baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி உடைந்தால் ராதிகா மன்னிப்பு கேட்க மன்னிப்புன்னு கேட்டா எல்லாம் சரியா போயிடுமா என்ன? என்னைக்கும் விட்டுக் கொடுக்காத என் அம்மா இன்னைக்கு என் புள்ளையே இல்ல செத்துப் போயிட்டான்னு தலை மூழ்கிட்டாங்க என்று சொல்லி அழுகிறார்.
அம்மா அப்படி பண்ண மாட்டாங்கனு நான் எவ்வளவு சொல்லியும் நீ கேட்கல, அவங்கள கோர்ட்டு கேஸ்னு கொண்டு போய் நிறுத்திட்டீங்க. எந்த ஒரு பிள்ளையும் செய்ய கூடாத பாவத்தை என் அம்மாவுக்கு நான் செஞ்சிட்டேன் ரொம்ப நன்றி என்று சொல்கிறார்.
இதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டில் எல்லோரும் ஒன்று கூடி ஈஸ்வரி செய்த விஷயத்தை பற்றி பேசுகின்றனர். செல்வி அம்மா இப்படி எல்லாம் பேசுவாங்க நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. உன்னை அவங்க பொண்ணுன்னு சொல்லும்போது எனக்கு புல்லரிச்சுருச்சு. இப்பதான் அவங்களுக்கு உன்னுடைய அருமை புரியுது.. எல்லாம் சரிதான் ஆனால் பார்க்கிங் ஏரியாவுக்கு கோபி சாரை இழுத்துட்டு போய் அங்க தலையில தண்ணி ஊத்தி இருக்கலாம். எனக்கு தான் பெண்டு கழண்டு போச்சு என்று சொல்கிறார்.
அடுத்து பாக்கியா நடந்து வர எதிரில் ராதிகா மயூவுடன் வர பாக்கியா மயூவுக்கு நன்றி சொல்லி ராதிகாவிடம் பொண்ணை நல்லா வளர்த்திருக்கீங்க என்று சொல்ல எதுக்கு இப்படி டிராமா போடுறீங்க நீங்க என்ன அன்னை தெரசாவா என்று அதிர்ச்சி கொடுக்கிறார் ராதிகா. என்னை கேட்காமல் என் பொண்ணை எப்படி கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரலாம் இதுவே நான் இனியாவ கூட்டிட்டு போயிருந்தா உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கோபப்படுகிறார்.
பாக்கியா நான் செஞ்சது தப்புதான் என்று மன்னிப்பு கேட்க தெரியாம செஞ்சாதான் மன்னிப்பு, தெரிஞ்சு செஞ்சா அதுக்கு மன்னிப்பு கிடையாது. இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் இருக்காது என்று சொல்லிவிட்டு கிளம்பி வருகிறார்.
அடுத்து ராமமூர்த்தி ஈஸ்வரிக்கு ஜூஸ் கொடுத்து எதைப் பத்தியும் யோசிக்காத நிம்மதியா இரு என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க மீண்டும் வாசலில் வந்து நின்று கோபி அம்மா என்று கூப்பிட்டதும் ஆவேசப்படும் ராமமூர்த்தி அங்கேயே நில்லு, உள்ள வந்த காலை வெட்டிடுவேன் என்று எச்சரிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…