தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா விதவிதமாக ஆர்டர் செய்ய எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டு மகிழ்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து கணேஷ் வீட்டில் கணேஷ் காணாமல் அவரது பெற்றோர் பதற்றம் அடைய அமிர்தா போன் செய்து கணேஷ் கனவில் வந்த விஷயத்தை சொல்ல இருவரும் இன்னும் அதிர்ச்சியாகின்றனர். பிறகு எழில் வந்து போனை வாங்கி நீங்க ஒன்னும் பயப்படாதீங்க கணேஷ் எதுக்கு அப்படி பண்ண போறாரு அவர் அமிர்தா நல்லா இருக்கணும்னு தான் நினைப்பாரு என்று பேசிக் கொண்டிருக்கும் போது கணேஷ் வந்துவிட இவர்கள் ஃபோனை வைத்து நிலைமையை சமாளிக்கின்றனர்.
கணேஷ் யார் கிட்ட பேசிட்டு இருந்தீங்க என்று விசாரிக்க தெரிஞ்ச பையன் கிட்ட அமிர்தாவை பற்றி விசாரிக்க சொல்லி இருந்தோம் என்று கூறுகின்றனர். நீ எங்க போயிட்டு வந்த என்று கணேஷிடம் கேட்க அமிர்தா வீட்டுக்கு என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். ஆனா அங்க யாரும் இல்ல அதனால திரும்பி வந்துட்டேன் என்று சொல்கிறார்.
அடுத்ததாக பாக்கியா செழியனுக்கு போன் செய்து ஜெனியை போய் பார்த்துவிட்டு வருமாறு சொல்ல செடியின் வேறு வழியின்றி ஜெனியை பார்க்க போக ஜெனி எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு இன்னைக்கு ஒரு நாள் நீ என் கூட இல்லை என்று சொல்ல செழியன் வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவிக்கிறார்.
அடுத்து இங்கே எல்லோரும் சென்னைக்கு கிளம்ப தயாராக கோபி இனியாவுக்கு போன் செய்து உங்க அம்மா கிட்ட குடு என்று சொல்கிறார். பிறகு பாக்யாவிடம் போன் கொடுக்க கோபி போகும் போது ஏகப்பட்ட பிரச்சனை பண்ணிட்ட, வரும்போது ஒழுங்கா வந்து சேருங்க எங்க அம்மாவுக்கும் பொண்ணுக்கு மட்டும் ஏதாச்சு ஆச்சு என்று கோபி சொல்ல என்ன பண்ணுவீங்க கொலை பண்ணிடுவீங்களா? இல்ல தலையை எடுத்து விடுவீங்களா என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார் பாக்கியா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…