கோபியின் அப்பா செயலால் கடுப்பான ராதிகா.. சிக்கி தவிக்கும் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் தாத்தாவும் இனியாவும் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருக்க மயூ இதனை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க பிறகு தாத்தா இனியாவிடம் ராதிகா கிட்ட பேசனியா என கேட்க அவங்க பேசுறாங்க நான் தான் பேசல ஒரு மாதிரி இருக்கு என இனியா கூறுகிறார். அந்த பொண்ணு கிட்ட எனக்கு வந்து பக்கத்துல உக்காருவா ஆனா நான் பேசல என்ன சொல்ல பெரியவங்க பண்ண தப்புக்கு குழந்தை என்ன பண்ணும் என சொல்லி மயூவை கூப்பிட்டு உட்கார வைத்து கேரம் போர்டு விளையாட வைக்கிறார்.

இந்த பக்கம் சமையல் வேலைகளை முடித்துவிட்டு பாக்கியா செழியன் மற்றும் ஜெனி ஆகியோரை சாப்பிட கூப்பிடுகிறார். ஈஸ்வரியையும் சாப்பிட கூப்பிட அவர் எனக்கு சாப்பாடு வேண்டாம் என சொல்ல பிறகு பாக்யா சாப்பிட வாங்க என அதட்டி கூப்பிட என்ன நீ அதட்டுற என ஈஸ்வரி கேட்க நீங்க குழந்தை மாதிரி அடம் பிடிச்சா அப்படித்தான் செய்வாங்க, வாங்க அத்தை சாப்பிடுங்க என பேசி சாப்பிட வைக்கிறார். சாப்பிடும்போது செல்வி ராதிகா சரியான ஆளு முதல பாக்கியா அக்காவோட வீட்டுக்காரரை கூட்டிட்டு போயிடுச்சு. அப்புறம் இனியா பாப்பா இப்போ அம்மாவோட வீட்டுக்காரர். ஜெனி நீ கொஞ்சம் சூதானமா இரு என சொல்ல ஈஸ்வரியும் ஜெனியும் நீ போவியா என்ன ரவுண்டு கட்டுகின்றனர்.

இந்தப் பக்கம் கோபி சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துவிட்டு ரூமுக்கு போய் ராதிகாவிடம் சமைக்க சொல்ல அவர் முறைக்கிறார். இதைக் கேட்ட தாத்தா என் பேத்திக்கு பசிக்குது என சத்தம் போட பிறகு ராதிகா சமைச்சு முடித்துவிட்டு எல்லோரையும் சாப்பிட கூப்பிட கோபிநாத் அப்பாவை மட்டும் கூப்பிட தயங்குகிறார்.

பிறகு கோபியை கூப்பிட சொல்ல கோபி நீயே கூப்பிடு ப்ளீஸ் என சொல்ல ராதிகா நான் எப்படி கூப்பிடுறது என கேட்க மாமான்னு சொல்லி கூப்பிடு உனக்கு தான் உரிமை இருக்குல என கூறுகிறார். கடைசியில் இனியா தாத்தா வாங்க சாப்பிடலாம் என கூப்பிட நீங்க சாப்பிடுங்க என கூறுகிறார். பிறகு ராதிகாவே சென்று வாங்க சாப்பிடலாம் குழந்தைங்க பசிக்குதுன்னு சொல்றாங்க உங்களுக்காக வெயிட் பண்றாங்க என சொல்லி கூட்டிட்டு செல்கிறார்.

பிறகு சாதம், சாம்பார், அப்பளம் உள்ளிட்டவற்றை பரிமாற கோபி சூப்பர் என புகழ்ந்து தள்ள தாத்தா இது என்ன கார குழம்பா என கேட்டு நக்கல் அடிக்கிறார். ராதிகா இல்ல அது சாம்பார் என்ன சொல்ல பருப்பையே காணும் என கேட்க உள்ள இருக்கு என கூறுகிறார். சாம்பார்ல பருப்பு நிறைய போடணும் வாசனை அப்படி வரணும் என கூறுகிறார்.

பிறகு சாப்பாட்டை குக்கரில் வைத்தயா? எனக்கு சுகர் இருக்கறதுனால குக்கரில் வைக்கக்கூடாது பானைல வச்சி அலையவிட்டு வடிக்க வேண்டும், பாக்கியா அப்படித்தான் செஞ்சு தருவார் என கூற ராதிகா கோபியை முறைக்கிறார். கோபி என்ன செய்வது என தெரியாமல் தவித்து சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிட்டு சூப்பர் என பாராட்டிக் கொண்டே இருக்கிறார்.

இந்த சாப்பாடு சாப்பிட எவ்வளவு பொய்யைக் கேட்க வேண்டியது இருக்கு பாரு இனியா என தாத்தா சொல்ல ராதிகா கோபியை பார்த்து இன்னும் அதிகமாக முறைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

2 days ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

2 days ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

3 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

3 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

3 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

3 days ago