baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்யா ஆர்டர் கேன்சல் ஆன விஷயம் கேட்டு ஈஸ்வரி கோபப்படுகிறார். கோபி உன்ன திட்டுறதுல தப்பே இல்லை என சொல்லி கோபப்பட்டு உள்ளே எழுந்து செல்ல செழியன் பாட்டி சொல்றதுல தப்பில்லையே நீங்க புரிஞ்சுக்க மாட்டீங்க என சொல்லி உள்ளே எழுந்து செல்ல எழில் பாக்யாவை சமாதானம் செய்கிறார்.
அடுத்து ராதிகாவால் காண்ட்ராக்ட் கேன்சலான விஷயத்தை செல்வியிடம் பாக்கியா சொல்ல தேர்தல்ல தோத்த கோபத்துல இப்படி பண்ணி இருப்பா அவ நல்லாவே இருக்க மாட்டாள் என திட்டுகிறார். அடுத்து கோபியின் அப்பா வீட்டுக்கு வர அப்போது பாக்கியா சோகமாக இருப்பதை பார்த்து என்ன ஏது என விசாரிக்க நடந்த விஷயங்கள் தெரிய வருகிறது. காண்ட்ராக்ட் கேன்சலாக ராதிகா தான் காரணம் என தெரியவர பிறகு மீண்டும் ராதிகா வீட்டுக்கு வரும் கோபியின் அப்பா காண்ட்ராக்ட கேன்சல் பண்ணது நீதானா என கேட்க ராதிகா ஆமாம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
சாப்பாடு நல்லா இல்லன்னா அதை நான் தான் பேஸ் பண்ணனும் அதனால தான் பெரிய கேட்டரிங் போகலாம்னு முடிவெடுத்தேன் என சொல்கிறார். கோபி நான் கூட வேணாம்னு தான் சொன்னேன் ராதிகா பொழச்சி போகட்டும் நான் ஆர்டரை கொடுக்கிறேன் என சொன்னா என சொல்ல தாத்தா அப்போ நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தான் இதை கேன்சல் பண்ணி இருக்கீங்க என கோபப்படுகிறார். பாக்கியா இதுக்கெல்லாம் அப்படியே மூளையில முடங்கிட மாட்டா அவளை உங்களால ஒன்னும் பண்ண முடியாது என சவால் விடுகிறார்.
அடுத்து பாக்யா ராஜசேகரை சந்தித்து பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என சொல்ல அப்படி எல்லாம் தர முடியாது மாச மாசம் தான் வட்டி கட்ட முடியும் என கறாராக கூறிவிடுகிறார். இதனால் பாக்கியா வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
பிறகு வீட்டில் சந்தோஷமாக ஈஸ்வரியிடம் பேசிக் கொண்டிருந்த எழில் சிறிது நேரத்தில் அமிர்தாவுக்கு போன் போட அவர் எடுக்காத காரணத்தினால் முகம் சோகமாகி அங்கிருந்து நகர்ந்து செல்ல செழியன் போனை எடுத்து பார்த்து அமிர்தாவுக்கு தான் போன் பண்ணி இருக்கான் என சொல்ல ஈஸ்வரி கோபப்படுகிறார். நான் உயிரோட இருக்கும் வரை அவங்க ரெண்டு பேரையும் சேர விட மாட்டேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses