச கோபி வெளியே வந்து விடுகிறார்.

அதன் பிறகு கோபி தலைவலியோடு கிச்சனுக்கு வர ராமமூர்த்தி அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். கோபி அவரிடம் நீங்க என்ன வேணா திட்டுங்க ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு திட்டுங்க தலை பயங்கரமா வலிக்குது என்று சொல்லி செல்வியிடம் தைலம் கேட்டு வாங்கி தடவுகிறார்.

அதன் பிறகு பாக்கியா ராமமூர்த்தியிடம் காபி வேண்டுமா மாமா என கேட்க அவரும் குடுமா என சொல்ல பாக்கியா காபி போட்டு கொடுக்க கோபி எனக்கும் காபி போட்டு பாக்கியா ப்ளீஸ் என சொல்லி பிறகு கோபி மன்னிப்பு கேட்கிறார்.

Baakiyalakshmi Episode Update

jothika lakshu

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

11 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

12 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

12 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

13 hours ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

13 hours ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

14 hours ago