கோபி எடுத்த அதிரடி முடிவு. எழில் சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா வீட்டுக்கு வந்த கோபி இந்த வீட்டை விற்க போவதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஈஸ்வரி வீட்ட வித்தா நாங்க எல்லாம் எங்க போறது என கேட்க உங்களுக்கு நான் இருக்கேனா உங்கள நான் நல்லபடியா பாத்துக்குவேன் என சொல்ல ஈஸ்வரி நடக்கிற விஷயமா பேசு என சொல்கிறார். உனக்கு மனசாட்சியே இல்லையா என ராமமூர்த்தி சொல்ல உங்களுக்கு மனசாட்சி இருக்குல்ல அது போதும் என நக்கல் அடிக்கிறார்.

இந்த வீடு என் பேர்ல தான இருக்கு நான் வித்தா நீங்க என்ன கேசா போட போறீங்க என நான் இந்த வீட்டை விக்கிறது உறுதி வேண்டும் என்றால் நீங்கள் இதை வீட்டை வாங்கிக்கோங்க என சொல்கிறார். பிறகு பாக்கியாவ பார்த்து அடுத்தவன் சொத்தை ஆட்டைய போடலாம் என்று நினைத்தல அது நடக்காது, நடக்க விடமாட்டேன்.

ஒரு மாசம் டைம் அதுக்குள்ள இந்த வீட்டுக்கான மொத்த பணத்தையும் கொடுத்துட்டு இந்த வீட்டை உன் பெயருக்கு மாத்திக்கோ நீ போர்டு வை, பெரிய பேனர் அத பத்தி யாரும் கேட்க போறது கிடையாது. ஆனால் ஒரு மாதம் தான் டைம், முடிஞ்சா பணத்தை கொடுத்து வீட்டை வாங்கு இல்லன்னா வீட்டை காலி பண்ணிக்கிட்டு போயிட்டே இரு என சொல்கிறார்.

இதையெல்லாம் கேட்ட எழில் நீங்க சொல்ற மாதிரி ஒரு மாசத்துல இந்த வீட்டை நாங்களே வாங்கிக்கிறோம் என சவால் விடுகிறார். உடனே கோபி நான் வாங்கும் போது செலவான பணத்தை கொடுக்கக் கூடாது இன்னையோட மார்க்கெட் ரேட் ஒரு கோடி ரூபாய் கொடுக்கணும் என சொல்கிறார். ராமமூர்த்தி இதுல என் பங்கும் இருக்கு என்ன சொல்ல கரெக்ட் நீங்க கொடுத்த பங்கு 30% போக மீதி எனக்கு 70 லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு இந்த வீட்டை வாங்கிக்கோங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.

நீங்க சொன்ன மாதிரி ஒரு மாசத்துல இந்த வீட்டை வாங்கிக்கிறோம் என எழில் சவால் விட கோபி கிளம்பி செல்கிறார். ராதிகாவிடம் நடந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்க ராமமூர்த்தி நீ நல்லாவே இருக்க மாட்ட என சாபம் விட ராதிகா அவரும் எவ்வளவு நாள் தான் பொறுமையா இருப்பாரு அவர் உங்களையும் பொண்ணையும் நல்லாத்தான் பார்க்கிறார், அதே மாதிரி அந்த குடும்பத்தையும் நல்லா தான் பார்த்துக்கிட்டு இருந்திருப்பார். கடவுள் எல்லாத்தையும் பாத்துட்டு தானே இருக்காரு என சொல்கிறார்.

அதன் பிறகு ஈஸ்வரி எழிலை திட்டி தீர்க்க பாக்யா ஞாயமே இல்லாம யார் பண்ண தப்புக்கு யாரை திட்டிக்கிட்டு இருக்கீங்க அத்தை என கேள்வி கேட்கிறார். உருப்படாத புள்ள அவனுக்கு சப்போர்ட் பண்ற அம்மா என்னமோ போங்க என திட்டிவிட்டு உள்ளே செல்கிறார். பிறகு பாக்கியா எழிலுக்கு ஆறுதல் கூறுகிறார்.

செழியன் மேலே மொபைல் போனில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்க அங்கு வரும் ஜெனி இந்த வீட்டுக்கு நீ என்ன பண்ண போற என சொல்ல நான் என்ன பண்ணனும் நான் வச்சுட்டு இருக்க பணத்தை எல்லாம் தூக்கி அப்பா கிட்ட கொடுக்க நான் என்ன இளிச்சவாயனா என சொல்ல ஜெனி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

1 day ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

1 day ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

2 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

2 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

2 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

2 days ago