இனியாவின் கேள்விக்கு பதில் அளித்த கோபி. அதிர்ச்சியான ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா ராஜசேகரை பார்க்க போக அவர் தன்னுடைய நண்பரின் கம்பெனியில் கேன்டீன் நடத்தும் ஆர்டர் ஒன்னு வந்திருக்கு அவர் என்னிடம் யாராவது லேடீஸ் இருந்தா சொல்லுங்க என கேட்டதும் உங்களுடைய ஞாபகம் தான் வந்தது. உங்களால முடியுமா சொல்லுங்க நானே நேர்ல கூட்டிட்டு போயிட்டு அறிமுகம் பண்றேன் என சொல்கிறார். இதனால் பாக்கியா சந்தோசப்படுகிறார்.

அடுத்து இவர்கள் வீட்டுக்கு வரும்போது ஈஸ்வரி நெஞ்சை பிடித்து உட்கார்ந்து கொண்டிருக்க என்னாச்சு என விசாரிக்க கோவிலுக்கு போயிட்டு வரும்போது ஒருத்தன் செயினை பறிக்க வந்ததாக பயத்தில் பேச பிறகு பாக்கியா அவரை சமாதானம் செய்கிறார்.

அடுத்து ராதிகா வீட்டில் இனியா மயூவுக்கு மேக்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க அப்போது கடைக்கு போய் வரும் ராதிகா காபி குடிக்கலையா என கேட்க இனியா அமைதியாகவே இருக்கிறார். உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன், உனக்கு காபி பிடிக்காதா என கேட்க பிடிக்காது என இனியா கூறுகிறார். உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு எனக்கு எப்படி தெரியும் சொன்னா தானே தெரியும் என கேட்க நான் எதுக்கு உங்க கிட்ட சொல்லணும் என இனியா பேச இந்த அம்மாகிட்ட இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுவியா என பதிலுக்கு ராதிகா கேள்வி எழுப்ப நீங்க ஒன்னும் என் அம்மா கிடையாது என அதிர்ச்சி கொடுக்கிறார் இனியா.

பிறகு கோபி வந்ததும் அக்காவுக்கும் அம்மாவுக்கும் சண்டை என சொல்ல கோபி சமாதானம் செய்ய முயற்சி செய்ய ராதிகா கோபப்பட இனியா ஒரு கட்டத்தில் உங்களுக்கு நான் முக்கியமா அவங்க முக்கியமா என கேட்க திக்கு முக்காடும் கோபி எனக்கு நீதான் முக்கியம். அடுத்தது தான் எல்லோரும் என சொல்ல ராதிகா இன்னும் அதிர்ச்சி அடைகிறாள். நான் என்ன உனக்கு எதிரியா என ராதிகா கேட்க ஆமா எதிரி தான் என இனியா சொல்ல ராதிகா அவளுடன் சண்டை போடுவது போல பேச கோபி ராதிகாவை அமைதியாக இருக்க சொல்கிறார்.

உங்க வீட்டுக்கு நான் முதல்ல வரும்போது மயூ கூட தான் என்கிட்ட பேசல நான் இப்படியா நடந்துக்கிட்டேன், கொஞ்சம் பொறுமையா இரு என பேச ராதிகா கோபமாகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

7 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

16 hours ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

16 hours ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

16 hours ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

2 days ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

2 days ago