Latest Tamil cinema News
ஆன்மீகம்

சித்தர்கள் கூறும் அட்டமா சித்திகள் விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோமா?

▪ நமது முன்னோர்கள் சிலர் வியக்கத்தக்க சித்திகளை தங்களது முயற்சியால் அடைந்தார்கள். உடம்பே ஆலயம் உயிரே ஆண்டவன்’ என அறிந்துகொண்டதனால், `சித்தர்கள்’ ஆனார்கள்.

`உடம்பின் சூட்சுமங்களை அறிந்துகொண்டு, தவத்தாலும் தகுந்த மூலிகைகளைக் கொண்டும் அவர்கள் அட்டமா சித்திகளை அடைந்தார்கள்’ என சில நூல்கள் குறிப்பிடுகின்றன.

▪ அட்டமா சித்திகள் விளக்கம்:
1) அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2) மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.

3) இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4) கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5) பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.

6) பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்.

7) ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

8) வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

Related posts

சாமி கும்பிடும் போது கொட்டாவி வருகிறதா? ஏன் வருகிறது? தெரிந்து கொள்வோமா!

user

கிரகணத்தின்போது கோயில் நடை திறந்திருக்கக் கூடாது. காரணம் என்ன? தெரிந்து கொள்ளலாமா?

user

மகம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்

user