baakiyalakshimi serial episode update 17-12-2024
கோபிக்காக ஈஸ்வரி பாக்யாவின் காலில் விழுந்துள்ளார்.
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவில ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமஇந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை வீட்டை விட்டு இன்னும் இரண்டு நாட்களில் வெளியேறுமாறு சொல்ல, போகவில்லை என்றால் என்ன பண்ணுவ என்று ஈஸ்வரி கேட்க நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன். யோசிக்கவே மாட்டேன் என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். கோபி ஆயிரம் தான் இருந்தாலும் இது பாக்யாவோட வீடுமா நான் கிளம்புறேன் என்று சொல்ல எங்க போவ ராதிகா வீட்டுக்கா நீ அங்க போகக்கூடாது அவ உன்ன டென்ஷன் ஆக்குவா பாக்யா கிட்ட நான் பேசிக்கிறேன் என்று சொல்லும் போதே கோபி அதிகமாக மூச்சு வாங்கி நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே உட்காருகிறார். உடனே பக்கத்தில் இருக்கும் டாக்டரை கூட்டிட்டு வந்து செக் பண்ணி பார்க்க பிபி அதிகமாயிருக்கு, இவர் டென்ஷன் ஆகுற மாதிரி ஏதாவது நடந்து தான் என்று கேட்ட டென்ஷன் பண்ணாதீங்க அவரோட ரிலாக்ஸா இருக்கணும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
உடனே ஈஸ்வரி பாக்யா கிட்ட நான் பேசுகிறேன். நீ வந்து ரெஸ்ட் எடு என்று கோபியை வற்புறுத்தி அழைத்து சென்று படுக்க வைக்கிறார் பிறகு ஜெனி ஈஸ்வரியை சாப்பிட கூப்பிட நான் பாக்கியம் வராமல் சாப்பிட வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு பாக்யாவைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து பாக்யா வர நிற்க வைத்து நீ பாட்டுக்கு பேசிட்டு போயிட்ட அதுக்கப்புறம் என்ன நடந்தது தெரியுமா என்று சொல்ல இனியா நடந்த விஷயங்களை சொல்லுகிறார் ஜெனி பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல ஆன்ட்டி பிபி அதிகமாயிடுச்சு என்று சொல்ல உனக்கும் பயப்படறதுக்கு இல்ல உன் ஆண்டிற்கும் பயன்படுத்தும் இல்ல எனக்கு தானே பயம் என் பையனோட உயிர் எனக்கு முக்கியம் என்று சொல்லுகிறார்.
பாக்கியாவிடம் உன்கிட்ட நான் எதுவுமே கேட்டதில்லை ஆனா இப்ப கேட்கிறேன் என் பையனை மட்டும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லாத உன் கால்ல கூட விழுந்து கேட்கிறேன் என்று பாக்யாவின் காலில் விழ பார்க்கிறார் இதனால் பாக்கியா அவரை தடுத்து நிறுத்தி எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார் இந்த மௌனத்தை நான் சம்மதம் என்று எடுத்துக்கிட்டாய் என்று ஈஸ்வரி கேட்க பாக்யா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்கிறார். உடனே ஈஸ்வரி எனக்கு இன்னொன்னு பண்ணனும் பாக்கியா என்று கேட்டு கோபி இப்ப இருக்கிற நிலைமைல கோர்ட் கேஸ்ன்னு அவனால போக முடியாது அவ சின்னதா கூட டென்ஷன் ஆக கூடாதுன்னு சொல்லி இருக்காங்க அதனால நீ கோபி மேல கொடுத்த கேச வாபஸ் வாங்கிடு என்று சொல்ல இன்னைக்கு நீங்க உங்க புள்ளையோட உயிர்காக இவ்ளோ டென்ஷன் ஆகிறீங்க ஆனா அன்னைக்கு பிரியாணி சாப்பிட்டு உயிர் போயிருந்தா என்ன ஆயிருக்கும் அத்தை என்று பாக்யா சொல்லுகிறார்.
எனக்கு எல்லாமே தெரியும் பாக்யா நான் எதையும் கரெக்ட்னு சொல்லல இந்த ஒரு வாட்டி அவன மன்னிச்சுடு நான் உன்கிட்ட மடிப்பிச்ச கேட்கிறேன் என்றெல்லாம் கதறி அழுதே பாக்யாவிடம் வாபஸ் வாங்க சொல்லுகிறார். இனியா மற்றும் செழியன் இந்த நிலைமையில் எப்படிமா கேஸ் நடத்துவ வாபஸ் வாங்கிடு என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். ஜெனி வந்து நிற்க நீயும் இதுதான் சொல்லப் போறியா ஜெனி என்று கேட்க நான் அப்படி சொல்ல மாட்டேன் ராதிகாவை பத்தியும் வீட்ட பத்தியும் நீங்க யோசிக்காதீங்க உங்க மனசுக்கு எது தோணுதோ அதை மட்டும் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
ஈஸ்வரி ரூமில் வந்து உட்காரா கோபி தூங்கிக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரியின் கைபட்டு பொருள் கீழே விழ சத்தம் கேட்டு எழுந்த கோபி பாக்கியா வந்துட்டாளாமா என்று கேட்கிறார் வந்துட்டா நான் பேசிட்டேன் இனிமே நீ இந்த வீட்டை விட்டு போக வேண்டாம் பாக்யாவும் போக சொல்ல மாட்டா என்று சொல்லுகிறார். பாக்யா சொல்றதுதாமா கரெக்டா இந்த வீட்ல இருக்க கூடாது என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல கேசையும் நான் வாபஸ் வாங்க சொல்லி இருக்கேன் என்று சொல்லுகிறார். ராதிகா மட்டும் உன் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் நீ நானும் சந்தோஷமா இருந்து இருப்பேன் என்று சொன்ன ராதிகா நல்லவ தான்மா நான் தான் பாக்கியா சரியா பாத்துக்கல எனக்கு இந்த வீட்ல சந்தோஷம் இல்லை என்று சொல்லி தானே ராதிகாவை கல்யாணம் பண்ண ஆனா இவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையை கெடுத்தது நான்தான் என்று வருத்தப்படுகிறார். கோபிக்கு ஈஸ்வரி ஆறுதல் சொல்லுகிறார்.
கோபி என்ன சொல்லுகிறார்? அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன?கோபி பாக்கியாவிற்காக என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…