baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தாவுக்கு போன் போடும் எழில் அவர் எடுக்காத காரணத்தினால் முகம் சுருங்கி சோகமாக ஈஸ்வரி யாருக்குடா போன் போடற என கேட்க பிரண்டு பாட்டி உங்களுக்கு தெரியாது என சமாளிக்கிறார்.
அதன் பிறகு எழில் மேலே சென்றதும் செழியன் இடம் நீ போய் போன் எடுத்து பாரு யாருக்கு போன் பண்ணி இருக்கான்னு என சொல்ல செழியன் போனை எடுத்து பார்த்து அந்த அமிதாவுக்கு தான் பண்ணி இருக்கான் என சொல்கிறார். மேலும் இவன் அமிர்தாவை சின்சியரா லவ் பண்றான். அவங்களத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என்கிட்டையே சொன்னா பாட்டி என்ன சொல்ல ஈஸ்வரி நான் உயிரோட இருக்க வரைக்கும் அது நடக்காது என கோபப்படுகிறார். நாளைக்கு நாம அமிர்தா வீட்டுக்கு போயிட்டு வரலாம் என இருவரும் முடிவு எடுக்கின்றனர்.
பிறகு எழில் பாக்கியா கிச்சனில் இருக்கும்போது அவரிடம் சென்று மா நீ நல்லா இருக்கியா என கேட்க நான் நல்லா தான்டா இருக்கேன் என சொல்கிறார். நான் வேணும்னா பணம் 3 லட்சம் ரெடி பண்ணட்டுமா என கேட்க பாக்கியா அதெல்லாம் வேண்டாம் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீ கூட நில்லு அது போதும் மீதியை நானே பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறார்.
பிறகு பாக்யா தன்னுடன் சமைப்பவர்களை அழைத்து வைத்து கேட்டரிங் ஆர்டர் கிடைக்காத விஷயத்தை சொல்கிறார். அவர்களும் சரி விடு பாக்யா பார்த்துக்கலாம் நாங்க இருக்கோம் என ஆறுதல் சொல்லிவிட்டு செல்கின்றனர்.
அதன் பிறகு மறுநாள் காலையில் ஈஸ்வரி காபி குடிக்கும் போது பாக்கியாவிடம் அமிர்தா பற்றி பேச்சுக் கொடுத்து அவங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க வீடு எங்க இருக்கு என விசாரித்துக் கொள்கிறார். பிறகு செழியன் உடன் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக சொல்லி அமிர்தா வீட்டிற்கு கிளம்பி செல்கிறார். இருந்தாலும் ஜெனி எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு என்ன சொல்ல பாக்கியா அவங்க என்ன பண்ணப் போறாங்க என சொல்கிறார்.
பிறகு இருவரும் அமிர்தா வீட்டுக்கு வர அவருடைய பெற்றோர் கல்யாண விஷயமாக பேச வந்திருப்பதாக சந்தோஷத்துடன் இருக்க ஈஸ்வரி நல்லவிதமாக பேசுவது போல பேச்சு கொடுத்து விசாரிக்க எழில் தான் கல்யாணம் பண்ணிப்பதாக சொன்னதாக அவர்கள் சொல்கின்றனர். நாம் அப்படி சொன்னதும் நீங்க அமிர்தாவை அவன் தலையில கட்டிடலாம் என்று பார்த்தீர்களா என கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…