ராதிகா கொடுத்த ஷாக், கடுப்பான ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா சின்ன சின்ன வேலை செய்யப்போன செல்வி திட்டி நீ எந்த வேலையையும் செய்யாத என கோபப்படுகிறார்.

அதன் பிறகு ஈஸ்வரியும் இனியாவும் பேசிக் கொண்டிருக்க கோபி கீழே இறங்கி வர ராதிகா மயூவை பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது கோபி ராதிகாவிடம் பேச ராதிகா எதையும் பேசாமல் மேலே சென்று விட இனியா நேத்து நைட்டு அவங்க ரெண்டு பேருக்கும் சண்டை என்று சொல்கிறார்.

அதன் பிறகு ராதிகா கீழே இறங்கி வரும்போது ஈஸ்வரி அவனிடம் எதுக்கு சண்டை போட்டுட்டு இருக்க அவனே உடம்பு முடியாதவன் என்று சொல்ல நான் மட்டும்தான் சண்டை போடுறனா என்று கேட்க ஈஸ்வரி வேற யாரு சண்டை போடறாங்க என்று கேள்வி எழுப்ப நீங்கதான். நீங்க மாமாவோட சண்டை போடாமலா இருக்கீங்க? எப்ப பார்த்தாலும் எதையாச்சு திட்டிட்டு தானே இருக்கீங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

மேலும் உங்க புள்ள கிட்ட ஒன்னு நான் சும்மா சும்மா சண்டை போடல அவர் அவ்வளவு பொய் சொல்றாரு என்று கோபப்படுகிறார். நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க என்று ஈஸ்வரியை கேள்வி கேட்க அவர் கடுப்பாகிறார். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அவரை நான் மாத்துறேன் என்று மேலே செல்கிறார்.

அடுத்ததாக பாக்கியாவின் புதிய ஹோட்டலில் சாப்பிட ஆள் இல்லாமல் காத்து வாங்க சமைத்ததெல்லாம் அப்படியே இருக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் பாக்கியம் புதுசுல அப்படித்தான் இருக்கும் போக போக எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்.

அடுத்து வீட்டுக்கு வரும் அவர் ஈஸ்வரி ராமமூர்த்தியை சாப்பிட கூப்பிட அவர்கள் இப்பதான் மாத்திரை போட்டோம் அப்புறம் சாப்பிடலாம் என்று சொல்கின்றனர். செழியன் சாப்பிடாமல் காத்திருக்க அவருக்கு ஆறுதல் சொல்லி கூட்டி வந்து சாப்பிட வைக்கிறார்.

மறுபக்கம் கோபி ராதிகாவுடன் கிளவுட் கிச்சன் டிசைன் தொடங்கப் போவதாக சொல்ல அவர் உங்களுக்கான பணத்தை நான் கொடுக்கிறேன் என சொல்கிறார். இரவு ஆனதும் கிச்சனில் பாக்கியா எனக்கு தாசி ஊத்திக் கொண்டிருக்க அமிர்தா இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க கோபி அம்மா அப்பாவிடம் கிளவ்டு கிச்சன் தொடங்க போவதாக சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

11 hours ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

12 hours ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

12 hours ago

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

12 hours ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

14 hours ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

1 day ago