எழிலுக்கு ஷாக் கொடுத்த அமிர்தாவின் குடும்பத்தினர். இனியா எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் அமிர்தா வீட்டுக்கு போக அமிர்தாவின் அப்பா அம்மா அழைத்து உட்கார வைத்து பேசுகின்றனர். எழில் கொஞ்சம் டைம் கேட்க திரும்பத் திரும்ப பழைய கதை வேண்டாம் என கூறி விடுகின்றனர்.

பாப்பா சத்தம் கேட்கல அமிர்தா எங்கே என கேட்க அவ ஊருக்கு போயிட்டா, அவங்க அம்மா ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க என சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார். எப்ப வருவாங்க என கேட்க தெரியல நாங்களும் இன்னும் ரெண்டு வாரத்துல ஊருக்கே போயிடலாம்னு இருக்கோம் என சொல்லி இன்னும் அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

அதன் பின்னர் சப்பாத்தி மற்றும் சிக்கன் குழம்பு செய்து இருக்க தாத்தா இராமமூர்த்தி வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு சாப்பிட வந்த அவரிடம் பாக்கியா இனியா பற்றி விசாரிக்கிறார். இனியாவுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும் அவளுக்கு கொஞ்சம் எடுத்துட்டு போய் கொடுக்கறீங்களா என கேட்டு சப்பாத்தி மற்றும் சிக்கன் குழம்பை கொடுத்து அனுப்புகிறாள்.

பிறகு தாத்தா இனியாவுக்கு சப்பாத்தி மற்றும் சிக்கன் குழம்பு எடுத்துட்டு வந்து கொடுக்க சாப்பிட்டு அம்மாவோட சமையல் எனக்காக கொடுத்து அனுப்பிச்சாங்களா அம்மாவ பாக்கணும் போல இருக்கு என சொல்ல நீ தான் முடிவு எடுக்கணும் உங்க அப்பா கிட்ட பேசு என தாத்தா சொல்லித் தருகிறார். அதன் பிறகு இனியா கோபியிடம் அம்மா பாவம் டாடி, நான் வீட்டுக்கு போகட்டுமா என கேட்க எந்த வீட்டுக்கு என கோபி கேட்க நம்ம வீட்டுக்கு தான் என சொல்கிறாள்.

டாடியும் பாவம் தானே உனக்கு அந்த வீட்டில் ஏதாவது வேணும்னா சொல்லு அப்பா கிட்ட சொல்லி எடுத்துட்டு வர சொல்றேன். ஆனா என்ன விட்டு போயிடாத எனக்கு முதல்ல நீ தான், அதுக்கப்புறம் தான் மத்த எல்லாமே என சொல்லி என்னை விட்டு போக கூடாது என இனியாவிடம் சத்தியம் வாங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

3 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

3 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

3 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

3 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

3 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

21 hours ago