தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியை வீட்டுக்கு வரவைத்து ஈஸ்வரி இவ காபி கொடுக்கிற மாதிரி கொடுத்து தட்டி விட்டுட்டா என்று சொல்ல கமலா நானா தட்டிவிட்டேன்? நீங்களே கீழே போட்டுட்டு இப்படி பேசாதீங்க என்று இருவரும் சேர்ந்து மாறி மாறி வாக்குவாதம் செய்ய கோபி அம்மாவை கூட்டிக்கொண்டு கிச்சனுக்கு வருகிறார்.
கிச்சனில் ஈஸ்வரியை உட்கார வைத்துவிட்டு வேலை சரியாக நடக்காததால் எல்லோரிடமும் டென்ஷனாக பேசிக்கொண்டு இருக்கிறார். மறுபக்கம் ஜெனி நான் எதுக்குமே லாயக்கு இல்ல அமிர்தா வீட்ல இருந்து இருந்தா எல்லாத்தையும் சரியா பார்த்திருப்பாங்க என்று கண்ணீர் விட்டு கலங்குகிறார். பாக்கியா அப்படி எல்லாம் ஒண்ணுமே கிடையாது இந்த ரெண்டு பேருமே நல்ல பொண்ணுங்க தான். நீ எதுக்கு இப்படி எல்லாம் நினைச்சிட்டு இருக்க என்று ஆறுதல் சொல்கிறார்.
இதை தொடர்ந்து ஈஸ்வரி கிச்சனில் என்ன இப்படி எல்லாம் கூட்டிட்டு வந்து அலைய வைக்காத என்னால முடியல என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து வருகிறார். வீட்டுக்கு வந்ததும் கமலா அம்மா அங்க தான் குழந்தைங்கள கூட்டிட்டு போய் பார்த்து இருக்கேன் ஆனா இங்க அப்படியே தலைகீழாக இருக்கு என்று பிரச்சனையை கிளப்ப ஈஸ்வரி பதிலுக்கு வாக்குவாதம் செய்ய இருவரும் மாறி மாறி சத்தம் போடுகின்றனர்.
ஈஸ்வரி இனிமேல் இவ இங்கே இருக்கக் கூடாது.. இப்பவே வெளியே போக சொல்லு என்று கோபியிடம் சொல்கிறார். இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…