தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி அப்படியே உடைந்து போய் அழுதபடியே இருக்க பாக்கியா சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தும் வேண்டாம் என சொல்கிறார். ராமமூர்த்தி பாக்கியா என இருவரும் மாறி மாறி ஆறுதல் சொல்ல இனியா அவங்கள மாதிரி எனக்கு பேச தெரியாது ஆனா நீங்க ரொம்ப நல்லவங்க பாட்டி நீங்க அழாதீங்க நீங்க அழுதா எனக்கும் அழுக வருது என்று சொல்கிறார்.
இதையடுத்து கோபி ராதிகாவிடம் பேச பார்க்க ராதிகா உங்கள கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாம் கல்யாணத்துக்கு பிறகு என் சந்தோஷம் மொத்தமா போச்சு. இப்போ உங்க அம்மாவால என் குழந்தையும் போச்சு என்று கோபப்பட என் அம்மா அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க என்று கோபி பேச ராதிகா உங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க என்று கோபப்படுகிறார்.
ஈஸ்வரி சாப்பிடாமல் உடைந்து போய் உட்கார்ந்திருக்க பாக்கியா ராதிகா வீட்டிற்கு கிளம்பி வருகிறார். பாக்யாவை பார்த்ததில் கமலா நீ எதுக்கு இங்க வந்த என்று கோபப்பட்டு பேசி வெளியே போடு என துரத்தி கதவை சாத்த முயற்சி செய்ய பாக்கியா தடுத்து நிறுத்தி உள்ளே நுழைந்து ராதிகாவிடம் எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரிக்க ராதிகா இங்கு எதுக்கு வந்தீங்க என்று கோபப்படுகிறார். அத்தையை பத்தி நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க என்று பேச முயற்சிக்க ராதிகா உங்க விளக்கத்தை நான் கேட்க விரும்பல என்று சொல்கிறார். நீங்க இன்னைக்கு நேற்று நடந்ததை வச்சி பேசுறீங்க.. அதுக்கு முன்னாடியே நமக்குள்ள ஒரு நல்ல நட்பு இருந்தது அந்த நட்பை வைத்து தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என்று சொல்கிறார். என்னுடைய ஆறுதல் உங்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம் சரி பரவால்ல என்று பாக்கியா வெளியே கிளம்பி வருகிறார்.
எதிரே கோபி வர பாக்யாவை பார்த்ததும் நீ இங்க என்ன பண்ற என்று கேள்வி கேட்க பாக்கியா உங்க அம்மாவை பார்த்து நீ எப்படி அப்படி கேட்கலாம்? உங்க அம்மா அப்படி பண்ற ஆளா நீங்களே உங்க மனசாட்சியை தொட்டு பேசுங்க. எல்லாரையும் தூக்கி போட்டுட்டு என் பையன் தான் வேணும்னு உங்க கூட வந்தாங்க அவங்கள நீங்க இப்படி காயப்படுத்தி அனுப்பலாமா? மத்தவங்க ஆயிரம் சொல்லலாம் உங்க அம்மாவ நீங்க புரிஞ்சுகிட்டது இவ்வளவு தானா என் பையனை இப்படி சொல்லிட்டானேனு அவங்க சாப்பிடாம தூங்காம அப்படியே புலம்பிய படியே இருக்காங்க என்று திட்டிவிட்டு கிளம்பி வருகிறார்.
பிறகு பாக்கியா ஈஸ்வரியை சரி செய்ய அவர் நேற்று நாளா போகணும்னு நினைச்சேன் கும்பகோணம் பக்கத்துல இருக்க கோவிலுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…