ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்கியா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

எழில் பங்க்ஷனுக்கு ராதிகா வர ஈஸ்வரி கோபப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ஆடியோ ரிலீஸ் நடக்கும் பங்க்ஷனுக்கு வந்து இறங்க உள்ளே வரும்போது பத்திரிக்கையாளர்கள் பாக்கியாவை சூழ்ந்து கொண்டு நீங்க தானே பாக்கியலட்சுமி டைரக்டருடைய அம்மா உங்க பேர்லதான படம் ஆரம்பிச்சிருக்காரு என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறார் உங்ககிட்ட இன்டர்வியூ எடுக்கலாமா என்று கேட்க முதல்ல பங்க்ஷன் முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு உள்ளே வருகிறார் உடனே போன் பண்ணலாம்னு நினைச்சேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க பாக்யா எழிலுக்கு வாழ்த்துக்கள் சொல்லுகிறார்.

ஆனால் எழில் பூஜை அன்று பாக்யாவை வர வேண்டாம் என்று சொல்லியது நினைவுக்கு வந்து முகம் மாறுகிறது என்னாச்சு எழில் என்று கேட்க என்னதா இருந்தாலும் நான் உன்னை அப்படி சொல்லி இருக்க கூடாதும்மா ஆனா அன்னைக்கு எந்த இடத்தில் இருந்து உன்னை வரக்கூடாதுன்னு சொன்னேன் எனக்கு அதே இடத்தில் இருந்து உன்ன ஆடியோ ரிலீஸ் உள்ள கூட்டிட்டு போறேன் வாமா என்று சொல்லி அழைத்து செல்கிறார் பிறகு பாக்யா உள்ளே செல்ல அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பாக்கியாவிற்கு ஃபோன் வர வந்துட்டீங்களா நான் வரேன் என்று வெளியில் வந்து பார்க்க ராதிகா காத்துக் கொண்டிருக்கிறார் பிறகு அவரை உள்ளே வர வைக்க கூப்பிட இப்பயும் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க நான் வரதுனால உங்க வீட்டில யாருக்கும் மனசு கஷ்டம் இல்லை என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல வாங்க என்று சொல்லி அழைத்து வர ராதிகா எழிலுக்கு பொக்கே கொடுத்து வாழ்த்துக்கள் சொல்லுகிறார் பிறகு இனியா கட்டிப்பிடித்து நலம் விசாரிக்கிறார். ஈஸ்வரி இந்த பாக்யாவுக்கு எதுக்கு இந்த வேலை என்ற புலம்பி கொண்டு இருக்க அனைவரும் உட்கார்ந்து விடுகின்றனர் உடனே நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது.

முதலில் ப்ரொடியூசரை பேச சொல்ல அவர் படம் நன்றாக வந்திருப்பதாகவும் எழில் சூப்பரா பண்ணி இருப்பதாகவும் பாட்டு எல்லா அருமையா வந்திருக்கு என்று பேசிவிட்டு சென்று விடுகிறார் பிறகு டைரக்டர் எழில் பேச கூப்பிடுகின்றனர்.

எழில் முதலில் பாக்யாவை பற்றி பேசுகிறார் எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை வந்த போது முதல்ல என்னோட அம்மா கிட்ட தான் சொன்னேன் ஆனா அவங்க ஒரு வார்த்தை கூட வேணாம்னு சொல்லல நீ பண்ணு நான் கூட இருக்கேன்னு சொன்னாங்க என் குடும்பத்தோட சப்போர்ட் இல்லனா என்னால இவ்வளவு தூரம் வர முடியாது என்று சொல்லுகிறார். என்னோட இந்த வெற்றிக்கு காரணம் என்னுடைய அம்மா தான் என்று சொல்லுகிறார். பிறகு அமிர்தாவை பற்றி பேசுகிறார் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லுவாங்க எனக்கு அப்படி அமைஞ்சவ தான் அமிர்தா. என்னோட கனவுக்கு என்னைக்குமே குறுக்க நின்னது கிடையாது. ஒரு நேரத்துல எனக்கே என் மேல சந்தேகம் வரும்போது உன்னால முடியும் எழில் என்று சொல்லி எனக்கு தைரியத்தை கொடுத்தது அமிர்தா தான் என்று சொல்ல கண் கலங்குகிறார் அமிர்தா. பிறகு அமிர்தாவிற்கும் நன்றி சொல்கிறார்

அடுத்ததாக ராமமூர்த்தி குறித்து பேசுகிறார். முக்கியமான ஒருத்தர் நா அது என்னோட தாத்தா அவரு எப்பவுமே நான் நல்லா வருவேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு நீ படம் இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும்னு பேசிக்கிட்டே இருப்பாரு ஆனா இப்ப அவர் இல்ல ஆனால் இங்கே எங்கேயாவது ஒரு இடத்துல நின்னு சந்தோஷத்தை பார்த்துட்டு பாரு நம்பர இன்று சொல்லிவிட்டு ஐ மிஸ் யூ தாத்தா என்று சொல்லுகிறார் இதனால் குடும்பத்தினர் அனைவரும் கண்கலங்குகின்றனர்.

அடுத்ததாக ஈஸ்வரி இனியா செழியன் என அனைவரும் பற்றியும் பேசிவிட்டு ப்ரொடியூசர், டெக்னீசியன் என அனைவருக்கும் நன்றி தெரிவித்த உட்கார்ந்து விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஆடியோ ரிலீஸ் செய்து விட எழில் அனைவருக்கும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் ராதிகாவும் பாக்யாவும் ஜூஸ் குடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க ராதிகா பாக்கியாவிடம் இது எழிலுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட்டா இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்க ஆமாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் கோபி வர பாக்கியா என்ன சொல்லுகிறார்? ராதிகா இடம் கோபி பேசுகிறாரா? ஈஸ்வரி பாக்யாவிடம் என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Baakiyalakshimi serial episode update 12-02-25
jothika lakshu

Recent Posts

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…

3 hours ago

இட்லி கடை: 1 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

3 hours ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி.!!

கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…

3 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

4 hours ago

அருணிடம் விஷயத்தை சொன்ன சீதா.. முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…

6 hours ago

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

23 hours ago