பாக்கியாவை கடுப்பேற்றும் கோபி.. காத்திருந்த டுவிஸ்ட்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்யா தன்னுடைய மாமனாரிடம் இந்த வேலை தனக்கு ரொம்ப முக்கியம் என பேசி அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கம் கோபி ராதிகாவை சமாதானம் செய்து பாக்கியா மீது பழி சுமத்துகிறார். பார்த்தல்ல அவ எப்படிப்பட்டவ என்று அவளை பிரண்டு பிரண்டு என்று தூக்கி வைத்து கொண்டாடுனயே என ஏத்தி விடுகிறார்.

பிறகு பாக்கியா மாமாவை ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வர அப்போது தடுத்து நிறுத்தும் கோபி இப்ப உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே தப்பு பண்ணிட்டியே பார்த்தியா என்று யோசிக்க தோணுமே என கோபி பேச்சை தொடங்கி இனிமே ஒவ்வொரு நிமிஷமும் நீ கஷ்டப்படுவ. திட்டம் போட்டு என் குடும்பத்தார் முன்னாடியே என்ன அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பனல. இனிமேதான் என்னுடைய அருமை உங்களுக்கு புரியும்.

எங்க என்ன பெத்த அப்பன் மேல எனக்கு ரூம்லயாவது உட்கார வச்சிருக்கியா இல்ல பயந்து கிளம்பி போயிட்டாரா என கேட்கிறார். மேலும் வீட்ல பேசி ரூம்ல ராணி மாதிரி உன்னை வைத்திருந்தேன் ஆனா இன்னைக்கு சமைக்க வந்திருக்க உன்னை வாழ்க்கை எங்க கொண்டு வந்து விட்டிருக்குனு பார்த்தியா? எல்லாரும் உன்ன அனுப்ப முடிவு பண்ணிட்டாங்க நான் தான் இருக்கட்டும் என சொன்னேன் எதுக்கு தெரியுமா நான் ராதிகா கழுத்துல தாலி கட்டுவதை நீ பார்த்து கஷ்டப்படணும் அதை நான் பார்த்து சந்தோஷப்படணும் என கூறுகிறார்.

கோபி வரி வரியாக வசனம் பேச பாக்யா பேசி முடிச்சிட்டீங்களா நான் கிளம்பட்டுமா என ஒத்த வார்த்தையில் பதில் அளித்து பல்பு கொடுக்கிறார். பிறகு வாழ்த்துக்கள் என சொல்ல கோபி ஷாக் ஆகிறார். 25 வருஷமா பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்று சொன்னிங்களே இப்போ புடிச்ச வாழ்க்கையை வாழ போறீங்க அதுக்கு தான் வாழ்த்துக்கள் சொன்னேன் என சொல்கிறார்.

அதன் பின்னர் 25 வருஷமா பிடிக்காம வாழ்ந்தேன்னு நீங்க சொன்ன மாதிரி பொம்பளைங்க நாங்க சொல்ல ஆரம்பிச்சா உங்களால தாங்க முடியாது. அதனாலதான் நாங்க சொல்லாம இருக்கோம் என சொல்லி கோபிக்கு பிபி ஏத்துகிறார். பிடிக்காத வேலையா கஷ்டப்பட்டேன்னா யார் சொன்னது எனக்கு சந்தோஷம் கொடுக்குற வேலையை செஞ்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கேன் என கூறுகிறார் பாக்யா.

இந்தப் பக்கம் வீட்டுக்கு வந்த கோபியின் அப்பா வீட்டில் யாரிடம் எதுவும் சொல்லாமல் இருக்க அவருடைய முகம் ஒரு மாதிரியாக இருப்பதை பார்த்து ஈஸ்வரி மற்றும் ஜெனி என இருவரும் பதவி போய் என்ன ஏது என விசாரிக்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

இன்ஸ்டாகிராமில் போட்ட வீடியோவால் சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு வந்த பிரச்சனை..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…

3 hours ago

விஜயா கேட்ட கேள்வி, சுருதி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…

3 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, மகேஷ் விட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…

1 day ago

அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு

அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…

1 day ago

விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட்

விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…

1 day ago