தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சாவித்திரியை அழைத்து வந்து சர்ப்ரைஸ் கொடுக்க அவர் கல்யாணத்தில் ஈஸ்வரி செய்த கலாட்டாக்களை சொல்லி கிண்டல் செய்கிறார்.
மறுபக்கம் செழியன் டீ கேட்டு கீழே இறங்கி வர செல்வி வேலையாக இருப்பதால் ஜெனி நான் போட்டு தரேன் என்று சொல்லி டீ போட போய் சர்க்கரையையும் டீ தூளையும் அளவில்லாமல் அள்ளி போடுகிறார். ஜெனி டீ போட்டுக் கொண்டு வந்த நேரத்தில் எழிலும் வந்து வான்டட்டாக சிக்க செழியன், எழில் என இருவரும் டீயை குடித்துவிட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
எழில் சமையலுக்கும் உங்களுக்கும் சுத்தமா செட்டாகாது.. தயவுசெய்து இந்த மாதிரி எல்லாம் திரும்ப ட்ரை பண்ணாதீங்க என்று சொல்ல ஜெனி நான் திரும்பவும் டீ போட்டுக் கொண்டு வருகிறேன் என்று சொல்ல ஆளாளுக்கு ஒரு திசையில் அலறி அடித்து ஓடுகின்றனர்.
அடுத்ததாக மறுநாள் காலையில் கோபி தூக்கத்திலிருந்து எழுந்ததும் ராதிகா நைட்டு என் அம்மாவை எதுக்கு அப்படி மரியாதை இல்லாம பேசுனீங்க என்று கேள்வி கேட்க கோபி உங்க அம்மா தான் பிரச்சினையை கிளப்பி இருப்பாங்க என்று பதில் சொல்ல அங்கு வந்த கமலா உங்க அம்மா ஒரு கொலைகாரி என பேச கோபி கோபப்படுகிறார். திரும்பத் திரும்ப நான் அப்படித்தான் சொல்லுவேன் என்று கமலா பேசிய படியே இருக்க கோபி இனிமே ஒரு வார்த்தை பேசினீங்க அவ்வளவு தான் என்று அடிக்க கை ஓங்க கமலா கதி கலங்கி நிற்கிறார்.
பிறகு ராதிகா கோபியின் சட்டையை பிடித்து என்ன பண்றீங்க? என் அம்மாகிட்ட மரியாதையா மன்னிப்பு கேளுங்க என்று கோபப்பட கோபி மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்கிறார். பிறகு கிச்சனுக்கு வந்த கோபி இதே டென்ஷனில் அங்கு இருப்பவர்களிடம் சத்தம் போடுகிறார்.
அடுத்ததாக கோபியின் நண்பன் சதீஷ் கிச்சனுக்கு வர டென்ஷனாக இருந்த கோபியை கூல் செய்கிறார். வேலை செய்றவங்க கிட்ட இப்படி சத்தம் போடாதே அவங்க கிளம்பி போயிட்டா உனக்கு தான் கஷ்டம் என்று அட்வைஸ் செய்கிறார். பிறகு நேற்று பாரில் நடந்த விஷயத்தை சொல்ல கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…