தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோட்டில் ஒவ்வொருத்தருக்காக பதில் சொல்லியபடி பாக்கியா நடந்து வர மயூவை வழியில் பார்க்க ஏன் வெளியே நின்று இருக்க என்று கேள்வி கேட்கிறார். வீட்ல யாரும் இல்ல சாவியும் இல்லை, போன் உள்ள இருக்கு அதனால அம்மாவுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்று சொல்ல பாக்கியா தனது வீட்டுக்கு கூப்பிட மயூ இல்ல ஆன்ட்டி நான் பார்க்குக்கு போய் படிக்க போறேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறார்.
பிறகு பாக்கியா மீண்டும் பார்க்கிற்கு வந்து மயூ பக்கத்தில் துணையாக உட்கார பாக்கியா டல்லாக இருப்பதை பார்த்து மயூ என்னாச்சு என்று கேட்க ஈஸ்வரி பற்றி பேசி கண் கலங்க பாட்டி எந்த தப்பும் பண்ணல.. அம்மா ஃபிளவர் கேஸ் தடுக்கி தான் கீழே விழுந்தாங்க.. பாட்டி அவங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் வந்தாங்க.. அப்போ நானும் அங்க தான் இருந்தேன் என்று உண்மையை உடைக்க இந்த விஷயத்தை நீ வீட்டில் யார்கிட்டயும் சொல்லலையா என்று பாக்கியா கேட்க வீட்ல எல்லாரும் மாறி மாறி சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க அதனால சொல்ல பயமா இருந்தது உங்ககிட்ட தான் சொல்றேன் என்று சொல்கிறார்.
இருவரும் பேசிக் கொண்டிருக்க கமலா ராதிகா அங்கு வர இவ கூட என்ன பேச்சு என்று கேட்டு பாக்யாவை அவமானப்படுத்தி பாக்கியா கொடுத்த ஸ்நாக்ஸையும் தட்டிவிட்டு மயூவை கூட்டிக்கொண்டு செல்கிறார்.
பழனிச்சாமியுடன் வந்து லாயரை சந்தித்து விஷயத்தை சொல்ல அவர் மயூ சாட்சி சொன்னால் ஈஸ்வரி வெளியே வந்துடுவாங்க என்று சொல்கிறார். பாக்கியா மயூவை பேச வைத்து வீடியோ கொடுக்கலாமா என்று கேட்க அதெல்லாம் ஆதாரமா எடுத்துக்க மாட்டாங்க நேர்ல வந்து சொன்னா மட்டும்தான் உங்க மாமியார் வெளியே வர முடியும் என்று சொல்ல குழந்தையை எப்படி கூட்டி வர முடியும் என்று பாக்கியா கேள்வி கேட்கிறார்.
பழனிச்சாமி ராதிகாவுக்கு தெரியாம கூட்டிட்டு தான் வரணும் என்று சொல்கிறார். இதை அடுத்து பாக்யா வீட்டுக்கு வர ராமமூர்த்தி ஈஸ்வரிய வெளிய எடுக்க ஒரே வழி தான் இருக்கு நான் போய் ராதிகா காலில் விழுந்து கேஸை வாபஸ் வாங்க சொல்ல போறேன் என்று கிளம்பிச் செல்ல பாக்கியா அவரை தடுத்து நிறுத்து அத்தை வெளிய வந்துருவாங்க கண்டிப்பா எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறார்.
பிறகு எழில் செழியனிடம் என்ன பண்ண போறோம்னு தெரியாது ஆனா நாளைக்கு கண்டிப்பா ஒரு அதிசயம் நடக்கும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
All Pass Trailer | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen
Aasai Varame Video Song | Anbil Avan | Ashok Selvan, Preity Mukhundhan | Govind Vasantha…
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…