Baakiyalakshmi Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா என்னைக்காவது ஒரு நாளாவது நான் வைக்கிற குழம்பு வாசனையா இருக்குன்னு சொல்லி இருக்கீங்களா என சண்டை போட இருந்தா தானே சொல்லுவேன் என கோபி மைண்ட் வாய்ஸ் என நினைத்து கொஞ்சம் சத்தமாக பேசி விடுகிறார்.
இதனால் இன்னும் கோபமாகும் ராதிகா என்ன சொன்னீங்க என்று கோபியை அடிக்க அவர் நான் இருக்கும் போது சமைச்சிருந்தா கண்டிப்பா வாசனையா இருக்குன்னு சொல்லி இருப்பேன் என சமாளிக்கிறார். நீங்க சரியா இருந்தா நான் எதுக்கு கண்டவங்க கிட்ட பேச்சு வாங்கணும் என்று ராதிகா சொல்ல யார் என்ன சொன்னாங்க என்று கோபி கேட்க வேற யாரு பாக்கியா தான்.. நீங்க எதுக்கு அவங்க என்ன பண்றாங்கன்னு வாட்ச் பண்ணிட்டு இருக்கீங்க? அவங்க உங்களை கண்டுக்கிறது கூட கிடையாது நீங்க தான் அவங்கள மறக்காம இருக்கீங்க என்று கோபப்பட கோபி அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது எந்த சமாளித்து அங்கிருந்து வெளியே ஓடி வருகிறார்.
கிச்சனில் பாக்கியா சமையல் செய்து கொண்டிருக்கும் போது கோபி அங்கு வந்து நீ பண்றது எதுவும் சரி கிடையாது, ராதிகா என்னுடைய வைஃப், அவளை நீ எதுவும் சொல்லக்கூடாது. அப்படி ஏதாவது பண்ணா நான் சும்மா இருக்க மாட்டேன் என சத்தம் போட என்ன பண்ணுவீங்க? நான் அப்படித்தான் பேசுவேன் உங்களால என்ன பண்ண முடியும் என பாக்கியா கோபப்பட்டு பேசுவது மட்டுமல்லாமல் கையில் இருக்கும் கத்தியை வைத்து தக்காளியை வேகமாக நறுக்குகிறார். மேலும் முதல்ல இங்கிருந்து கிளம்புங்க என்று சத்தம் போட கோபி அங்கிருந்து நகரும் போது ஒரு நிமிஷம் என பாக்கியா மீண்டும் கூப்பிடுகிறார்.
நீங்க எதுக்கு பழனிச்சாமி சார் வீட்டுக்கு போனீங்க என்று கேட்க கோபி நான் எதுக்கு போக போறேன்? இல்ல என சொல்லி பிறகு போனேன் அவர் எதுக்கு உன்கிட்ட வந்து பேசணும் அதெல்லாம் நல்லாவே இல்ல என்று சொல்ல நான் யார் கிட்ட வேணாலும் பேசுவேன் என்ன வேணாலும் பண்ணுவேன் அதைக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என பேச நீ ரொம்ப ஓவரா பேசுற என்று கோபி சொல்ல நான் அப்படித்தான் பேசுவேன் உங்களால என்ன பண்ண முடியும்? நாம ரெண்டு பேரும் ஒரு பேப்பர்ல கையெழுத்து போட்டோம் போய் அந்த பேப்பரை எடுத்து பாருங்க இங்கிலீஷ்ல தான் இருக்கும் அப்படி புரியவில்லை என்றால் வாங்க நான் என்னன்னு விளக்கமா சொல்றேன்.
வேணான்னு விட்டுட்டு போன பிறகு நான் என்ன பண்ணா உங்களுக்கு என்ன? என்னை எதுக்கு ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க? நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் திரும்பத் திரும்ப இதையே பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் அவ்வளவு தான் சொல்லிட்டேன் என பாக்யா கோபியை எச்சரிக்க கோபி பயத்துடன் அங்கிருந்து நகர்கிறார்.
அதன் பிறகு எழிலும் அமிர்தாவும் அவரது அப்பாவை பார்க்க ஊருக்கு வந்து அவரைப் பார்த்து நலம் விசாரிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இனியா படித்துக் கொண்டிருக்கும் போது ஜெனி அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க பாக்கியா நல்ல மார்க் வாங்கணும் கொஸ்டின் பேப்பரை வாங்கினது எல்லாமே மறந்து போன மாதிரி தான் இருக்கும், ஆனா அதுக்கு எல்லாம் நீ பயப்படக்கூடாது முதல்ல உனக்கு நல்லா தெரிஞ்ச எல்லாத்துக்கும் பதில் எழுது அதன் பிறகு மத்ததுக்கு பதில் எழுது என்று அறிவுரை வழங்க இதை பார்த்த கோபி அங்கு வந்து நீ பெருசா டென்ஷன் ஆகாத, உனக்கு என்ன வருதோ அதை செய் என அவர் ஒரு பக்கம் அட்வைஸ் செய்கிறார்.
மறுநாள் காலையில் இனியா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருக்க அப்போது பழனிச்சாமி வீட்டுக்கு வருகிறார். எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு உனக்கு ஒரு கிப்ட் வாங்கி வந்து இருப்பதாக சொல்லி இனியாவிடம் கொடுக்க அவர் பிரித்து பார்த்து இது விலை உயர்ந்த பேனா, ரொம்ப நாளா நான் இதை வாங்கணும்னு ஆசைப்பட்டு இருந்தேன் என சந்தோஷப்பட இதை பார்த்து கோபி முதலில் பாக்கியாவை கரெக்ட் பண்ணா இப்போ குழந்தையை அவன் பக்கம் இழுக்க பார்க்கிறான் என டென்ஷன் ஆகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…