அழகிய கண்ணே திரை விமர்சனம்

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்ளும் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்த கதை.

அழகிய கண்ணே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் திரைத்துறையில் இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் லியோ சிவகுமார் வாழ்ந்து வருகிறார். இவர் சமூக பிரச்சினைகளை நாடகங்களாக மக்களுக்கு போட்டு வருகிறார். லியோ சிவகுமார், தன் வீட்டிற்கு எதிரில் வசித்து வரும் சஞ்சிதா ஷெட்டி மீது காதல் கொள்கிறார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மந்தம் தெரிவிக்க சஞ்சிதா ஷெட்டியின் சித்தி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவரின் தம்பியை சஞ்சிதாவுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததால் அவர் கோபமடைகிறார். இதனிடையில் இதனை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது.லியோ சிவகுமாரும் இயக்குனர் ஆகும் கனவில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

இறுதியில் லியோ சிவாகுமார் ஆசைப்படி இயக்குனர் ஆனாரா? எதிர்ப்பை மீறி திருமணம் செய்தவர்களை அவர்கள் என்ன செய்தார்கள்? அதிலிருந்து இவர்கள் எப்படி தப்பித்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகன் லியோ சிவகுமார் புதுமுக நடிகர் என்ற எண்ணம் தோன்றாதது போன்று நடிப்பை கொடுத்துள்ளார். இயல்பான நடிப்பால் அனைவரையும் லியோ சிவகுமார் கவர்ந்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி காதலி, அழகான மனைவி என நடிப்பில் வித்யாசம் காட்டி கவனம் பெறுகிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரபு சாலமன் மற்றும் விஜய் சேதுபதி படத்தில் இருந்ததால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இருவரையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. இவர்களின் கதாப்பாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் தோன்றிய பழைய கதையை காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆர்.விஜயகுமார். திரைக்கதையில் பிடிப்பு இல்லை. குழந்தை பிறந்ததற்கு பிறகு பழிவாங்க தேடினாலும் அதனை சம்மந்தமே இல்லாமல் இறுதியில் மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது.

கதையை விட்டு திரைக்கதை விலகி சென்றிருப்பது படத்திற்கு பெரிய பாதிப்பு. இருந்தும் குழந்தையை பார்த்துக் கொள்ள வரும் மூதாட்டிக்கும் குழந்தைக்குமான காட்சிகளை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளார். இந்த மார்டன் சமூகத்தில் குழந்தையை தாய் வளர்க்க வேண்டும் என்பதை இந்த சில காட்சிகள் உணர்த்துகிறது.

ஒளிப்பதிவாளர் அசோக் குமார் கொடுத்த வேலையை செய்து முடித்துள்ளார். கிராம வாழ்வியலை பின்னணி இசையின் மூலம் அழகாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.

மொத்தத்தில் அழகிய கண்ணே – அழகியல் குறைவு.

Azhagiya Kannae Movie Review
jothika lakshu

Recent Posts

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள்..!

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

2 hours ago

தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…

8 hours ago

மதராசி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

8 hours ago

சிம்பு 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்கள்.!!

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

8 hours ago

மனோஜ் சொன்ன வார்த்தை, மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

12 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சூர்யாவிடம் நந்தினி சொன்ன விஷயம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

12 hours ago