ராஜியை மிரட்டிய கண்ணன். ஜோசப் செய்த வேலை. இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா மற்றும் கோமதி குடும்பத்தினர் மீண்டும் ஹோட்டலில் சந்தித்துக்கொள்ள கதிரும் எழிலும் முறைத்துக் கொண்டு பிரிந்து செல்கின்றனர்‌. அதன் பிறகு இங்கே வீட்டில் கோபி ஊருக்கு கிளம்புவதாக சொல்ல ஈஸ்வரி போயிட்டு வாப்பா ஒன்னும் பிரச்சனை இல்ல என கூறுகிறார்.

இனியா வீட்டுல போரடிக்கும் என்று சொல்ல ராதிகா நீ எங்களோட வா என்று கூப்பிட இனியாவும் ஓகே சொல்லி அவர்களுடன் கிளம்பி குன்னக்குடி வருகிறார். இங்கே குன்னக்குடியில் ராஜி கல்யாணத்தை நினைத்து வருத்தத்தோடு இருக்க கண்ணன் போன் போட்டு வெளியே வர சொல்லி வீட்டில் பேசி இல்லனா என் கூட கிளம்பி வா என மிரட்டுகிறார்.

மேலும் நீ என்னை ஏமாற்றலாம்னு நெனச்ச லெட்டர் எழுதி வைத்துவிட்டு செத்துப் போயிடுவேன் என மிரட்டி அங்கிருந்து கிளம்பி செல்கிறார். அதைத்தொடர்ந்து மீனா செந்திலுக்கு போன் போட்டு பேசிக் கொண்டிருக்க கோமதி அவரை தேடி வெளியே வருகிறார்.

நிலா பாப்பா ஓடி வர மீனா குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு ரூமுக்கு செல்கிறார். பாக்யா அமைச்சரை சந்திக்க அவர் பெரிய பெரிய அமைச்சர் எல்லாம் வராங்க முடிஞ்சா முதலமைச்சர் கூட வருவாரு அதனால நல்லா சமைக்கணும் என கூறுகிறார். உங்களுக்கு உதவிய இந்த ஊர் பெண்கள் சிலரை ஏற்பாடு பண்ணி இருக்கேன் என சொல்ல பிறகு அந்த பெண்கள் வருகின்றனர்.

அவர்களுக்கு வீட்டில் சமைப்பதை தவிர வேறு எங்கும் சமைத்து பழக்கம் இல்லை என தெரிய வர பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறார். இருந்தாலும் வந்துட்டோம் எதுவாக இருந்தாலும் சமாளித்து தான் ஆக வேண்டும் என முடிவெடுக்கிறார்.

அடுத்து கோபி ராதிகா இனியா குன்னக்குடி வர ராதிகாவின் அண்ணன்கள் கோபியை போட்டு வாங்க மச்சான் என உலுக்கி எடுக்கின்றனர். ராஜி டல்லாக இருப்பதை பார்த்து உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் தானே என ராதிகா கேட்க அவரது அண்ணன்கள் நம்பள விட பெரிய வீட்டு சம்பந்தம் அப்புறம் சம்பந்தமில்லாமல் இருக்குமா என சொல்கின்றனர்.

பிறகு ஜோசப் தேடி வந்து குழந்தைக்கு பேர் வைக்க போற விஷயத்தை சொல்லி பத்திரிகையை கையில் கொடுப்பது போல கீழே வைத்து அவமானப்படுத்தி இதே கோபத்தோட இருங்க, கோபம் தணிந்து பங்க்ஷனுக்கு வந்துடாதீங்க என சொல்லி கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi and Pandian stores mega sangamam episode
jothika lakshu

Recent Posts

கருப்பட்டி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

4 hours ago

நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்த நினைக்கும் மாதவி, சூர்யா கொடுத்த ஷாக், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

விஜய் சேதுபதியிடம் கம்ப்ளைன்ட் பண்ண வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

7 hours ago

பைசன்: 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

9 hours ago

பேச வந்த கம்ருதீன்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…

9 hours ago

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, போட்டியாளர்களின் பதில் என்ன? வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

9 hours ago