எழிலிடம் சிக்கிய கோபி,கோபத்தில் ராதிகா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடு பாக்கியா கோபியிடம் வந்து யாரோ ஒருத்தர் பிசினஸ் பண்ண தெரிஞ்சா போதும் சமைக்க தெரியணும்னு அவசியம் இல்லன்னு சொன்னாங்க. ஆனா இப்போ பிசினஸ் தெரியலனாலும் கத்துக்கலாம் ஆனா சமையல் தெரியாம சமையல் பிசினஸ் பண்ண முடியாதுன்னு புரிஞ்சிருக்கும் என்று பல்பு கொடுத்துவிட்டு ஏதாவது உதவி தேவைன்னா சொல்லுங்க என்று ஈஸ்வரி இடமும் பேச கோபி அவமானப்பட்டு நிற்கிறார். அதேபோல் ஆர்டர் டெலிவரி ஆனதும் நைசாக எஸ்கேப்பாக பார்க்க கோபியை பிடித்து பணம் வேண்டிய என்று கேட்க அக்கவுண்டுக்கு வந்து சேரும் என சொல்கிறார். பாக்கியா நம்பலாமா என்று கேட்க ஈஸ்வரி நான் வாங்கி தரேன் என்று சொல்கிறார். ‌

அடுத்ததாக வீட்டுக்கு வந்த பிறகு அமிர்தா, ஜெனி, செல்வி, எழில் பாக்யா என எல்லோரும் உட்கார்ந்து கோபி ரெஸ்டாரன்ட் இல் நடந்த விஷயத்தை பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா தர செல்வி நடந்த விஷயத்தை கொளுத்தி போட ராதிகா கோபமாக மேலே வருகிறார்.

கோபியிடம் எப்படி டைமிங் சாப்பாடு வந்தது எப்படி சமாளிச்சீங்க என்று கேட்க அம்மா வந்தாங்க ஒரு மணி நேரத்தில எல்லாத்தையும் டக்கு டக்குன்னு சமைச்சு முடிச்சாங்க எல்லாருக்கும் டெலிவரி பண்ணியாச்சு, யார் உன் புருஷன் கெத்து இல்ல மாஸ்னா என்று டயலாக் விட ராதிகா எல்லாம் எனக்கு தெரியும் என்று கோபியை கொடுத்து விளாசுகிறார். உங்களுக்கு வேற ரெஸ்டாரண்டை கிடைக்கலையா என்று திட்டுகிறார்.

இது ராமமூர்த்தி உனக்கு இதெல்லாம் தேவையா என்று திட்டிக் கொண்டிருக்க ராதிகா கோபியுடன் வந்து எதுக்கு இதெல்லாம் பண்ணி வச்சிருக்கீங்க என்று ஈஸ்வரி இடங்களில் சண்டை போடுகிறார். பாக்கியா உன்கிட்ட நக்கலா பேசறீங்களா அதை வெளியே எங்கிட்ட நக்கலா தான் பேசுனா என்று கேட்க ராதிகா ஏற்கனவே இவர் வீம்புக்கு தான் இந்த பிசினஸ் பண்றாரு எல்லாரும் நினைச்சு இருக்காங்க, அப்படி இருக்கும் போது அவங்க கிட்டயே ஆர்டர் கொடுத்தார் ஒண்ணுமே தெரியல இவருக்குன்னு நினைக்க மாட்டாங்களா? என்று சத்தம் போட ராமமூர்த்தி நீ சொல்றது எல்லாம் சரிதான் நான் அவ கிட்ட பேசிக்கிறேன் நீ போமா என அனுப்பி வைக்கிறார்.

பிறகு பாக்யா மற்றும் எழில் கிச்சனில் இருக்க கோபி தண்ணி பிடிக்க வர எழில் காலையிலிருந்து நைட் வரைக்கும் எவ்வளவு வேலை தான் செய்த இதுல வேற அடுத்தவங்க ரெஸ்டாரண்டுக்கு சமைச்சு தந்திருக்க என்று பேச கோபி பூனை போல தண்ணீர் பிடித்துக் கொண்டு வெளியே செல்லும்போது என்ன சிரிக்கிற என்று பாக்கியாவிடம் வம்பு இழுக்கிறார். எனக்கு உன்னோட ரெஸ்டாரன்ட்ல ஆர்டர் பண்ணி இருக்காங்கன்னு தெரியாது தெரிந்து இருந்தால் கேன்சல் பண்ணி இருப்பேன் என்று வீரவசனம் பார்க்க நான் சாப்பாடு கொண்டு வந்தேன் அப்பவே நீங்க வேண்டாம்னு சொல்லி இருக்கலாமே என்று பாக்கியா கேள்வி கேட்க அம்மா ஆர்டர் பண்ணவே நான் அமைதியா இருந்துட்டேன் என்று டயலாக் அடிக்கிறார்.

ஏம்மா உங்கள பிரச்சனையிலிருந்து காப்பாத்தி தான் இருக்காங்க அதுக்காக நீங்க அவங்களுக்கு நன்றி தான் சொல்லணும் என்று எழில் சொல்ல கோபி அப்படியா ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு இப்பொழுது நிம்மதியா தூங்குவியா என்று கேட்க நான் எல்லா நாளும் நிம்மதியா தான் தூங்குறேன் இன்னைக்கு எக்ஸ்ட்ரா நிம்மதியா தூங்குவேன்.

ஏன்னா நான் எதுக்குமே லாயக்கு இல்லன்னு சொன்னங்களுக்கு உதவுற அளவுக்கு வளர்ந்து இருக்கேன் அது பெரிய சாதனை தானே என்று சொல்லிவிட்டு போக எழில் இப்போ உங்க தூக்கம் போச்சா தேவையா இதெல்லாம் என்று கோபியை நக்கல் அடித்து விட்டு செல்ல என்னடா இது ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் அடிக்கிறாங்க என்று கோபி புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

15 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

15 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

15 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

15 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

15 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

1 day ago