ஈஸ்வரியை சந்தித்த பாக்யா, சோகத்தில் செழியன், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் டல்லாக இருப்பதை பார்த்தியா என்ன ஆச்சு என்று கேட்க மீட்டிங் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன் என்று சமாளிக்கிறார்.

இந்த நேரத்தில் கொண்டு விசில் அடித்துக் கொண்டு எழில் கீழே வர இதை பார்த்து பாக்யா என்னடா ரொம்ப சந்தோசமா வர என்ன விஷயம் என்று கேட்க அமிர்தா கதையை மொத்தமா எழுதி முடிச்சிட்டாரு அதனாலதான் இவ்வளவு சந்தோஷம் என்று சொல்கிறார். செழியன் டல்லாக உட்கார்ந்து இருப்பதை பார்க்க எழில் நான் கதை சொல்றேன் கேக்குறியா என்று கேட்க செழியன் இப்ப வேண்டாம் ஈவினிங் கேட்டுக்கிறேன் என்று ஆபிஸ் கிளம்பி செல்கிறார்.

அதன் பிறகு பாக்கியா ராமமூர்த்தியிடம் நான் போய் அத்தையை பார்த்துட்டு வரேன் என்று சொன்னதும் அவர் எதுக்கு மா அவ ரொம்ப பண்ணுவ என்று சொல்ல எனது இருந்தாலும் அவங்க என்னுடைய அத்தை என்று கிளம்பி வருகிறார். பிறகு பாக்கியா ஈஸ்வரியை கோவிலில் சந்தித்து பேச ஈஸ்வரி சரியாக முகம் கொடுத்து பேசாமல் இருக்கிறார். உங்களுக்காக என் கையால பொங்கலும் வடையும் செய்து கொண்டு வந்தேன் என்று சொல்ல ஈஸ்வரி எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று பில்டப் கொடுக்க பாக்யா இங்க வைக்கிறேன் சாப்பிட்டா சாப்பிடுங்க இல்லைன்னா இங்கேயே வச்சுட்டு போயிடுங்க என்று சொல்லி கோவிலுக்கு செல்ல ஈஸ்வரி நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு என்று பாக்யாவின் சாப்பாட்டை ருசித்து சாப்பிடுகிறார். இதை பின்னாடி இருந்து பாக்கியா கண்ணீர் விட்டு சந்தோஷப்படுகிறார்.

பிறகு ஈஸ்வரியிடம் எதுக்கு அத்தை நீங்கள் அங்கிருந்து கஷ்டப்படணும்? நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. மாமாவும் நீங்க இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாரு. குழந்தைகளும் உங்களை தேடுறாங்க என்று சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் இப்போ வர முடியாது அப்படியே வந்த கோபி கஷ்டப்படுவான் கொஞ்ச நாள் இப்படியே போகட்டும் என்று சொல்கிறார். பிறகு வீட்டில் இருப்பவர்கள் துடித்து நலம் விசாரிக்கிறார்.

அடுத்து இரண்டு பேரும் ஒன்றாக கிளம்பி வீட்டுக்கு வரும்போது கோபி வழியில் பார்த்து ஈஸ்வரியை கூட்டி வந்து விட ஈஸ்வரி பாக்யாவை பற்றி பெருமையாக பேசுகிறார். அதைத்தொடர்ந்து பாக்கியா ரெஸ்டாரன்ட் வர பார் பூட்டி கிடப்பதை பார்த்து செல்வியை கூப்பிட்டு என்ன விஷயம் என்று விசாரிக்க செல்வியும் எனக்கு எதுவும் தெரியல என்று சொல்கிறார்.

பிறகு பார் ஓனர் ரெஸ்டாரண்டுக்கு வந்து மிக நெனச்சா மாதிரியே நடந்திடுச்சு பக்கத்துல ஸ்கூல் இருக்கு, கோவில் இருக்குனு பாரை மூடிட்டாங்க நீங்க தானே கம்ப்ளைன்ட் பண்ணீங்க என்று கேட்க பாக்கியா இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார். பிறகு சமைத்ததுக்கான பணத்தைக் கேட்க பாரையே மூடிட்டாங்க நான் எதுக்கு பணம் தரணும்? என்று சொல்லி வெளியே செல்ல செல்வி எனக்கு என்னவோ இவர்கிட்ட பணத்தை வாங்க முடியாதுன்னு தான் தோணுது என்று சொல்ல அது எப்படி முடியாம போகும் வாங்கி காட்டுறேன் என்று சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

jothika lakshu

Recent Posts

Muthe Video Song

Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…

1 day ago

Nova Trailer

Nova – Phase 1: The Arrival - Trailer | Raiza Wilson | Dhurva | Sendrayan…

1 day ago

Karuppa Kooda Va Lyric Video

Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…

1 day ago

மொரிஷியஸுக்கு சென்ற ஹன்சிகா

கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…

1 day ago

கருப்பு படத்தில் ‘ப்ரீத்தி’யாக த்ரிஷா!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…

1 day ago

நடிகை சிம்ரன் அடுத்த பட அப்டேட் வெளியிட்ட விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…

1 day ago